அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு எதிராக இலங்கையில் எழுந்துள்ள எதிர்ப்புகளை இந்தியா அவதானித்து வருகின்றது
இலங்கையில் ஓர் அமெரிக்க இராணுவத் தளத்தை அமைப்பதற்கு ஏதுவான அமெரிக்காவுடனான உத்தேச ஒப்பந்தம் (சோஃபா – Status of Forces Agreement – SOFA) தொடர்பாக இலங்கையில் எதிர்ப்புக்கள் அதிகரித்து வருவதால், இந்தியா அதனை உன்னிப்பாக கவனித்து வருவதாக எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை பிரதமர் புதன்கிழமை தனது நாடு இறையாண்மையை மீறும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடென்ற வகையில், கொழும்பின் முடிவை மதிக்க வேண்டும் என்பது இந்தியாவின் கருத்தாக உள்ளது.
“இந்த விஷயத்தில் கொழும்பின் முடிவை டெல்லி மதிக்கும். இந்தியாவுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நமது சுற்றுப்புறத்தைப் பொறுத்தவரை இது ஒரு உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் எக்கனாமிக் டைம்ஸ் இடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நலன்களுக்கு பொருந்தாத எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் வார இறுதியில் கூறினார்.
அமெரிக்க அரசாங்கத்தின் விமானங்களும் கப்பல்களும் இலங்கையில் தரிப்பதற்கான அனுமதி கோருதலிருந்தும் மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்துதலிருந்தும் விடுபட வேண்டும் என்றும் அமெரிக்கா இலங்கைக்குள் உரிமங்கள், சுங்க வரி, வரி மற்றும் வேறு எந்த கட்டணங்களிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் சோஃபா ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா முயல்கிறது. மேலும், ஆயுதங்கள் மற்றும் வானொலி தகவல்தொடர்பு உபகரணங்களை எடுத்துச் செல்லும்போது, இலங்கையின் எந்தப் பகுதியிலும் “கடமையில்” இருக்கும்போது சீருடை அணிய அமெரிக்கா தனது துருப்புக்களுக்கு அங்கீகாரமும் அந்த ஒப்பந்தத்தில் வழிவகுப்படுகின்றது.
அமெரிக்க துருப்புக்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ தங்கள் அமெரிக்க அடையாளத்தை மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் இலங்கைக்குள் நுழையவும் வெளியேறவும் அனுமதிக்க வேண்டும் என வாஷிங்டன் கோருகின்றது. இது இலங்கைக்குள் நுழையவும் போது அவர்கள் கடவுச்சீட்டு;களையோ அல்லது விசாக்களையோ எடுத்துச் செல்லமாட்டார்கள் என்பதாகும்.