Site icon சக்கரம்

ட்ரம்ப்பின் கைகளில் இரத்தக் கறை – அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ரான் மீது இஸ்ரேல் நடத்திய சட்டவிரோதமான தாக்குதலை அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்படுகின்ற ஒரு பொறுப்பற்ற ஆக்கிரமிப்புச் செயல் என்று கட்சி தெரிவித்துள்ளது. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றங்களை அதிகரிக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதல் பாசிச இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள குற்றச் செயல்களின் கூட்டை அம்பலப்படுத்துகிறது என்றும் கட்சி அறிவித்துள்ளது.

நேதன்யாகுவின் அரசியல் நோக்கம்

உள்நாட்டில் அரசியல் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தனது ஆட்சியைக் காப்பாற்றவே இந்த போரைத் துவங்கியுள்ளார் என்று அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அவர் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை வைத்து சூதாட்டம் நடத்துகிறார் என்றும் கூறியுள்ளது. ஆனால் இந்த இரத்தக்கறை அவரது கைகளில் மட்டுமல்ல, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைகளிலும் உள்ளது என்றும் சாடியுள்ளது.

ட்ரம்ப்பின் பங்கு

போரை ஆதரிக்காதது போல நடித்துக்கொண்டே இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு ட்ரம்ப் பச்சைக்கொடி காட்டியுள்ளார்; ஈரானியர்களை படுகொலை செய்யும் அமெரிக்க ஆயுதங்களைப் பற்றி அவர் தற்பெருமை பேசுகிறார்; மேலும் ஈரான் அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு சரணடையாவிட்டால் அழிந்து போகும் என மிரட்டல் விடுக்கிறார். இது சொந்த பாதுகாப்புக்கான நடவடிக்கை அல்ல என்றும்; இது இராஜதந்திர ரீதியில் நடந்து வந்த பேச்சுவார்த்தையை திசை திருப்பி ஈரான் மற்றும் முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் கீழ்ப்படிய வைக்க அமெரிக்காவின் ஒப்புதலுடன் திட்டமிட்டு இஸ்ரேலால் தூண்டப்பட்ட போர் நடவடிக்கை ஆகும் என்றும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி விளக்கியுள்ளது.

இரு கட்சிகளும் போர் ஆதரவு

அமெரிக்காவில் பிரதானமாக உள்ள இரு கட்சிகளுமே போரை ஆதரிக்கின்றன என்று கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த லிண்ட்சி கிரஹாம் முதல் ஜோன் ஃபெட்டர்மேன், ரிச்சி டோர்ரஸ் போன்ற ஜனநாயகவாதிகள் வரை, இஸ்ரேல் முழு பிராந்தியத்தையும், உலகையும் போர் மற்றும் பேரழிவின் பக்கம் இழுப்பதை ஆதரிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகள்

தொழிலாளி வர்க்கம், முற்போக்குவாதிகள் மற்றும் அமைதியை விரும்பும் அனைவரும், ஏகாதிபத்தியத்தின் போர்த்திட்டத்தை எதிர்க்க வேண்டும்; ஈரான் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள எங்கள் சகோதர கட்சிகளின் அழைப்புகளையே நாங்களும் எதிரொலிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அத்துமீறிய மற்றும் ஆபத்தான செயல்களைக் கண்டிக்கும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, உலகளாவிய தொழிலாளர் மற்றும் அமைதி இயக்கங்களுடன் இணைந்து பின்வரும் கோரிக்கைகளை வெளியிட்டுள்ளது:

Exit mobile version