கனடாவில் மாநகர முதல்வருக்கு எதிராக இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்!

Image result for demonstration in brampton Sri Lankans

னடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் இருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றான பிறம்ரன் (Brampton)  மாநகர முதல்வருக்கு எதிராக இலங்கையர்கள் பெருமளவில் கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

அண்மையில் பிறம்ரன் மாநகர சபை அதன் முதல்வர் பற்றிக் பிறவுண் (Patrick Brown) தலைமையில் கூடி இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்துள்ளது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. இதற்கு எதிராகவே இலங்கையர்கள் முதல்வர் பிறவுணுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஒரு இனத்தை அல்லது மதத்தைச் சார்ந்தவர்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திட்டமிட்டு அழிக்கப்பட்டால்தான் அதை ‘இனப்படுகொலை’ என அழைக்க முடியும். இலங்கையில் அப்படி நடக்கவில்லை. அங்கு நாட்டை அழித்து வந்த பயங்கரவாத இயக்கமே அழிக்கப்பட்டது. அது இனப்படுகொலை அல்ல. ஐ.நாவோ அல்லது வேறு எந்தவொரு நாடுமோ இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என ஏற்றுக்கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

பிறம்ரன் மாநகர முதல்வருக்கு இலங்கை நிலவரம் பற்றிச் சிலர் தவறான தகவல்களை வழங்கியுள்ளனர். அவரும் தமிழர்களின் வாக்குகளைக் கவர்வதற்காக அதை ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறம்ரன் மாநகர முதல்வர் பிறவுண் வலதுசாரி கொன்சவேர்டிக் கட்சியைச் சேர்ந்தவர். அக்கட்சியின் ஒன்ராறியோ மாகாணத் தலைவராக இருந்த அவர், சில குற்றச்சாட்டுகள் காரணமாக தலைமைப்பதவியில் இருந்து விலகியிருந்தார். பின்னர் பிறம்ரன் மாநகர முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.

தற்பொழுது ஒன்ராறியோ மாகாணத்தில் டக் போர்ட் (Doug Ford)  தலைமையிலான வலதுசாரி கொன்சர்வேட்டிக் கட்சி அரசாங்கமே பதவியில் உள்ளது. அக்கட்சி சார்பாக லோகன் கணபதி, விஜேய் தணிகாசலம் என்ற இரண்டு இலங்கைத் தமிழர்கள் போட்டியிட்டு வெற்றிபெற்று, ஒன்ராறியோ சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

Tags: