எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.
இதன் அடிப்படையில், எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
29 ஆசனங்களைக் கொண்ட எல்பிட்டிய பிரதேச சபையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. 23,372 வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 10,113 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5273 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 2435 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
இதற்கமைய, எல்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமாகியுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த தேர்தலில் 53,384 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 5 கட்சிகளை சேர்ந்த 155 வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன், அவர்களிலிருந்து 28 பேர் தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாக்கெண்ணும் நடவடிக்கைகள் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டதுடன், எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்திலிருந்து இறுதி முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.