Site icon சக்கரம்

மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்

நடந்து முடிந்த இந்தியப் பொதுத்தேர்தலில் அமோக வெற்றிபெற்று மீண்டும் பிரதமராகப் போகும் நரேந்திர மோடியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வானாளவப் புகழ்ந்துள்ளார்.

“நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டது இந்திய மக்களின் அதிர்ஸ்டம்” எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், மோடியை ‘மாமனிதர்’, ‘மகத்தான மனிதர்’ எனவும் வர்ணித்திருக்கிறார். அத்துடன், மோடி தனது உற்ற, நெருங்கிய நண்பர் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், அமெரிக்காவின் பிரபல சஞ்சிகையான ‘ரைம்’ வெளியிட்ட மோடியின் அட்டைப்படத்துடனான ஒரு சிறப்பு மலரில், “மோடி இந்தியாவைப் பிளவுபடுத்துபவர்’ என வர்ணித்திருந்தது.

இந்த நிலையில் மோடியை ட்ரம்ப் புகழ்ந்திருப்பது, மோடி தொடர்ந்தும் செல்லப்போகும் பாதை எதுவென்பதை கோடிகாட்டுவதாக நோக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

Exit mobile version