Site icon சக்கரம்

‘‘எப்ஸ்டீன் கோப்புகள், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தான் நாட்டுக்கு அவமானம்’’ – மோடிக்கு ராகுல் பதில்

காங்கிரஸ் கட்சி அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டிய நிலையில், எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமரின் பெயர் இடம்பெற்றுள்ளது மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் நலன்களை மத்திய அரசு விற்றது ஆகியவை தான் நாட்டின் அவமானம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபற்றி ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மோடிஜி, நீங்கள் அவமானத்தைப் பற்றிப் பேசுகிறீர்களா?. அவமானம் என்றால் என்ன என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். எப்ஸ்டீன் கோப்புகளில் உங்கள் பெயர், உங்கள் அமைச்சர் மற்றும் உங்கள் நண்பரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. உங்கள் பெயர்கள் ஒரு மோசமான குற்றவாளியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதான் அவமானகரமான விஷயம். நீங்கள் அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தம், அதில் நீங்கள் நாட்டையே விற்றுவிட்டீர்கள், இது வெட்கக்கேடானது.

அமெரிக்காவிடம் நீங்கள் நாட்டின் தரவுகளை ஒப்படைத்துவிட்டீர்கள். நீங்கள் விவசாயிகளை அழித்துவிட்டீர்கள். நீங்கள் ஜவுளித் தொழிலை அழித்துவிட்டீர்கள். இது வெட்கக்கேடானது. அமெரிக்காவில் அதானிக்கு எதிராக நடந்து வரும் வழக்கு உங்களை தூங்கவிடாமல் செய்தது என்பது முழு நாடும் அறிந்ததே. ஏனென்றால் அது பா.ஜ.க மற்றும் உங்கள் நிதிக் கட்டமைப்பிற்கு எதிரான வழக்கு. 14 மாதங்களாக, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அது வெட்கக்கேடானது” என்று தனது பதிவில் குறிப்பிட்டார்.

மேலும் அவர், “மோடிஜி, உங்கள் நண்பர்கள் அனில் அம்பானி, அதானி மற்றும் உங்களுக்கு எது பொருத்தமானதோ அதைச் செய்யுங்கள். நானும் காங்கிரஸின் சிங்க இதயம் கொண்ட வீரர்களும் நாட்டைப் பாதுகாப்போம். நாங்கள் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம். பிரதமரின் கண்களில் பயம் இருக்கிறது. அதனால்தான் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியை அவர் எதிர்கொள்ளவில்லை” என்று கூறினார்.

அமெரிக்க மக்​களின் மனநிலை என்ன?

மெரிக்க அதிபர் ட்ரம்ப் கொள்​கைகள் மீது 60 சதவீதம் பேர் அதிருப்தி கொண்டிருப்பதாக ஓர் ஆய்​வில் தெரியவந்​துள்​ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலை​மையி​லான அரசின் கொள்கைகள் குறித்து ஏ.பி.சி நியூஸ் (ABC News), வாஷிங்​டன் போஸ்ட் (Washington Post) ஆகியவை இப்​சோஸ் (Ipsos) நிறு​வனத்​தின் அறி​வுத்​திறன் குழுவினருடன் இணைந்து ஒரு ஆய்வை நடத்​தி​யது.

அமெரிக்காவின் பண வீக்​கம், மற்ற நாடு​களின் பொருட்​கள் மீதான இறக்​குமதி வரி, வெளி​நாட்டு உறவு​கள் மேலாண்மை ஆகிய பிரிவு​களில் இந்த கருத்​துக்​கணிப்பு அமெரிக்க மக்​களிடம் நடத்​தப்​பட்​டது.

இந்த ஆய்​வு​களின் முடி​வில் பெரும்​பாலான மக்​கள் அமெரிக்க அதிபரின் கொள்​கைகள் மீது அதிருப்தி அடைந்​துள்​ளனர் என்று தெரிய​வந்​துள்​ளது.

ஒட்​டுமொத்​த​மாக 60 சதவீதம் பேர் ட்ரம்ப்​பின் கொள்​கைகளை விரும்​ப​வில்லை. இந்த ஆய்​வானது, அதிபர் விதித்த வெளி​நாட்டு பொருட்​கள் மீதான வரியை, அமெரிக்க நீதிமன்​றம் ரத்து செய்​வதற்கு சற்று முன்​பாக நடத்​தப்​பட்​டது.

அதிபர் ட்ரம்ப், பண வீக்​கத்​தைக் கையாளும் விதத்தை 3 அமெரிக்கர்​களில் 2 பேர் ஏற்கவில்லை. 10 பேரில் ஆறு பேர் இறக்குமதி செய்​யப்​பட்ட பொருட்​களின் மீதான வரிகள் விவகாரத்​தில் அவர் கையாளும் விதத்​தை​யும் விரும்​ப​வில்​லை.

குடியேற்​றம் தொடர்​பான ட்ரம்ப்​பின் கொள்​கைகளை 58 சதவீத மக்கள் எதிர்த்துள்ளனர். அதே​போல் 57% பேர் ஒட்​டுமொத்​த​மாக பொருளா​தா​ரக் கொள்​கைகள் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் கையாளும் விதத்​தை​யும் ஏற்​க​வில்லை என ஆய்​வில் தெரியவந்துள்ளது.

மேலும், வெளி​நாட்டு உறவு​கள் விவ​காரத்​தில் அவர் கையாளும் விதத்தை 62% பேர் ஏற்கவில்​லை. அதே​போல், நாட்​டின் மிகப்​பெரிய பிரச்​சினை​களைத் தீர்க்க யாரை அதிகம் நம்​பு​கிறார்​கள் என்று கேட்​ட​போது, பொது​மக்​களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்று 33% பேரும், ஜனநாயகக் கட்​சி என்று 31% பேரும், ‘இரண்டு பேருமே இல்​லை’ என்று 31% பேரும் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

இந்த ஆய்​வின்​படி, அமெரிக்க மக்​கள் இரு தரப்​பினரிட​மும் அதிருப்தி அடைந்​துள்​ளனர் என்​பது தெரி​கிறது. மேலும், பத்து அமெரிக்​கர்​களில் ஏழு பேர் அதிபர் ட்ரம்ப் நேர்மையானவர் அல்லது நம்​பக​மானவர் அல்ல என்​றும் தெரி​வித்​துள்​ளனர். இதில் பலர் டரம்ப் தனது அதிபர் பத​வியை சொந்த நலனுக்​காகப் பயன்படுத்​து​வ​தாக தெரிவிக்கின்றனர்​. இவ்​வாறு அந்​த ஆய்​வில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Exit mobile version