Site icon சக்கரம்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

Image result for social media ban sri lanka

வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவிய தேவையற்ற சமூக பதற்றத்தை உருவாக்கும் தகவல்களால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், இலங்கையில் சில பகுதிகளில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களில் தற்கொலப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைப்பட்டனர்.

இலங்கை முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து இலங்கை மெல்ல மீண்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபத்தில் கலவரம் வெடித்தது. சமூக வலைத்தளத்தில் வெளியான வெறுப்பை விதைக்கும் பதிவால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இன்று(மே 13) வரை அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பட்டது.

இந்த நிலையில், பதற்றம் காரணமாக இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்கி வைக்க இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

ஏற்கனவே, இலங்கையில் நடந்த கோரமான குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கை முழுவதும் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட வலைத்தளங்கள் சில நாட்கள் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-தினமலர், 13.05.2019

வடமேல் மாகாணத்தில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு

டமேல் மாகாணத்தில் உடனடியாக அமுலாகும் வகையில் காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

மறுஅறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் குளியாப்பிட்டி நகரின் சில வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்றைய தினமும் குளியாப்பிட்டி நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மீது கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட தீவிரநிலை ஏனைய பகுதிகளுக்கும் பரவாதிருக்கும் வகையில், வடமேல் மாகாணம் முழுவதும் உடனடியாக அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Exit mobile version