Site icon சக்கரம்

ஆப்கானிஸ்தான், ஈராக்கில் மக்கள் உயிரிழக்கும் போது அமைதி காத்தது ஏன்? – மேற்கத்திய நாடுகளுக்கு சீனா கேள்வி

Zhao Lijian

ப்கானிஸ்தான், ஈராக்கில் போர் காரணமாக பொது மக்கள் உயிரிழக்கும் போது  அமைதி காத்தது ஏன் என மேற்கத்திய நாடுகளுக்கு சீனா கேள்வி எழுப்பியுள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் விதமாக சீனா,  இதனை தெரிவித்துள்ளது.

மேலும், ரஷ்ய படையெடுப்பை வெளிப்படையாக கண்டிக்க சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஒரு  ‘போர் குற்றவாளி’ என்ற  அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் கருத்துடன் சீனா உடன்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள  சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் (Zhao Lijian), “அமெரிக்கா, நேட்டோ மற்றும் சில மேற்கத்திய ஊடகங்கள் மிகவும்  சந்தர்பாவதமானவை” என தெரிவித்துள்ளார்.

மேலும், “அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான சீனாவின் நிலைப்பாடு நிலையானது  என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம்  மற்றும் இஸ்ரேல் விவகாரங்களில் சீனாவின் கடந்தகால  அறிக்கைகளைப்  பார்த்து  தெரிந்து  கொள்ளுங்கள்.” என கூறியுள்ளார்.

“பொதுமக்களின் உயிரிழப்புகள் மற்றும் மனிதாபிமான செயல்கள் என்று வரும் போது, ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாலஸ்தீன மக்களை பற்றி சமமாக நீங்கள்  அக்கறை கொண்டிருந்தீர்களா என்று என்னும்போது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.இந்த மக்கள் உங்களுக்கு ஒரு பொருட்டில்லையா?. 1999 இல் செர்பியா அல்லது யூகோஸ்லாவியாவை மறந்துவிடாதீர்கள்?. அந்த மக்களின் உயிரிழப்புகள் குறித்து அக்கறை காட்டினீர்களா?. இல்லை என்றால், சீனா மீது  குற்றச்சாட்டுகளை வைக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version