வானியல் விந்தை – ஒழுங்கின்மைக்குள் ஓர் ஒழுங்கு
சூரியனில் இருந்து ஒவ்வொரு கோளும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதை வானியல் அலகு (Astronomical Unit – AU) என்பதை வைத்து சொல்லுகிறார்கள்.
வானியல் அலகு என்றால் என்ன?
பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம்தான் வானியல் அலகு.
இதன் மதிப்பு ஒன்று.
ஆகவே ஒன்றை விட அதிகமான வானியல் அலகு என்றால் , பூமியை விட அதிக தூரத்தில் அந்த கிரகம் இருக்கிறது என அறியலாம்
ஒரு வானியல் அலகு = 93 மில்லியன் மைல் / 14,95,97,871 கிலோ மீட்டர்.
சுருங்கச் சொன்னால் ஒரு AU என்பது 14,95,97,871 கிலோமீட்டர்கள்.
புதன் – சூரியன் தூரம் – 0.387. அதாவது வானியல் அலகு 0.387 AU
வெள்ளி – 0.722 AU
பூமி – 1 AU
செவ்வாய் – 1.52 AU
வியாழன் – 5.2 AU
சனி – 9.58 AU
யுரெனஸ் – 19.2 AU
நெப்டியூன் – 30.1 AU
சரி.. இதை எளிதாக நினைவில் கொள்வது எப்படி ?
ஸ்மார்ட் போனில் கூகிள் செய்வது எளிதுதான் என்றாலும் , இந்த தூரங்களுக்குள் இருக்கும் ஒரு பேட்டர்னை கண்டு பிடித்தவர்களின் ஆர்வத்தை புரிந்து கொள்ளும் பொருட்டு விளக்கம்
0 3 6 12 24
இதை நினைவில் கொள்ளுங்கள்
இவற்றுடன் நான்கை கூட்டி , 10 ஆல் வகுத்து விடுங்கள்
நமக்கு கிடைப்பது:
0.4 0.7 1 1.6 5.2 10 19.6 38
கிட்டத்தட்ட தூரங்கள் மேட்ச் ஆகின்றவா அல்லவா
பார்ப்பதற்கு ஒழுங்கினமை போல தெரிந்தாலும் அவற்றுக்குள் ஓர் ஒழுங்கு இருப்பது ஆச்சர்யம்
யார் இப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதுதானே மனித இனத்தின் இடை விடாத தேடல் !!
நன்றி: பிச்சைக்காரன் blog