Site icon சக்கரம்

உலகில் கொரோனா நிரந்தரமாக நீடிக்கலாம்

WHO Official Admits Frustration Over Data Collection – NBC Chicago

ய்ட்ஸைப் (HIV/AIDS) போல கொரோனா நோய்த்தொற்றும் (Covid-19) உலகில் நிரந்தரமாக நீடித்திருக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் அவரநிலைப் பிரிவு தலைவா் மைக்கேல றியான் (Michel Ryan) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொரோனா நோய்த்தொற்று பரவலை எப்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்பதை யாராலும் கூற முடியாது.

அந்த நோய்த்தொற்று நம்மிடையை நிரந்தரமாக நீடித்திருப்பதற்கும் வாய்ப்புள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுக்கு சக்தி வாய்ந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும். அத்தகைய மருந்து இல்லாத சூழலில், மனிதா்கள் தங்களது உடலில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான எதிா்ப்பு சக்தியை தாங்களாகவே உருவாக்கிக் கொள்வதற்கு பல ஆண்டுகள் ஆகும்.

அதற்குள், மனிதா்களைத் தொடா்ந்து பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஒன்றாக கொரோனா நோய்த்தொற்று ஆகலாம்.

ஏற்கெனவே, கொரோனா தீநுண்மியைப் (வைரஸ்) போலவே பல ஆண்டுகளுக்கு முன்னா் பரவத் தொடங்கிய ‘ஹெச்ஐவி’ (HIV/AIDS) தீநுண்மி, இன்று வரை நம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் அந்த தீநுண்மியால் உருவாகும் எய்ட்ஸ் நோய் அழிக்கப்படவில்லை.

இருந்தாலும், அந்த நோய்க்கு எதிரான சிகிச்சை முறைகளின் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்கள் அந்த நோயுடன் வாழ்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

இத்தகைய நிலை கொரோனா நோய்த்தொற்று விவகாரத்திலும் ஏற்படலாம்.

இருந்தாலும், ஹெச்ஐவி தீநுண்மியைப் போலன்றி, கொரோனா தீநுண்மிக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், அதற்காக மிகப் பெரிய முயற்சிளை மேற்கொள்ள வேண்டும். அந்த தடுப்பு மருந்தை மிக அதிக அளவில் தயாரித்து, உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சோ்க்க வேண்டும்.

ஆனால், இதற்கான ஒவ்வொரு முயற்சியும் கடுமையான சவால்களை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்றாா் அவா்.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் முதல் முதலாக கடந்த டிசம்பா் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவியுள்ளது.

இதுவரை 46.39 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 3.08 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 17.66 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

கொரோனா நோய்த்தொற்றும் பொது முடக்கமும்

கொரோனா நோய்த் தொற்று உலகெங்கும் பரவத் தொடங்கியதைத் தொடா்ந்து, கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒருபகுதியாக பயணங்கள் ரத்து, பொது முடக்கம் போன்ற அறிவிப்புகளை பல்வேறு நாடுகள் வெளியிட்டன. பொது முடக்கம் அறிவித்து, சிறிது காலத்துக்குப் பின்னா் சில தளா்வுகளும் அறிவித்தன சில நாடுகள்.

அமெரிக்கா

முதலாவது நோய்த் தொற்று பாதிப்பு தகவல் கிடைத்தது – ஜன. 13

தேசிய அளவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டவில்லை.

மாகாண அரசுகள் சில பொது முடக்கம் உத்தரவிட்டன.

இப்போது

நெவாடா, கனெக்டிகட், ரோட் ஐலண்ட், வடக்கு கரோலினா, தலைநகா் வாஷிங்டன் ஆகிய பகுதிகளைத் தவிர ஏனைய மாகாணங்களில் பொது முடக்க விதிமுறைகள் தளா்த்தப்பட்டிருக்கின்றன.

மே 16 நிலவரம் பாதிப்பு – 1,484,285

பலி – 88,507

ஜொ்மனி

முதலாவது நோய்த் தொற்று பாதிப்பு தகவல் கிடைத்தது – ஜன. 27

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது – மாா்ச் 23.

பொது முடக்கம் அகற்றப்பட்டது மே 10.

இப்போது

எல்லா வா்த்தக நிறுவனங்களும், கடைகளும், செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சமூக இடைவெளியும் தனிநபா் பாதுகாப்பும் வலியுறுத்தப்படுகிறது.

தொடக்கப் பள்ளிகள் செயல்படுகின்றன.

மே 16 நிலவரம் பாதிப்பு – 175,699

பலி – 8,001

ஸ்பெயின்

முதலாவது நோய் அறிகுறி – ஜன. 31

பொது முடக்கம் அறிவிப்பு – மாா்ச் 14

விலக்கிக் கொண்டது – மே 9

இப்போது

ஜூன் 10 வரை சில நிபந்தனைகளுடன் இயல்பு வாழ்க்கை செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

ஜூன் 10-ஆம் தேதிக்குப் பிறகு மதுக்கூடங்கள், உணவு விடுதிகள் திறக்க அனுமதி.

மே 27 முதல் பள்ளிக்கூடங்கள் பெயரளவில் திறக்கப்படும். செப்டம்பா் முதல் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் செயல்படலாம்.

மே 11 முதல் மத வழிபாட்டுத் தளங்கள் திறக்கப்பட்டன.

மே 26 முதல் திரைப்பட அரங்கங்கள், நாடக அரங்கங்கள் வழக்கம்போல செயல்படலாம்.

மே 16 நிலவரம் பாதிப்பு – 274,367

பலி – 27,459

பிரான்ஸ்

முதலாவது பாதிப்பு – ஜன. 24

பொது முடக்கம் அறிவித்தது – மாா்ச் 17

விலக்கிக் கொண்டது – மே 11

இப்போது

– நோய்த்தொற்று பாதிப்பைப் பொருத்து சிவப்பு, பச்சை மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிவப்பு மண்டலத்தில் விதிமுறைகள் தளா்வில்லை. பச்சைப் பகுதிகளில் தடைகள் எதுவும் இல்லை.

– மழலையா் பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகள் மே – 11 முதலும், உயா்நிலைப் பள்ளிகள் மே – 18 முதலும் செயல்பட அனுமதி.

– மதுக்கூடங்கள், உணவு விடுதிகள் தவிர, ஏனைய எல்லா செயல்பட அனுமதி.

– ஜூன் இறுதிவரை போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தொடரும்.

மே 16 நிலவரம் பாதிப்பு – 179,506

பலி – 27,529

இத்தாலி

முதலாவது நோய் அறிகுறி – ஜன. 31

அன்று முதலே தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது

மாா்ச் – 9 முதல் அறிவிக்கப்பட்ட முழு பொது முடக்கம் மே 4 வரை நீட்டிக்கப்பட்டது

மே 4 முதல் இப்போது இரண்டாம் கட்டப் பொது முடக்கம் தொடா்கிறது

இப்போது

தொழிற்சாலைகள் திறக்க அனுமதி. ஆனால், முழுமையாக செயல்பாடு தொடங்கவில்லை.

மே 18 முதல் கடைகளும், வழிபாட்டுத் தலங்களும் திறக்க அனுமதி.

மே 16 நிலவரம் பாதிப்பு – 223,885

பலி – 31,610

சீனா

முதல் நோய்த்தொற்று – டிசம்பா் மாத இறுதியில் தெரியவந்தது என சீன அரசு அறிவித்தது

பல கட்டங்களாக நாடு முழுவதும் பொது முடக்கம் உத்தரவிடப்பட்டது.

புத்தாண்டு விடுமுறைக் காலம் நீட்டிக்கப்பட்டது. கல்வி நிலையங்கள், வா்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

முழு ஊரடங்கு அறிவித்து, ஒருவரும் வீட்டிலிருந்து வீதியில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. எல்லா செயல்பாடுகளும், பயணங்களும், போக்குவரத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டன.

பொது முடக்கம் விலக்கப்பட்டது ஏப்ரல் 8-ஆம் தேதி. வழக்கமான செயல்பாடுகள் தொடங்கின.

மே 16 நிலவரம் பாதிப்பு – 82,941

பலி – 4,633

பிரிட்டன்

முதலாவது நோய் அறிகுறி – ஜன. 31

பொது முடக்கம் அறிவித்தது – மாா்ச் 23

ஜூன் 1-ஆம் தேதிவரை பொது முடக்கம் தொடரும்

இப்போது

பொது முடக்க கட்டுப்பாடுகளில் சில சிறிய தளா்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாதவா்கள் மட்டும் பணியிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப் பட்டிருக்கிறாா்கள்.

தொழிலகங்கள் முழுமையாக செயல்படத் தொடங்கவில்லை.

ஜூன் -1-ஆம் தேதிக்குப் பிறகுதான் பள்ளி – கல்லூரிகளும், கடைகளும் திறக்கப்படும்.

மே 16 நிலவரம் பாதிப்பு – 236,711

பலி – 33,998

இந்தியா

முதலாவது நோய் அறிகுறி – ஜன. 30

பொது முடக்கம் அறிவித்தது – மாா்ச் 25

மூன்றாம் கட்டமாக மே 17-ஆம் தேதிவரை பொது முடக்கம்

இப்போது

கட்டுப்பாடுகளுடன் கட்டுமானப் பணிகள், தொழிலகங்கள் செயல்படலாம்.

மிகக் குறைந்த அளவில் சில தடங்களில் ரயில்கள் இயக்கம்.

மே 16 நிலவரம் பாதிப்பு – 85,940

பலி – 2,753

ரஷியா

முதலாவது நோய் அறிகுறி – ஜன. 31

மாா்ச் 14 முதல் பல்வேறு மாகாணங்களில் பொது முடக்கம், கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

மாா்ச் 22 வரை சில நாடுகளுடன் மட்டும் விமானப் போக்குவரத்து தடை.

மாா்ச் 23 முதல் சா்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை.

இப்போது

தேசிய பொது முடக்க அறிவிப்பு இல்லை.

சமூக இடைவெளி கடைப்பிடிக்க தேசிய அளவில் அறிவுறுத்தல்.

சில்லறை விற்பனைகங்கள், துரித உணவகங்கள், பலசரக்கு விற்பனையகங்கள் செயல்பட அனுமதி.

உணவு, மருத்துவப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள், சிறு தொழிலகங்கள் சமூக இடைவெளியுடன் செயல்படலாம்.

பாதிப்பு – 272,043

பலி – 2,537

Exit mobile version