பயங்கரவாதத்தை ஒழிக்க வெளிநாட்டு பாதுகாப்புப் பிரிவினர் இலங்கையில் தங்கியிருப்பார்கள்!

பிரதமர் ரணில்

லங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பாதுகாப்புப் பிரிவினரின் உதவியுடன் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருக்கிறார்.

எல்பிட்டியவில் ஒரு பகிரங்க நிகழ்ச்சியில் பேசும்போதே பிரதமர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்தும் பேசிய பிரதமர், வெளிநாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் நாட்டில் தங்கியிருப்பதற்குக் காரணம் அவர்களது நாட்டுப் பிரஜைகள் ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டமையாகும் என்றார்.

ஆனால், எந்தநாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் நாட்டில் தங்கியுள்ளார்கள் என்பதையும், அவர்கள் எப்பொழுது இலங்கைக்கு வந்தார்கள் என்பதையும் பிரதமர் குறிப்பிடவில்லை.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின்போது இலங்கையில் தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.

பிரதமரின் கூற்றுப்படி கொல்லப்பட்ட ஒவ்வொரு வெளிநாட்டவரினதும் பாதுகாப்புப் பிரிவினர் தமது பிரஜைகளின் பாதுகாப்புக் கருதி இலங்கைக்கு நிலைகொள்வார்களா என்பதும் தெரியவில்லை.

பிரதமரின் இக்கருத்து அமைச்சரவை அங்கீகாரம் பெற்றதா என்பதும் தெரியவரவில்லை.

Tags: