Site icon சக்கரம்

இலங்கையின் பயங்கரவாத தாக்குதலின் பின்னால் ஐ.எஸ். அமைப்பு இருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஹக்கீம்!

லங்கையில் ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னால் ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) என்ற அமைப்பு இருந்துள்ளதாகத் தாம் கருதவில்லை என முஸ்லீம் காங்கிரசின் தலைவரும். முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார்.

கண்டி தலாத்துஓயாவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த ஹக்கீம், இந்தத் தாக்குதலின் பின்னால் இனந்தெரியாத சக்தி (Invisible) ஒன்று செயல்பட்டுள்ளதாகவும், முறையான விசாரணை மூலம் அந்தச் சக்தியைக் கண்டறிய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஹக்கீமின் இந்தக் கருத்து இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னால் ஐ.எஸ். அமைப்பே இருந்துள்ளது என்ற பொதுவான கருத்தை நிராகரிப்பவர்களின் நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்ப்பதாகவும், ஐ.எஸ். அமைப்புக்கும் அப்பால் வேறு ஒரு பெரிய சக்தி செயல்பட்டுள்ளது என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளதாகப் பலரும் கருதுகின்றனர்.

Exit mobile version