Site icon சக்கரம்

அதிர்ச்சியில் உறையும் அமைதி

Related image

ம்மு- காஷ்மீர் மாநிலத்தை சிதைத்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்த தோடு, அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்தது தங்களது மிகப் பெரிய சாதனை என்பதுபோல் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜோடி தம்பட்டம் அடித்துக் கொண்டபோதும் அங்கு நிலைமை சீராக இல்லை என்பதையே அடுத்தடுத்து வெளி யாகும் தகவல்கள் உறுதி செய்கின்றன.  பாஜகவிடம் விலைபோய்விட்ட பெரும்பா லான ஊடகங்கள் உண்மைக்கு மாறான செய்தி களை பரப்பி வருகின்றன. ஆனால் உண்மை நிலை வேறாக உள்ளது. 

ஜம்மு- காஷ்மீர் பகுதியே ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போல மாற்றப்பட்டிருக்கிறது. பாது காப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப் பட்டுள்ளனர். நான்காயிரத்திற்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். அங்குள்ள சிறைகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் பக்கத்து மாநிலங்களில் கொண்டு போய் அடைத்துள்ள னர். முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்ட தலை வர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இணைய வசதி தொடர்ந்து முடக்கப்பட்டி ருப்பதால் வெளியுலகோடு அந்த மக்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஜம்மு-  காஷ்மீர் பகுதிக்குள் நுழைவது தடை செய்யப் பட்டிருக்கிறது. மருத்துவம் போன்ற அத்தியா வசிய தேவைகளை கூட அந்த மக்களால் நிறை வேற்றிக் கொள்ள முடியவில்லை. இந்த லட்ச ணத்தில் அங்கு அமைதி திரும்பிக் கொண்டி ருப்பதாக சில ஊடகங்கள் அலறுவது அநாகரிக மானது.

உச்சநீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதி யின் அடிப்படையில் பெயரளவுக்கு சில பகுதி களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலை யில் பெருமளவு வன்முறை வெடித்துள்ளது. சில பகுதிகளில் தரப்பட்ட இணைய இணைப்பும் உட னடியாக துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநில நிர்வாகம் முற்றிலும் முடக்கப் பட்ட நிலையில் பாதுகாப்புப் படையினரின் கையில்தான் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டுள் ளது. யாரை வேண்டுமானாலும் கைது செய்வது, தாக்குதல் தொடுப்பது, போர்க் காலங்களில் கூட பயன்படுத்தக்கூடாத ஆயுதங்களை பயன்படுத்து வது என மிகப் பெரும் அளவுக்கு அட்டூழியங்களும், மனித உரிமை மீறல்களும் நடந்துள்ளன.  துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாக குமுறும் அந்த மக்களிடம் ஒரு உரையாடல் நடத்தக்கூட மோடி அரசு தயாராக இல்லை. அடக்குமுறை யின் மூலமே அனைத்தையும் சாதித்து விட முடியும் என்று நினைப்பது மிகவும் ஆபத்தா னது. ஒரு ஜனநாயக நாட்டில் பின்பற்றப்பட வேண்டிய குறைந்தபட்ச நடைமுறைகள் கூட ஜம்மு- காஷ்மீர் விசயத்தில் மீறப்பட்டுள்ளன. தனக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக பீற்றிக் கொள் வதை விட எதார்த்த நிலைமையை கருத்தில் கொண்டு மோடி அரசு செயல்படுவதுதான் நாட்டுக்கு நல்லது.

-தீக்கதிர்
ஓகஸ்ட் 20, 2019

Exit mobile version