Site icon சக்கரம்

புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

லங்கை புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (18.11.2024) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக  ஜனாதிபதி முன்னிலையில்  பதவியேற்றுக் கொண்டார்.

  1. பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
  2. விஜித ஹேரத் – வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக  பதவியேற்றுக் கொண்டார்.
  3. பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாகம், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
  4. பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  5. சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  6. கே.டி.லால்காந்த – விவசாயம், கால்நடை, நீர்ப்பாசனம், காணி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  7. அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  8. இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  9. பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  10. சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  11. ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  12. பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக, சிவில் விமான சேவை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  13. பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  14. சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட, சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 
  15. நளிந்த ஜெயதிஸ்ஸ – சுகாதாரம், ஊடகம்  அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  16. சுனில் குமார கமகே – இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை  அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  17. வசந்த சமரசிங்க – வர்த்தக , வாணிப, உணவுப்பாதுகாப்பு, கூட்டுறவு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  18. பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன – விஞ்ஞானம், தொழிநுட்பம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  19. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  20. குமார ஜெயக்கொடி – வலுசக்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  21. தம்மிக்க பட்டபெந்தி – சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கையில் பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஆற்றிய உரையில் ஜனாதிபதி,

“இலங்கையின் அரசியல் கலாச்சாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது.

“இருப்பினும், பிளவுபடுத்தும் அரசியல் இனியும் ஆட்சி செய்யாது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. இது அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் வெற்றிகரமாக ஒரே மையத்திற்கு கொண்டு வந்துள்ளது,” என்றார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், இலங்கை புலம்பெயர்ந்தோர் மற்றும் இளம் சமூக ஊடக ஆர்வலர்கள் தேர்தலின் போது ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் ஆதரவினையும் மேற்கோள் காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அதிக அதிகாரங்கள் இருப்பதாகக் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அனைத்து அமைச்சர்களும் தமது அதிகார வரம்புகளை அறிந்து பொறுப்புணர்வோடு செயற்படுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையில் உரையாற்றிய அவர், பெரும்பாலான அமைச்சர்கள் அமைச்சரவைக்கு மட்டுமல்ல, பாராளுமன்றத்திற்கும் புதியவர்கள்.

அவர்கள் அனைவரும் நேர்மையானவர்கள், ஊழல் செய்யாதவர்கள் என்பதை தாம் நன்கு அறிவதாகவும், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தைரியம் அவர்களுக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு 146 புதிய முகங்கள்

இலங்கையில் இடம்பெற்ற பொதுத்தேர்தல் வரலாற்று ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 196 பாராளுமன்ற உறுப்பினர்களில் 146 பேர் புதியவர்கள். அதாவது பாராளுமன்றத்தில் முதல் முறையாக பிரதிநிதிகளாக உள்ளனர்.

நவம்பர் 14 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் 141 பாராளுமன்ற ஆசனங்களை பெற்று தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றியை பதிவு செய்திருந்தது. இவர்களில் 130 எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு புதியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version