Site icon சக்கரம்

புவி தினத்தில் புதுப்பிக்கப்படும் ஆற்றல் பற்றி சிந்திப்போமா…?

– முனைவர். பா. ராம் மனோகர்

கோடை வெயில் உச்சம், பருவ கால மாற்றவிளைவு “ இப்படியெல்லாம் பேசி, படித்து, வீட்டுக்கு போகிறோம். அங்கு நமக்கு உடனே ஏ சி, மின் விசிறி, உணவு சமைக்க மின்சார அடுப்பு, குளிர் சாதன பெட்டி, கைபேசிக்கு, அவசர மின்னேற்றம் செய்ய, மகிழ்ச்சி பொழுது போக்கு அடைய தொலை காட்சி என்று மின்சாரம் பயன்படுத்திவருகிறோம். ஒவ்வொரு நொடியிலும், மனிதர்கள், அனைவரும் மின் ஆற்றல் இல்லாமல் இருக்க இயலாது என்ற நிலை வந்துவிட்டது.

எனினும், இந்த ஆற்றல் எங்கிருந்து உற்பத்தி ஆகிறது!? அது எத்தனை காலம் தான் தொடர்ந்து நமக்கு கிடைக்கும், என்ற சிந்தனை நிச்சயமாக நம்மில் பலருக்கும் இருப்பதில்லை! ஆம், நீர் மின் ஆற்றல் (HYDRO POWER) படிவ எரி பொருட்கள் (FOSSIL FUEL), அணு மின் ஆற்றல் (ATOMIC POWER) என்று நாம் பல ஆண்டுகளாக, பல்வேறு அமைப்புகள் மூலம் ஆற்றலை பெற்று பயன்படுத்தி வருகிறோம்.

ஆம், மேற்குறிப்பிட்ட ஆற்றல் மூலங்கள் வழியாக, நாம் பெறுகின்ற ஆற்றல் அனைத்தும்,புதுப்பிக்க இயலாத (NON-RENEWABLE ENERGY) ஆற்றல் என்று அழைக்கப்படும். இவை குறிப்பிட்ட காலத்திற்கு பின்தொடர்ந்து பெறுவது கடினம் என்றும், தற்பொழுது இவற்றை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால், “மாசுபாடு”புவி வெப்ப மயமாதல் பிரச்சினைகளை நம் மனித குலம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று உலக விஞ்ஞானிகள், பல ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் ஆண்டு தோறும், ஐக்கிய நாடுகள் சபையின், அங்கமான, ஐக்கிய சுற்றுசூழல் திட்ட அமைப்பு, (UNEP) இந்த ஆண்டுக்கான, (2025), புவி தினத்தின் (22.04.25) மைய கருத்தாக”நமது ஆற்றல், நமது கோள் “(OUR POWER, OUR PLANET) என்பதைக் கொண்டு அனைத்து நாடுகளிலும், புதுப்பிக்கப்படும் ஆற்றல் பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டம் உருவாக்கியுள்ளனர்.

இந்திய நாடு, 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பருவ கால மாற்ற பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றில் 2030 ஆண்டுக்குள், வளிமண்டலத்தில், வெளியிடப்படும் கார்பன் மாசு உமிழ்வினை, 45% ஆக குறைத்து கொள்வதாக உறுதி அளித்துள்ளது. மேலும், அதே காலத்தில், 50% ஆற்றல் வளத்தினை, படிவ எரி பொருள் அல்லாத, சூரிய ஒளி காற்று ஆகிய மூலங்களைலிருந்து பெறவும் குறிக்கோள் வைத்திருக்கிறது.

500 GW, திறன் கொண்ட அமைப்புகள் நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு CLEAN ENERGY தூய ஆற்றல் மூலங்கள் என்பதை, நீர் மின்சார ஆற்றல் மற்றும் அணு ஆகியவற்றை, காற்று, சூரிய ஒளி, ஹைட்ரஜன் என்ற புதுப்பிக்கும் ஆற்றல் மூலங்களுடன், இந்திய அரசு இணைத்து கொண்டு இருப்பது சற்று குழப்பம் தருகிறது. 2023 ஆம் ஆண்டு மத்திய மின்சார ஆணையம் (CEA) வெளியிட்ட தகவலின் படி, 2022 ல், உள்ள 1255 பில்லியன் யூனிட் ஆற்றலைவிட, அதிகம், 2030 ஆம் ஆண்டு, தேவை என்று தெரிகிறது.

ஏறத் தாழ, 2440 பில்லியன் யூனிட் ஆற்றல், அவசியம் தேவைப்படும்.. இதற்கு, 777 GW திறன் உள்ள, ஆற்றல் நிலையங்கள், 2030 ஆண்டுக்குள் நிறுவப்படவேண்டும். எனினும் இதுவும் நிலக்கரி இல்லாத, புதுப்பிக்கும் ஆற்றல் அமைப்புகள் மூலம் பெறப்படவேண்டும். ஆனால் நம் நாடு இந்த நிலை அடைய தயாராக உள்ளதா!!? என்பது இன்னமும் ஐயமே.

பொதுவாக புதுப்பிக்கும் ஆற்றல், சற்று கூடுதல் ஆக விலை இருக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது. எனினும், மிக முக்கிய நாட்டின் ஆற்றல் பகிர்வு, விநியோகம் பற்றிய தகவல்கள், பிரச்சனை பற்றி, மக்கள் யாருமே அறிந்து கொள்ளாத நிலையும் காணப்படுகிறது. எனவே டெல்லி, அறிவியல் & சுற்றுசூழல் மையம், பல்வேறு நிபுணர், அறிவியல் அறிஞர் பெருமக்கள் ஆகியோருடன், விவாதித்தது. இத்துறையில், ஆற்றல் பெற்று விநியோகிப்பவர்கள், சூரிய ஆற்றல் விலை மாறிக்கொண்டு வரும் நிலையில், அதற்கு தேவையான ஒப்பந்தங்கள், முடிவுற தாமதம் ஆகிறது.

இந்த புதுப்பிக்கும் ஆற்றல், விலை குறைவாக, இருப்பினும் இது இரவு நேரம், கிடைக்கும் நிலை, சிரமம் ஆக இருக்கும் நிலையில்,, நிலக்கரி மின்சாரதினை நம்ப வேண்டியுள்ளது. புதுப்பிக்கும் ஆற்றல் உற்பத்தி நிலையங்கள் நிறுவுவதில் உள்ள முக்கிய பிரச்சனை, அதற்குரிய இடம், நிலம் தேர்வு செய்வதில் உள்ளது. குறிப்பாக 500GW உற்பத்தி மின் நிலையம் நிறுவ, 0.3 ஹெக்டர் நிலம் தேவை, ஆனால் நம் நாட்டில், நிலத்தின் நிலை, மேய்ச்சல்வனபகுதி, ஈர நில பகுதி மற்றும் உரிமை தாரர் ஈட்டு தொகை, அதற்கு கட்டணம் ஆகிய பிரச்சினைகள் தீர்வுகள் மேற்கொள்ளும் நிலையிலும் தாமதம் ஆகிறது. மின்சார கம்பிகள் உள்ள இணைப்புகள் அமைக்க 3 முதல் 4 ஆண்டுகள் ஆகிறது.

எனினும் சூரிய ஆற்றல் தகடுகள் கூரை அமைத்தல் எளிதாக, 1-1.5 ஆண்டுகளுக்குள்ளாகிறது. ஒட்டு மொத்தத்தில், புதுப்பிக்கும் ஆற்றல் பற்றிய அரசின் கொள்கை, திட்டங்கள் பற்றிய தரவுகள் முழுமையாகவும், தெளிவாக இல்லை என்பதும் உண்மை யாகும். பசுமை ஆற்றல் என்ற படிவ எரிபொருள் அல்லாத, சுற்று சூழலுக்கு உகந்த ஆற்றல் 100% உருவாக்க நம் நாட்டில் இமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், சிக்கிம் ஆகிய மாநில அரசுகள் தகுதியினை பெற்றிருக்கின்றன. ஆனால் இவை
மற்ற மாநிலகளுக்கும் விநியோகம் செய்கின்றன. ஆனால் மேற்குறிப்பிட்ட பசுமை ஆற்றல் உருவாக்கும் அந்த மூன்று மாநிலங்களுக்கு எவ்வித ஊக்க தொகையும், ஆதரவாக கிடைப்பதில்லை என்பது வருத்தத்திற்குரிய தகவல் ஆகும்.

இந்நிலையில், நம் புதுப்பிக்கப்படும் எரிசக்தியில் மற்றொரு வகை ஆற்றல், “அழுத்தப்படும் சேறு “என்ற சர்க்கரை கரும்பு கழிவு ஒரு சிறப்பாக வயலில் உள்ள மண்ணின் வளத்துக்கு சிறந்த உரம் ஆகும். அழுத்தப்படும் கரும்பு சேறு என்னும் ஒரு கூடுதல் உற்பத்தி பொருள், கரும்பு சாறு பிழியும் போது கிடைக்கிறது. ஆனால் பல தேவையற்ற அசுத்தம் கலந்து வரும். அந்த கரும்பு சாறு, சர்க்கரை தயாரிக்க கொதி உலையில், வெப்பப்படுத்த, சுண்ணாம்பு, கந்தக டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு முன்னிலையில், “அழுத்தப்பட்ட கரும்பு சேறு “கெட்டிபடுத்தப்படுத்தப்படும். இந்த பிரஸ் மட், (PRESS MUD) என்ற கரும்பு சேறு, சமீப காலமாக, சிறந்த பசுமை ஆற்றல் வளம் உள்ள பொருளாக கருதப்படுகிறது.

ஏனென்றால் இந்த வளம் உள்ள கரும்பு சாறு கழிவிலிருந்து, உயிரி எரி வாயு உற்பத்தி செய்து,, சர்க்கரை ஆலைகளுக்கு, கூடுதல், வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தற்பொழுது நம் நாட்டில், செயல்படும் 531 சர்க்கரை ஆலைகள் 2022-23 ஆம் ஆண்டில், 32.74 மில்லியன் தொன் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளது. அதன் மூலம் 11.74 மில்லியன் தொன், கரும்பு கழிவு சேறு வெளியேறியிருக்கும். அதிலிருந்து, 2484 கோடி ரூபாய் மதிப்புடைய, 0.46 தொன் உயிரி எரி வாயு உற்பத்தி உருவாக்கி இருக்க இயலும். பொதுவாக உயிரி எரி வாயு, அங்கக கழிவுகளான, விலங்கு கழிவு, விவசாய தொழிற் சாலை கழிவு,, மாநகர் குப்பை திட கழிவுகள் மூலம், உயிரி வேதியியல் முறைகள், வழியில், பாக்டீரியா உதவியுடன், காற்றற்ற (anaerobic) நிலையில், உயிர் வாயு உற்பத்தி நிகழ்கிறது. இங்கு கிடைக்கும் கழிவும் கூட விவசாய உரமாக பயன்படுகிறது.

மீதேன், கார்பன் டை ஆக் சைடு, ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் ஹைட் ரஜன் சல்பைடு ஆகியன கிடைக்கும். மேற்கண்ட காற்றற்ற முறையில் கரும்பு கழிவு சேறு கழிவிலிருந்து பயோ காஸ் என்ற உயிரி எரிவாயு தயாரிக்க முடியும். இது வெப்பம் உற்பத்தி, மின்சார உற்பத்தி, மற்றும் இயற்கை எரிவாயு, வாகன எரி பொருள் உற்பத்தி, என்ற பயோ மீதனேஷன் ஆகிய பல்வேறு சூழல் நட்புடைய எரி பொருள் வளம் ஆக செயல்படுத்த இயலும்.. மேலும் இயற்கை மீத்தேன் கழிவு இதனால் குறைய வாய்ப்புள்ளது.

CBG எனப்படும் உயிரி எரிவாயு உருவாக்கும் ஆலைகள் (2023 செப்டம்பர்) நம் நாட்டில் 52 உள்ளன. இவை 6600 தொன் ஒருநாளில் அங்ககக் கழிவுகளை, பராமரித்து, 300 தொன் உயிரி எரி வாயு உற்பத்தி செய்கின்ற நிலையில் உள்ளன. இவற்றில், 11 அமைப்புகள் மட்டுமே கரும்பு கழிவு சேறு பயன்படுத்தி வருகின்றன. 7 ஆலைகள், வாயு உற்பத்தி க்கு பகுதி மூலபொருட்களாக மட்டுமே உபயோகம் செய்கின்ற நிலை, அறியப்பட்டுள்ளது. உயிர் எரி வாயு உற்பத்தி செய்ய முழுமையாக கரும்பு சர்க்கரை கழிவு சேறு அனைத்து ஆலைகளில் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வாறு அரசின், கொள்கை திட்டமிடுதல் அமைவது நன்றாக இருக்க வேண்டும். உரிய விழிப்புணர்வு, பயிற்சி அளிப்பது, ஆராய்ச்சி பணிகள் போன்ற மிகவும் அவசியமான செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவேண்டும்.

புவி தினத்தில், சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களிடம் சென்று சேர்வது மிகவும் அவசியம் ஆகும். ஏனெனில், மனித இனம் நலமுடன் வாழ்வதற்கு, உரிய ஆற்றல் தேவை என்பது அறிவோம். ஆனால், வழக்கமான எரி பொருட்க்கள் பயன்படுத்திபல ஆண்டுகளாக, நாம் அதற்கு மட்டுமே முன்னுரிமை தந்த நிலை மாறவேண்டும். மாற்று எரி ஆற்றல் பொருட்கள் என்ற புதுப்பிக்கும் ஆற்றல் வளம், காற்று ஆற்றல், சூரிய ஆற்றல் போன்றவையுடன், உயிரி ஆற்றல் ஆகியவை பற்றிய முன்னுரிமை வருவது நன்று. அரசின் திட்டங்கள் மூலம் தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகள், கல்லூரிகள் முன் வரவேண்டும்.

ஆற்றல் என்பது மாறிக்கொண்டு இருப்பது உண்மை. அதன் உற்பத்தி எதிர் காலத்தில் மிகவும் அதிகரிக்கப்படவேண்டிய நிலை இருக்கிறது. எனினும் நாம் வெளியேற்றும் கழிவுகள் குறிப்பாக அங்கக, திட கழிவு, கரும்பு சர்க்கரை மூலம் கிடைக்கும் எரி வாயு கிடைக்கும் என்பது, நம் உலகில் இருக்கும், “இயற்கை தந்துள்ள எந்த பொருளும் கழிவு அல்ல” என்ற உண்மையினை உணர்த்துகிறது!.

நாம் முறையாக, அதனை பக்குவப்படுத்தி, பராமரிப்பு செய்யும் போது உரிய பலன்கள், கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. புவி தினம் அனுசரித்து, புதுப்பிக்கும் ஆற்றல் பற்றிய விழிப்புணர்வு, கல்வி அறிந்து கொள்ளுதல், பற்றி செயல்பாடுகள் ஒரு புறம் இருப்பது நன்று. எனினும், அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை, தயக்கம் இல்லாமல் ஒருங்கிணைந்து,, இந்த வகை ஆற்றலின் விலை குறைத்தல், மானியத்தொகை அதிகரிப்பு, திட்ட பரவலாக்கம், செயல் பாடு மேற்கொள்வதில் எளிய அலுவல் முறை, விழிப்புணர்வு போன்றவை, நடுத்தர, அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

Exit mobile version