சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் நேற்று (26.09.2019) தனது 75ஆவது வயதில் நேற்று காலமானார்.
1944 ஆம் ஆண்டு பிறந்த தில்லைநாதன் வீரகேசரி பத்திரிகையின் ஊடாக தனது ஊடக பயணத்தை ஆரம்பித்தவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவிலும் தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளதுடன் 50 ஆண்டுகளுக்கு மேல் ஊடகத்துறையில் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் தினபதி,சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளிலும் கடமையாற்றியுள்ள இவரது சேவையைப் பாராட்டி, இலங்கைப் பத்திரிகைப் பேரவை “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பல்வேறு ஊடகங்களிலும் பணியாற்றிய காலம் சென்ற தில்லைநாதன் இலங்கை பத்திரிகை பேரவையின் தணிக்கை பிரிவிலும் கடமையாற்றியுள்ளார்.