Site icon சக்கரம்

நவம்பர் 16ந் திகதி இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

இலங்கை 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (புதன்கிழமை, செப்டம்பர் 18) வெளியிட்டது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது.

முன்னதாக, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டது.

அதேபோல், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த 11ஆம் தேதி பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரை அறிவித்திருந்தது.

-பிபிசி
செப்டம்பர் 18, 2019

Exit mobile version