Site icon சக்கரம்

தந்தைக்கு மகனின் உருக்கமான பிறந்தநாள் வாழ்த்து

தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமல் ராஜபக்ஷ உணர்வுபூர்வமான வாழ்த்துச் செய்தியொன்றை இன்று அனுப்பியுள்ளார். தனது சிறைக்கூடத்தின் சுவர்களையும் தாண்டித் தந்தை மீதான அன்பும் மரியாதையும் நிலைத்திருப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையின் பிறந்தநாளையொட்டிப் பகிரப்பட்ட இச்செய்தியில், தனது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிந்து, கடினமானதொரு காலகட்டத்தைக் கடந்து கொண்டிருப்பதால், தந்தையின் அருகிலிருந்து நேரடியாக வாழ்த்துத் தெரிவிக்க முடியாமல் போனதாக நாமல் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதற்குத் தனது தந்தை கற்றுக்கொடுத்த பாடங்கள், தைரியம் மற்றும் அவர் காட்டிய முன்மாதிரிகளே தனக்குப் பலத்தைத் தந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வரலாற்றில் மிக இருண்ட காலகட்டமொன்றில் தனது தந்தை வழங்கிய தலைமைத்துவத்தை நினைவுகூர்ந்த நாமல், எவ்வித அச்சமுமின்றி உறுதியாக நின்று எண்ணற்ற குடும்பங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ அமைதியைப் பெற்றுக்கொடுத்தார் எனத் தெரிவித்துள்ளார்.

பாரிய பொறுப்புக்களைத் தோளில் சுமந்தவாறு, தனது தந்தை வெளிப்படுத்திய பொறுமை, தைரியம் மற்றும் மனஉறுதி ஆகியவற்றைத் தற்போது தான் மிகவும் ஆழமாகப் புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உண்மைக்காகப் போராடும் போது தான் எதிர்கொள்ளும் கஷ்டங்கள், ஒரு தந்தைக்குத் தேவையான மனவலிமையைத் தான் நன்கு புரிந்துகொள்ள உதவியுள்ளதாகவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

தந்தையின் பிறந்தநாளில் தன்னால் அவருடன் இருக்க முடியாவிட்டாலும், தனது பிள்ளைகள் தமது பாட்டனாரை நேரில் சென்று சந்தித்து, தன் சார்பாக அவரை அரவணைப்பார்கள் எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

கஷ்டங்கள், அரசியல் அழுத்தங்கள் மற்றும் அவமானங்களைத் தாங்கிக்கொண்டு, கிருவபத்துவவில் ஆழமாக வேரூன்றிய ஒரு மனிதராக மஹிந்த ராஜபக்ஷவை வர்ணித்துள்ள நாமல், அவருக்கு நல்ல ஆரோக்கியம், மனவலிமை மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்தியுள்ளார்.

“தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்பு என்பது, தூரத்தால் கூட உடைக்க முடியாத ஒன்றாகும்” எனவும் நாமல் தனது செய்தியில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

To my lovely father,

Lovely father,

On your birthday this year, although I’ve had to go through this difficult time separating from family and loved ones that can’t stand by your side and wish you, I’m feeling endlessly the love and respect I have for you beyond the jail.

The love, example, and life lessons from our parents strengthen us when we face challenges we never expected.

Dad, you taught us that leadership is not just about holding a position. Your life showed us that it’s about accepting responsibilities, persevere in the face of challenges, and being brave for what you believe in.

In one of the darkest periods of our country’s history, you are the brave leader who created peace for thousands of mothers, fathers and loving Dua children in the motherland without fear of anyone. As a son, I know very closely about the responsibilities, sacrifices and many things you have endured in the face of challenges.

In this difficult time I am facing today, I am deeply understanding the value of patience, courage, and unshakable determination you taught me. You taught me how strong a father’s heart should be. You taught me how to be a father to all the children of the world as a strong father, finding the deepest place in the heart. I am also a father who endures all this and fighting for the truth. Although I may not be by your side today, the children of my inherited your blood will be by your side today. They will hug you for me. Because hands couldn’t hug you, thought of hugging you with letters. That’s because the bond between a father and a son cannot be broken by distance.

To my father who stepped on the earth of Mahinda Rajapaksha in Giruvapattuwa in the face of the hardships and heat pressure abuse you had to experience in the political environment, I, your beloved elder son, wish you good health, mental strength and unlimited love.

Happy birthday to my dear dad!
With love from the bottom of my heart,
Your lovely elder son,
Namal

Exit mobile version