தொற்று நோய்களுக்கான உலகளாவிய எதிர்வினையாற்றுதல் சுட்டெண்ணில் (Global Response to Infectious Diseases – GRID)இலங்கை மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் 9 வது இடத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்று நோயைக் கையாள்வதில் நாட்டின் தலைமைத்துவமும் அதனது சுகாதார அமைப்பின் தயார் நிலையும் எவ்வளவு திறமையானதாகவும் வினைத்திறனுள்ளதாவும் இருக்கின்றதென மதிப்பிடுவதற்கு ‘கிரிட்’ சுட்டெண் (GRID Index) வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள், அத்தாட்சி பெற்ற முகாமைத்துவ கணக்காளர்கள் என்ற ஆஸ்திரேலியா நிறுவனம் (Institute of Certified Management Accountants – CMA, சி.எம்.ஏ) வழங்கிய கோவிட்-19 நெருக்கடியில் உலகளாவிய தலைமைத்துவ எதிர்வினையாற்றுதலை கண்காணித்தல் ‘கிரிட்-ரீஎம்’ சுட்டெண் (GRIDTM Index :Tracking the Global Leadership Response in the COVID-19 Crisis) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
கீழேயுள்ள அட்டவணையில் உலக நாடுகளுக்குரிய 2020 ஆம் ஆண்டின் தொற்று நோய்களுக்கான உலகளாவிய எதிர்வினையாற்றுதல் GRID சுட்டெண் தரவரிசை, 2019 ஆம் ஆண்டின் ஊழல் மலிவு (Corruption Perceptions Index – CPI) சுட்டெண் தரவரிசையுடன் இணைத்துத் தரப்பட்டுள்ளது.