ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும் என உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ தொடர்பான அறிக்கை மீதான ஊடாடும் உரையாடலில், காணொளி மூலம் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையானது, கடந்த ஆண்டு இந்த சபையின் 43வது அமர்வில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்த தீர்மானம் 30 இன்கீழ் 1 மற்றும் 40 இன்கீழ் 1 ஆகியவற்றிலிருந்து வெளிவருகின்றது.
எந்தவொரு சுயமரியாதை, இறையாண்மை கொண்ட நாட்டிற்கும், முக்கியமாக ஆட்சி தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு விடயங்களை உள்ளடக்கி, நியாயமற்ற முறையில் தனது நோக்கத்தை விரிவுபடுத்தி மேலும் ஆணையிட்டுள்ள உயர் ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது.
இது ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 2 (7) வது பிரிவான ‘தற்போதைய சாசனத்தில் உள்ள எதுவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்தவொரு அரசினதும் உள்நாட்டு அதிகார எல்லைக்கு உட்பட்ட விடயங்களில் தலையீடு செய்வதற்கு அங்கீகாரம் அளிக்காது…’ என்பதை முழுமையாக மீறும் செயலாகும்.
பரிந்துரைகள் மற்றும் முடிவுகள் தொடர்பாக வெளிவந்த பாதையானது, இலங்கைக்கு எதிராக இடைவிடாமல் தொடர்ந்த முன்கூட்டிய, அரசியல்மயப்படுத்தப்பட்ட மற்றும் பாரபட்சமற்ற சில கூறுகளின் நிகழ்ச்சி நிரலைப் பிரதிபலிக்கின்றது.
இந்தப் பரிந்துரைகள் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்தவையாகும்.
உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள முடிவுகளையும் பரிந்துரைகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் மற்றும் அதன் பொறிமுறைகளுடன் தொடர்ச்சியாகவும், ஆக்கபூர்வமாகவும் ஈடுபட்டு வரும் இலங்கை போன்ற ஒரு நாடு தொடர்பாக, சொத்து முடக்கம், பயணத் தடைகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைப் பற்றிய குறிப்புக்கள் மற்றும் தனிப்பட்ட அரசுகள் உலகளாவிய அதிகார வரம்பைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கான அழைப்பானது, சர்வதேச சமூகம் ஒட்டுமொத்தமாகக் கவனிக்க வேண்டிய ஒரு தனித்துவமான மற்றும் சிறந்த ஆபத்தை சுட்டிக்காட்டுகின்றது.
சில நாடுகளின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையும், மற்றும் இயற்கை நீதியின் கொள்கைகளை மீறுவதுமாகும்.
இந்த சபைக்கு முன்னர் விளக்கப்பட்ட காரணங்களுக்காக இலங்கையால் நிராகரிக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் தொடர்பான நிபுணர் குழுவின் மிகவும் சர்ச்சைக்குரிய அறிக்கை மற்றும் இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அலுவலக விசாரணை அறிக்கை ஆகியவற்றிலிருந்தான உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை மறுக்கின்றது.
கூறப்பட்ட சர்ச்சைக்குரிய அறிக்கைகளிலிருந்து பெறப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்கள், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் எமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் உண்மைத் தவறுகளால் நிறைந்திருக்கின்றன.
இந்த சபை மற்றும் அனைத்து ஐக்கிய நாடுகள் அமைப்புக்களுடனான எமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடுகள் இருந்தபோதிலும், வெளிப்புறமாக இயக்கப்படும் சக்திகளை தொடர்ந்தும் வலியுறுத்துவதானது பல சவால்களை ஏற்படுத்துவதாக அமைவதுடன், இதுபோன்ற செயன்முறைகள் ஐக்கிய நாடுகளின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தையும் அமைக்கும்.
அரசியல் உந்துதல்களால் உந்தப்பட்டு, இந்த சபையால் இலங்கை மீது செலுத்தப்பட்டுள்ள கவனத்திற்காக நாங்கள் வருந்துகின்றோம்.
இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும் என இலங்கை இந்த சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.
இந்த சபை உட்பட ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதிகளில், அரசியலமைப்பிற்கு இணங்க, உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்காக தாங்கள் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Sri Lanka has categorically rejected the conclusions and recommendations in the UN High Commissioner’s Report.
Foreign Affairs Minister Dinesh Gunawardena said the recommendations are based on ill-founded allegations.
“This is in complete violation of Article 2 (7) of the Charter of the UN that states:
“Nothing contained in the present Charter shall authorize the United Nations to intervene in matters which are essentially within the domestic jurisdiction of any state…,”Minister Gunawardena said during the Interactive Dialogue on the OHCHR Report.
The Full Statement
Madam President,
Madam High Commissioner,
Excellencies,
Ladies and gentlemen,
The OHCHR Report which is presented today, emanates from the Resolution 30/1 and 40/1, from which the Government of Sri Lanka announced its withdrawal of co-sponsorship, at the 43rd Session of this Council last year.
Sri Lanka rejects the High Commissioner’s Report which has unjustifiably broadened its scope and mandate further, incorporating many issues of governance and matters that are essentially domestic for any self-respecting, sovereign country. This is in complete violation of Article 2 (7) of the Charter of the UN that states: “Nothing contained in the present Charter shall authorize the United Nations to intervene in matters which are essentially within the domestic jurisdiction of any state…”
The trajectory that has emerged with regard to the recommendations and conclusions reflects the preconceived, politicized and prejudicial agenda which certain elements have relentlessly pursued against Sri Lanka. These recommendations are based on ill-founded allegations.
Sri Lanka categorically rejects the conclusions and recommendations in the High Commissioner’s Report.
The call for asset freezes, travel bans, references to the ICC and the exercise of universal jurisdiction by individual States, based on evidence that up to date has been denied access to and retained by the High Commissioners Office with some of it unreleased for thirty years, particularly in relation to a country like Sri Lanka which has consistently and constructively engaged with the UN and its mechanisms, points to a distinct and eminent danger which the international community as a whole need to take note of. Such unilateral actions by certain countries are unacceptable and a violation of the principles of natural justice.
In addition to the progress made since last March, Sri Lanka has provided written comments on instances of erroneous information, misconceived and arbitrary assessments in the Report. It is regrettable that the High Commissioners Office published its Report, accompanied by an unprecedented propaganda campaign on it and refused to publish our Comments on the report as an addendum. This has deprived Sri Lanka and members of equal visibility of Sri Lanka’s views on the report.
Sri Lanka refutes the allegations that have been reproduced in the High Commissioner’s report, from the highly contentious Report of the Panel of Experts (PoE) on Accountability and the Report of the High Commissioner’s Office Investigation on Sri Lanka (OISL), which have been rejected by Sri Lanka for reasons explained to this Council before. The contents of the Report which have been drawn from the said disputed reports are rife with factual inaccuracies that appear to equate atrocities committed by the LTTE, a terrorist organization proscribed internationally, with legitimate action taken by the government to safeguard the territorial integrity of the country and the right to life of our people.
Madam President,
Insistence on ever-expanding externally driven prescriptions, notwithstanding our continuous cooperation and engagement with this Council and all UN bodies, can pose numerous challenges and such processes could set a dangerous precedent affecting all member states of the UN.
We regret the disproportionate attention drawn to Sri Lanka by this Council, driven by political motivations. Sri Lanka calls upon the members of this Council that any resolution which is based on this Report, be rejected by the Council and be brought to a closure.
In conclusion,
We remain open to engaging constructively with the UN, including this Council, and the international community in mutually agreed areas, in conformity with the Constitution and in keeping with domestic priorities and policies.
Ayubowan