ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்றமைக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதைப் பற்றி யாரும் கதைக்க முன் வருவதில்லை. கதைப்பதற்கு பயப்படுகின்றனர். ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கிய போது, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் சீனாவுக்கு வழங்க வேண்டாம் என எச்சரித்தது. ஏனெனில் ஹம்பாந்தோட்டை அரசியல் ரீதியில், பூகோள ரீதியில் முக்கியமான இடமாகும். சீனா ஹம்பாந்தோட்டையில் கால் பதித்ததால் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன இங்கு கால் பதிக்க பார்க்கின்றனர் என்றார்.