Site icon சக்கரம்

பழிவாங்கும் அரசியல் வேண்டாம்… பொருளாதாரத்தை மேம்படுத்த சிந்தனையுடன் செயல்படுங்கள்.. மன்மோகன் சிங் அதிரடி

-எஸ். புகழரசி

ந்திய பொருளாதாரம் குறித்தான அறிக்கைகள் மிக வேதனை அளிப்பதாக, முன்னாள் பொருளாதார நிபுனரும், நிதியமைச்சரும், பிரதமருமான, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மன்மோகன் சிங் தனது கருத்துகளை கூறியுள்ளார்.அதிலும் கடந்த காலாண்டில் 6 வருடங்களில் இலலாத அளவுக்கு படு வீழ்ச்சி கண்ட ஜி.டி.பி விகிதம் 5 சதவிகிதமாக குறைந்ததையும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதோடு இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு செயல்படுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மன்மோகன் சிங்

கேம்பிரிட்ஜ் பல்கழலைக் கழத்தில் பொருளாதாரவியல் படித்த மன்மோகன் சிங், ஆரம்ப காலத்தில், கல்லூரி பேராசிரியராகவும், பின்னர் சிறந்த பொருளாதார நிபுனருமாக இருந்தவர். இது தவிர நிதியமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்தவர். இது தவிர நிதியமைச்சராகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுனராகவும், இப்படி பல உயர் பதவிகளும், இதன் பின்னர் இந்தியாவின் பிரதமராக 2004லிருந்து 2014 வரை நீடித்தவர். இத்துணை அரிய தகுதிகளையும் கொண்டுள்ள ஒருவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி கவலை அளிக்கும் விதமாக உள்ளது என்று எச்சரித்துள்ளது, மிக கவலையான கவனிக்கப்படக் கூடிய ஒரு விஷயமாகவே இருக்கிறது.

இந்த வளர்ச்சி கவலை அளிக்கிறது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகுந்த கவலை அளிப்பதோடு, ஆழ்ந்த கவலையையும் அளிக்கிறது என்றும் கூறியுள்ளார். இதோடு கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 5 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது நீண்டகாலமாக, வளர்ச்சி குறைந்து வருவதையே காட்டுகிறது. இது நாம் நீண்டகால மந்த நிலையில் இருப்பதையே காட்டுகிறது. இதோடு இந்தியா வேகமாக வளரக் கூடிய ஆற்றலையும் கொண்டுள்ளது. ஆனால் மோடி அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் உள்ள முறையற்ற நிர்வாகமே, இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்றும் சாடியுள்ளார்.

பணமதிப்பிழப்பு & ஜி.எஸ்.டி கை கொடுக்கவில்லை

மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், மற்றும் ஜி.எஸ்.டி நடவடிக்கையும் வளர்ச்சிக்கு கை கொடுக்கவில்லை. இதனால் பொருளாதாரம் எந்த வகையிலும் மீள வில்லை. இதனால் முதலீட்டாளர்கள் எண்ணங்களும் மந்தமான நிலையிலேயே உள்ளது. இவை பொருளாதார மீட்சிக்கான சரியான அடித்தளங்களும் இல்லை என்றும் கூறியுள்ளார். அதோடு செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த நெருக்கடியிலிருந்து நமது பொருளாதாரத்தை மீட்பதற்காக, பழிதீர்க்கும் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, விவேகத்துடனும், சிந்தனையுடனும் செயல்படுமாறும், நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

தவறான கொள்கைகள் வேலையின்மையை அதிகரித்துள்ளது

மோடி அரசின் தவறாக கொள்கையினால் தான் அதிகப்படியான வேலையிழப்புகள் உருவாகியுள்ளன. மேலும் மோடி அரசின் இந்த கொள்கைகளால் தான் பெரிய அளவிலான வேலையின்மையையும் உருவாகியுள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் மட்டும் 3.5 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர் என்றும், இது போல் முறைசாரா துறைகளில் இன்னும் அதிகளவிலான வேலையிழப்புகள் ஏற்படும் என்றும், இது மிகவும் பாதிக்கப்பட கூடிய தொழிலாளர்களை, இன்னும் அதிகமாக காயப்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார் மன்மோகன் சிங்.

விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை

நாட்டில் விவசாயிகள் போதுமான விலைகளை பெறவில்லை, ஆக அவர்களுக்கு வருமானமும் சரியாக கிடைக்கவில்லை என்று கூறிய மன்மோகன் சிங், மோடி அரசின் குறைந்த பணவீக்க விகிதமானது, விவசாயிகளின் வருமானத்திலிருந்து குறைத்துக் காட்ட விரும்புகிறது என்றும், இந்தியா தற்போது பயங்கரமான, மிக மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக விவசாயிகள் போதுமான விலையை பெறவில்லை. கிராமப்புறங்களில் வருமானங்களும் குறைந்துவிட்டன என்றும் சாடியுள்ளார்.

சுயாட்சி முறையும் பறிப்பு

இது தவிர நிறுவனங்களும் அவற்றின் சுயாட்சி முறையும், மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசால் அழிக்கப்பட்டு வருவதாகவும் மன்மோகன் கூறியுள்ளார். ஆக நிறுவனங்கள் இவ்வாறு தாக்குதலுக்கு உள் ஆவதோடு, அவற்றின் சுயாட்சி முறையும் அரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் சுதந்திரமும் தற்போது பறிக்கப்பட்டுள்ளது. 1.76 லட்சம் கோடி ரூபாய் வழங்குவதால், ஆ.பி.ஐயும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதெல்லாம் எங்கு போய் முடியும் என்றும் தெரியவில்லை. மேலும் இது குறித்தான எந்த சரியான திட்டமும் இல்லை என்றும் மன்மோகன் கவலை தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்

சமீபத்திய பட்ஜெட் குறித்தான அறிக்கைகள் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உலுக்கியுள்ளன. மேலும் சில அரசியல் பிரச்சனைகளினால் இந்திய சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் பிரச்சனையினால் கிடைக்கும் ஏற்றுமதி வாய்பினையும் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. மோடி அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதார நிர்வாகத்தின் நிலை இது தான் என்றும் தெரிவித்துள்ளார்.

சிந்தனையுடனும் விவேகத்துடனும் செயல்படுங்கள்

மேலும் நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள், பண்னைத் தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோரே சிறந்தவர்கள் என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும் “vendetta politics” பழிதீர்க்கும் அரசியலை விடுத்தி விவேகமான சிந்தனையுடனும், விவேகத்துடனும் செயல்படவேண்டும் என்றும் மன்மோகன் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இவை அனைத்தும் “man-made crisis” மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என்றும் கூறியுள்ளார்.

-செப்டம்பர் 1, 2019







Exit mobile version