
கி.ராவைச் சந்திக்க வரும் வாசகர்கள் சக எழுத்தாளர்கள் அனைவரும் கணவதி அம்மாளை அறிவர்.
தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன். கரிசல் மண்ணின் பாடுகளையும், வெம்மை தகிக்கும் நில மாந்தர்களின் இயல்பான வாழ்வையும் தனது எழுத்துகளில் பதிவு செய்தவர். கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். சமீபத்தில் தனது 97 வது பிறந்தநாளை கொண்டாடினார் கி.ரா. தற்போது பாண்டிச்சேரியில் கி.ராஜநாராயணன் வசித்து வருகிறார். அவரது, மனைவி கணவதி அம்மாள் உடல்நிலைக் குறைவு காரணமாக பாண்டிச்சேரியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு மாத காலமாக சிகிச்சைபெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 87.
கி.ராஜநாராயணனின் உற்ற துணையாக இருந்தவர் கணவதி அம்மாள். கி.ராவைச் சந்திக்க வரும் வாசகர்கள் சக எழுத்தாளர்கள் அனைவரும் கணவதி அம்மாளை அறிவர். அவரது இறப்பு செய்தியைக் கேட்ட எழுத்தாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் அஞ்சலியைச் செலுத்திவருகின்றனர். சமீபத்தில் கவிஞர் கலாப்ரியாவின் 50 ஆண்டுக்கால இலக்கிய வாழ்வைப் பாராட்டும் விழா பாண்டிச்சேரியில் நடைபெற்றது. அதில் கி.ராவுடன் கவிஞர் வண்ணதாசன் கலந்து கொண்டார். கி.ராவின் மனைவியின் இறுதிச் சடங்கு புதுச்சேரியில் நாளை, 27.09.2019 மாலை 4 மணியளவில் நடைபெற இருக்கிறது.
-விகடன்
செப்டம்பர் 26, 2019