-கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்
இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பலவீனமாகித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. விலையேற்றங்கள் கட்டுக்கடங்காமல் செல்கின்றன. ஏறிய விலையிலும் பொருள்களைக் கொள்வனவு செய்யமுடியாமல் மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை. எரிபொருள் வரிசைகளும் எரிவாயு வரிசைகளும் நாட்டின் நாலாபாகங்களிலும் தொடர்கின்றன.
பொதுமக்கள் தரப்பிலிருந்து தவிர்க்க முடியாதவாறு எழுப்பப்படும் வினா எப்போது இந்த வரிசைகள் முடிவுக்குவரும்; சாதாரண வாழ்க்கையை மக்கள் வாழக்கூடிய சூழல் உருவாகும் என்பதாகும். ஆனால் இதற்குரிய சரியான பதிலை எவராலும் வழங்க முடியாத ஒரு நிலைமையே இப்போது தென்படுகிறது.
பெரும் எடுப்பில் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தப்போவதாக விடுக்கப்பட்ட அறிவிப்புகளும் கூட காற்றுப்போன பலுானாக மாறிக் கொண்டிருக்கின்றன. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இலங்கைக்கு உதவ விருப்பம் தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுவந்த சூழ்நிலையில் அண்மையில் உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு புதிய நிதியுதவிகள் எதனையும் வழங்கும் எண்ணம் இல்லை எனவும் ஏற்கெனவே இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் உலகவங்கி உதவியுடனான செயற்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் ஒரு பகுதியினை அவசரகாலத் தேவையாகக் கருதி சுகாதாரம் மற்றும் நலிவுற்றோர் நலனுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்படுமெனவும் இலங்கை இப்போதைய இக்கட்டிலிருந்து வெளிவரப் பொருத்தமான ஒரு பேரினப் பொருளாதாரக் கொள்கை சட்டகமொன்றை (macroeconomic policy framework) உருவாக்கி முன்வைத்தால் எதிர்காலத்தில் ஏனைய அபிவிருத்திப் பங்காளிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு மேலதிக உதவிகள் பற்றி சிந்திக்கலாமெனவும் இலங்கையில் இடம்பெறும் விடயங்களை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் கூறியிருக்கிறது.
உலக வங்கியின் இந்த நிலைப்பாடு சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாட்டிலிருந்து சற்றும் வேறுபடவில்லை என்பது தெளிவானதாகும். முதலில் சரியானதொரு கொள்கையுடனும் வேலைத்திட்டத்துடனும் வாருங்கள் என்றே அவை கூறுகின்றன.
சர்வதேச நாணய நிதியத்துடனான தொழில்நுட்ப ரீதியிலான கலந்துரையாடல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இலங்கை தான் பெற்ற கடன்களை எதிர்காலத்தில் மீளச் செலுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை கடன் கொடுத்தோரிடம் மேற்கொள்வதற்கான Lazard என்னும் நிறுவனத்தை நிதி ஆலோசகராகவும் Clifford Chance எனும் நிறுவனத்தை சட்ட ஆலோசகராகவும் தெரிவு செய்திருக்கிறது.
அடுத்த கட்டத்தில் இலங்கை சார்பில் இவ்விரு நிறுவனங்களும் கடன் மீள்கட்டமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை முடிவடைந்து இலங்கைக்கு IMF இடமிருந்து நிதிவசதிகள் கிடைக்க இன்னும் குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது செல்லும் என்கிறார் மத்தியவங்கி ஆளுநர். ஆகவே உலகவங்கி சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து எந்தவித நிதி உதவியும் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு கிட்டாது என்பது மிகத்தெளிவானது.
தற்போது ஏற்றுமதிகள் மூலமாக மாதாந்தம் சுமார் ஒரு பில்லியன் டொலர் மாத்திரமே நாட்டுக்குள் வருகிறது. உல்லாசப்பயண வருவாய் வற்றிவிட்டது. வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பணவனுப்பல்கள் மூலமான டொலர் உள்வருகை உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகி விட்டிருக்கிறது.
கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் இதே காலப்பகுதியில் இவ்வடிவிலான டொலர் உட்பாய்ச்சல்கள் ஐம்பது சதவீத வீழ்ச்சியைக்கண்டு 300மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இலங்கையின் டொலர் கையிருப்புகள் முழுமையாகக் கரைந்து போயுள்ள சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருள் உள்ளிட்ட இறக்குமதி தேவைகளுக்காக சுமார் 1.9பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக மத்தியவங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். பெற்றோலியம் மற்றும் எரிவாயு போன்றவற்றிகு கற்போது நிலவும் தட்டுப்பாடுகளுக்கும் நீண்ட வரிசைகளுக்கும் இதுவே காரணமாகும்.
எரிபொருள் மற்றும் எரிவாயுக் கப்பல்கள் நாட்டின் வாசலில் நங்கூரமிட்டு நாட்கணக்கில் தாமதக் கட்டணமாக மிகப்பெருந்தொகையையும் செலுத்தி இவற்றை இறக்க வேண்டிய நிலைமைக்கும் இதுவே காரணம்.
இந்தப் பிரச்சினை தொடங்கி இன்று வரையில் ஆபத்பாந்தவனாக இந்தியாவே இலங்கைக்குத் துணை நிற்கிறது. இப்போதும் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கும் இந்திய நிதியுதவியை இலங்கை எதிர்பார்க்கிறது.
இந்திய கடன் உதவித்திட்டத்தின் கீழ் ஒரு பில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுமதித்து அதில் 500மில்லியன்களை ஏற்கெனவே வழங்கியுள்ளது. அத்துடன் ஆசிய தீர்ப்பனவு ஒன்றியத்தில் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு செலுத்த வேண்டிய டொலர்களை தாமதமாக செலுத்துவதற்கான ஏற்பாடாக இரண்டு மாதங்களுக்கு 500மில்லியன் வரையிலான வரம்பிற்கு உட்பட்டு சலுகை வழங்கப்ட்டுள்ளது.
இச்சலுகையின் கீழ் இலங்கை சுமார் 1.5பில்லியன் டொலர் பெறுமதியான பொருள்களை இறக்குமதி செய்துள்ளது. அடுத்துவரும் ஆறுமாத காலப்பகுதிக்கு இன்னும் 1.5பில்லியன் டொலர் வரையிலான இறக்குமதிகளை இலங்கை இந்தியாவிடமிருந்து பெறமுடியும். இவை பொருள் இறக்குமதிக்காக கடன் வழங்கும் நடவடிக்கையை ஒத்ததாகும்.
இந்தியாவுக்கு இத்தொகைகளை இலங்கை பின்னர் செலுத்த வேண்டும். இதனால் ஏற்படும் தற்காலிக சேமிப்புகள் டொலர் கையிருப்புகள் திரட்சியடைய உதவும். எவ்வாறாயினும் இந்த நிதியுதவிகள் ஊடாக நிலைமையை சமாளிக்க மத்தியவங்கி பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சந்தைக்கு வழங்க மாதாந்தம் இன்னும் சுமார் 500மில்லியன் டொலர்கள் மேலதிகமாகத் தேவைப்படுவதாக மத்தியவங்கி கூறுகிறது.
இந்தத் தொகையினை குறுங்கால கடன் வசதியொன்றை நட்பு நாடுகளுடன் கலந்துரையாடிப் பெற்றுத்தருமாறு மத்தியவங்கி கோருகிறது. இது கிட்டுமாயின் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு நிலவும் தட்டுப்பாடுகளையும் நீண்ட வரிசைகளையும் குறைக்க முடியும் என்றும் மத்தியவங்கி கூறுகிறது. இந்த நிதி கிடைக்காத பட்சத்தில் இப்போது நிலவும் சூழ்நிலையிலேயே அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு நாட்டை நகர்த்திச் செல்ல வேண்டியிருக்கும்.
அத்தோடு மத்தியவங்கி செலாவணிக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை இறுக்கமாக்கியிருக்கிறது. திறந்த கணக்குகள் (open accounts) ஊடாக இறக்குமதிகளை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைவசம் வைத்திருக்கக்கூடிய டொலர்களின் அளவு பத்தாயிரமாகக் குறைக்கபட்டிருக்கிறது. டொலர் பரிமாற்றங்கள் வங்கித்துறை ஊடாக மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இத்துடன் டொலரை முகாமை செய்யப்பட்ட மிதக்கவிடலின் கீழ் கொண்டு வந்து டொலர் சந்தையில் பரிமாறப்படக்கூடிய ஒரு வீச்சு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்ந்து அதிகரித்துச் சென்ற டொலரின் விலை ஓரளவு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
வங்கித்துறையும் ஏனைய நிதிநிறுவனங்களும் மத்திய வங்கிகளின் வழிகாட்டல்களை தற்போது பின்பற்றுவதாகத் தெரிகிறது. இதன் மூலம் கள்ளச் சந்தையில் டொலர் பரிமாற்றங்கள் நிகழ்வதையும் அதன் மூலம் ஊகவணிகர்கள் செயற்கையாக நிர்ணயிக்கும் விலைகளை் முறைசார்ந்த நிதித்துறையினரும் ஏற்பவேண்டிய நிலையினையும் தடுக்க மத்தியவங்கி முனைந்துள்ளது.
எவ்வாறாயினும் இவை அத்தனையும் தற்காலிக நடவடிக்கைகளேயாகும். பிரச்சினை தீரவேண்டுமாயின் வருமான உழைப்புகள் என்ற வடிவிலே இலங்கைக்குள் டொலர் உட்பாய்ச்சல்கள் அதிகரிக்க வேண்டும். கடன்கள் தற்காலிகமாக பிரச்சினைக்கு தீர்வாக அமைந்தாலும் அக்கடன்கள் எதிர்காலத்தில் மீளச் செலுத்தப்பட்டேயாக வேண்டும்.
இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பலவீனமாகித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. விலையேற்றங்கள் கட்டுக்கடங்காமல் செல்கின்றன. ஏறிய விலையிலும் பொருள்களைக் கொள்வனவு செய்யமுடியாமல் மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை. எரிபொருள் வரிசைகளும் எரிவாயு வரிசைகளும் நாட்டின் நாலாபாகங்களிலும் தொடர்கின்றன.
பொதுமக்கள் தரப்பிலிருந்து தவிர்க்க முடியாதவாறு எழுப்பப்படும் வினா எப்போது இந்த வரிசைகள் முடிவுக்குவரும்; சாதாரண வாழ்க்கையை மக்கள் வாழக்கூடிய சூழல் உருவாகும் என்பதாகும். ஆனால் இதற்குரிய சரியான பதிலை எவராலும் வழங்க முடியாத ஒரு நிலைமையே இப்போது தென்படுகிறது.
பெரும் எடுப்பில் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தப்போவதாக விடுக்கப்பட்ட அறிவிப்புகளும் கூட காற்றுப்போன பலுானாக மாறிக் கொண்டிருக்கின்றன. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இலங்கைக்கு உதவ விருப்பம் தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுவந்த சூழ்நிலையில் அண்மையில் உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு புதிய நிதியுதவிகள் எதனையும் வழங்கும் எண்ணம் இல்லை எனவும் ஏற்கெனவே இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் உலகவங்கி உதவியுடனான செயற்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் ஒரு பகுதியினை அவசரகாலத் தேவையாகக் கருதி சுகாதாரம் மற்றும் நலிவுற்றோர் நலனுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்படுமெனவும் இலங்கை இப்போதைய இக்கட்டிலிருந்து வெளிவரப் பொருத்தமான ஒரு பேரினப் பொருளாதாரக் கொள்கை சட்டகமொன்றை (macroeconomic policy framework) உருவாக்கி முன்வைத்தால் எதிர்காலத்தில் ஏனைய அபிவிருத்திப் பங்காளிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு மேலதிக உதவிகள் பற்றி சிந்திக்கலாமெனவும் இலங்கையில் இடம்பெறும் விடயங்களை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் கூறியிருக்கிறது.
உலக வங்கியின் இந்த நிலைப்பாடு சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாட்டிலிருந்து சற்றும் வேறுபடவில்லை என்பது தெளிவானதாகும். முதலில் சரியானதொரு கொள்கையுடனும் வேலைத்திட்டத்துடனும் வாருங்கள் என்றே அவை கூறுகின்றன.
சர்வதேச நாணய நிதியத்துடனான தொழில்நுட்ப ரீதியிலான கலந்துரையாடல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இலங்கை தான் பெற்ற கடன்களை எதிர்காலத்தில் மீளச் செலுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை கடன் கொடுத்தோரிடம் மேற்கொள்வதற்கான Lazard என்னும் நிறுவனத்தை நிதி ஆலோசகராகவும் Clifford Chance எனும் நிறுவனத்தை சட்ட ஆலோசகராகவும் தெரிவு செய்திருக்கிறது.
அடுத்த கட்டத்தில் இலங்கை சார்பில் இவ்விரு நிறுவனங்களும் கடன் மீள்கட்டமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை முடிவடைந்து இலங்கைக்கு IMF இடமிருந்து நிதிவசதிகள் கிடைக்க இன்னும் குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது செல்லும் என்கிறார் மத்தியவங்கி ஆளுநர். ஆகவே உலகவங்கி சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து எந்தவித நிதி உதவியும் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு கிட்டாது என்பது மிகத்தெளிவானது.
தற்போது ஏற்றுமதிகள் மூலமாக மாதாந்தம் சுமார் ஒரு பில்லியன் டொலர் மாத்திரமே நாட்டுக்குள் வருகிறது. உல்லாசப்பயண வருவாய் வற்றிவிட்டது. வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பணவனுப்பல்கள் மூலமான டொலர் உள்வருகை உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகி விட்டிருக்கிறது.
கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் இதே காலப்பகுதியில் இவ்வடிவிலான டொலர் உட்பாய்ச்சல்கள் ஐம்பது சதவீத வீழ்ச்சியைக்கண்டு 300மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இலங்கையின் டொலர் கையிருப்புகள் முழுமையாகக் கரைந்து போயுள்ள சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருள் உள்ளிட்ட இறக்குமதி தேவைகளுக்காக சுமார் 1.9பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக மத்தியவங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். பெற்றோலியம் மற்றும் எரிவாயு போன்றவற்றிகு கற்போது நிலவும் தட்டுப்பாடுகளுக்கும் நீண்ட வரிசைகளுக்கும் இதுவே காரணமாகும்.
எரிபொருள் மற்றும் எரிவாயுக் கப்பல்கள் நாட்டின் வாசலில் நங்கூரமிட்டு நாட்கணக்கில் தாமதக் கட்டணமாக மிகப்பெருந்தொகையையும் செலுத்தி இவற்றை இறக்க வேண்டிய நிலைமைக்கும் இதுவே காரணம்.
இந்தப் பிரச்சினை தொடங்கி இன்று வரையில் ஆபத்பாந்தவனாக இந்தியாவே இலங்கைக்குத் துணை நிற்கிறது. இப்போதும் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கும் இந்திய நிதியுதவியை இலங்கை எதிர்பார்க்கிறது.
இந்திய கடன் உதவித்திட்டத்தின் கீழ் ஒரு பில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுமதித்து அதில் 500மில்லியன்களை ஏற்கெனவே வழங்கியுள்ளது. அத்துடன் ஆசிய தீர்ப்பனவு ஒன்றியத்தில் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு செலுத்த வேண்டிய டொலர்களை தாமதமாக செலுத்துவதற்கான ஏற்பாடாக இரண்டு மாதங்களுக்கு 500 மில்லியன் வரையிலான வரம்பிற்கு உட்பட்டு சலுகை வழங்கப்ட்டுள்ளது.
இச்சலுகையின் கீழ் இலங்கை சுமார் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான பொருள்களை இறக்குமதி செய்துள்ளது. அடுத்துவரும் ஆறுமாத காலப்பகுதிக்கு இன்னும் 1.5 பில்லியன் டொலர் வரையிலான இறக்குமதிகளை இலங்கை இந்தியாவிடமிருந்து பெறமுடியும். இவை பொருள் இறக்குமதிக்காக கடன் வழங்கும் நடவடிக்கையை ஒத்ததாகும்.
இந்தியாவுக்கு இத்தொகைகளை இலங்கை பின்னர் செலுத்த வேண்டும். இதனால் ஏற்படும் தற்காலிக சேமிப்புகள் டொலர் கையிருப்புகள் திரட்சியடைய உதவும். எவ்வாறாயினும் இந்த நிதியுதவிகள் ஊடாக நிலைமையை சமாளிக்க மத்தியவங்கி பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சந்தைக்கு வழங்க மாதாந்தம் இன்னும் சுமார் 500 மில்லியன் டொலர்கள் மேலதிகமாகத் தேவைப்படுவதாக மத்தியவங்கி கூறுகிறது.
இந்தத் தொகையினை குறுங்கால கடன் வசதியொன்றை நட்பு நாடுகளுடன் கலந்துரையாடிப் பெற்றுத்தருமாறு மத்தியவங்கி கோருகிறது. இது கிட்டுமாயின் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு நிலவும் தட்டுப்பாடுகளையும் நீண்ட வரிசைகளையும் குறைக்க முடியும் என்றும் மத்தியவங்கி கூறுகிறது. இந்த நிதி கிடைக்காத பட்சத்தில் இப்போது நிலவும் சூழ்நிலையிலேயே அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு நாட்டை நகர்த்திச் செல்ல வேண்டியிருக்கும்.
அத்தோடு மத்தியவங்கி செலாவணிக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை இறுக்கமாக்கியிருக்கிறது. திறந்த கணக்குகள் (open accounts) ஊடாக இறக்குமதிகளை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைவசம் வைத்திருக்கக்கூடிய டொலர்களின் அளவு பத்தாயிரமாகக் குறைக்கபட்டிருக்கிறது. டொலர் பரிமாற்றங்கள் வங்கித்துறை ஊடாக மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கை களும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இத்துடன் டொலரை முகாமை செய்யப்பட்ட மிதக்கவிடலின் கீழ் கொண்டு வந்து டொலர் சந்தையில் பரிமாறப்படக்கூடிய ஒரு வீச்சு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்ந்து அதிகரித்துச் சென்ற டொலரின் விலை ஓரளவு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
வங்கித்துறையும் ஏனைய நிதிநிறுவனங்களும் மத்திய வங்கிகளின் வழிகாட்டல்களை தற்போது பின்பற்றுவதாகத் தெரிகிறது. இதன் மூலம் கள்ளச் சந்தையில் டொலர் பரிமாற்றங்கள் நிகழ்வதையும் அதன் மூலம் ஊகவணிகர்கள் செயற்கையாக நிர்ணயிக்கும் விலைகளை் முறைசார்ந்த நிதித்துறையினரும் ஏற்பவேண்டிய நிலையினையும் தடுக்க மத்தியவங்கி முனைந்துள்ளது.
எவ்வாறாயினும் இவை அத்தனையும் தற்காலிக நடவடிக்கைகளேயாகும். பிரச்சினை தீரவேண்டுமாயின் வருமான உழைப்புகள் என்ற வடிவிலே இலங்கைக்குள் டொலர் உட்பாய்ச்சல்கள் அதிகரிக்க வேண்டும். கடன்கள் தற்காலிகமாக பிரச்சினைக்கு தீர்வாக அமைந்தாலும் அக்கடன்கள் எதிர்காலத்தில் மீளச் செலுத்தப்பட்டேயாக வேண்டும்.
-தினகரன் வாரமஞ்சரி
2022.06.05