2005 ஆம் ஆண்டு, கொலை செய்யப்பட்ட, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்கு உதவி செய்ததாகக் கூறப்படும், முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக, ஜேர்மன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய அந்நாட்டு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜீ.நவநீதன் என்ற சந்தேகநபர் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் உறுப்பினர் என்றும், லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்குத் தேவையான புலனாய்வு தகவல்களை சேகரித்தவர் இவரென்றும் உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் ஜேர்மனியில் தங்கியிருந்த போது, கடந்த ஜனவரி மாதம் ஜேர்மன் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, இவர் ஜேர்மனிக்கு தப்பிச் சென்றுள்ளாரென்றும் புலிகள் அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகள் சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல குறித்த நபர் உதவி செய்துள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
-தமிழ் மிரர்
ஜுலை 25, 2019