சீனாவின் கடன்பொறிகுறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ள கருத்துக்களை சீனா வரவேற்றுள்ளது.
சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜான் (Zhao Lijian) செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.
கேள்வி:- இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி சமீபத்தில் இலங்கை சீனாவிடம் சென்று நிதி உதவியை கோரியவேளை சீனா அதனை மதித்தது சீனா நிதியை பெற்றுக்கொள்ளுமாறு அழுத்தங்களை கொடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
சீனா இலங்கைக்கு சில நிதி உதவிகளையும் வழங்கியது கடன் உதவிகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கியது என அவர் தெரிவித்திருந்தார்.
கடன்பொறி என்பது மேற்குலக வார்த்தை பிரயோகம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்த சீனாவின் கருத்து என்ன?
பதில்:- நாங்கள் இலங்கை வெளிவிவாகர அமைச்சரின் கருத்தை வரவேற்கின்றோம்,
இலங்கையில் சீனாவின் ‘கடன்பொறி’ (Debt Trap) என பயன்படுத்தப்படும் சொல்லடாலை வலுவாக நிராகரிக்கும் கருத்து இதுவாகும்.
இலங்கைக்கான சீனாவிற்கான உதவிகள் ஒருபோதும் அரசியல் நிபந்தனைகளை கொண்டிருக்கவில்லை என்பதை நான் வலியுறுத்துகின்றேன்.
இலங்கையில் முதலீடு மற்றும் நிதி உதவி தொடர்பான விடயங்களில் நாங்கள் எப்போதும் சுயநலத்துடன் செயற்படவில்லை.
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் மற்றும் சவால்களை சீனா முழுமையாக புரிந்துகொண்டுள்ளது இந்த பிரச்சினைகளை உரிய விதத்தில் தீர்ப்பது குறித்து உரிய நிதி அமைப்புகளிற்கு ஆதரவை வழங்குகின்றது.
எங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் நாங்கள் இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு உதவி வழங்கி வந்துள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.