எதிர்காலச் சந்ததியினருக்காக சிறந்ததொரு நாட்டை உருவாக்கும் முயற்சிகளுக்கு வெலிக்கடைச் சிறைச்சாலையே பிரதான இடையூறாக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
மினுவாங்கொடவில் பாடசாலை நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர் மேலும் கூறுகையில்:
அண்மையில் கடற்படையினரால் 270 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதுபற்றிய விசாரணைகளின் போது இந்த போதைப்பொருள் பரிவர்த்தனை வெலிக்கடை சிறைச்சாiயிலிருந்தே மேற்கொள்ளப்படுவதாகத் தெரிய வந்துள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனத் தெரிவித்துள்ளார்.