3850 ஐ.தே.க. ஆதரவாளர்கள் விளையாட்டுத்துறை போதனாசிரியர்களாக நியமனம்!
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் 3,850 ஆதரவாளர்கள் நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு விளையாட்டுத்துறை போதனாசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரிய சங்கத்தின் தலைவர் யோசப் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், பொதுவாக பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் 6 பாடங்களில் சித்தியடைவோரே இவ்வவாறான பதவிகளுக்கு நியமிக்கப்படும் நடைமுறை உள்ளது. அத்துடன் நியமனம் வழங்கப்படுவதற்கு முன் தகுதிகாண் பரீட்சை ஒன்றும் நடத்தப்பட வேண்டும். ஆனால் இவை எதுவும் இந்த நியமனத்தின் போது பின்பற்றப்படவில்லை. இதுதவிர, இன்னும் இன்னும் 20,000 விண்ணப்பதாரிகள் இப்பதவிக்காக காத்திருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
இதுபற்றி தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின் பாடசாலைகளின் நிலைமை பற்றிக் குறிப்பிட்ட அவர், நகரப்புறங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்படாமல் பாடசாலைகளைத் திறப்பது சரியல்ல எனவும், கிராமப்புறங்களில் பிள்ளைகளின் வரவு 30 சதவீதமாகவே இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.