மரணதண்டனைக்கு 94.35 வீதமானோர் ஆதரவாக உள்ளதாக கருத்துக்கணிப்புத் தெரிவிக்கின்றது
ஜூலை 30, 2019
அனுராதபுரத்தில் உள்ள வாலிசிங்க ஹரிச்சந்திர மைதானத்தில் நடைபெற்ற இலங்கை நிறுவனக் கண்காட்சியில் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 94.35 சதவீத மக்கள் போதைப்பொருள் மோசடி செய்பவர்கள் மற்றும் கற்பழிப்பவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்க ஆதரவாக உள்ளனர் என்பதைத் தெரிவிக்கின்றது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த மின்னணு கருத்துக் கணிப்பு ஜனாதிபதி செயலகத்தால் அமைக்கப்பட்ட சாவடியில் நடாத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில், 20,992 நபர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 94.35மூ பேர் மரண தண்டனைக்கு ஆதரவாக வாக்களித்து, மேற்கண்ட குற்றத்தைத் தடுப்பதற்கு இது நல்ல பயனையளிளிக்குமெனவும் தெரிவித்துள்ளனர்.