கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் கைது

னந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ்  (Garnier Banister Francis) இன்று (16.12.2019) இலங்கை நேரம் மாலை 4.30 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகளால், சுவிஸ் தூதரக பணியாளர் இன்று மாலை 5 மணியளவில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் அவரை பிணையில் விடுவிக்க விண்ணப்பம் செய்தனர். எனினும் அவரைப் பிணையில் விடுவிக்க குற்ற விசாரணை அதிகாரிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த நிலையில் சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிசை டிசெம்பர் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இதற்கு முன்னதாக, இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த பணியாளர், அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில்,  தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில், விசாரணைகளுக்காக, இன்று ஆஜரான நிலையில், அங்கொடை மனநல வைத்தியசாலை அனுப்பிவைக்கப்பட்டார்.

அதனையடுத்து, அங்கொடையில்  இடம்பெற்ற மேலதிக பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக்கப்பட்டார்.

Image result for சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர்"

குறித்த பணியாளரின் மனநல பரிசோதனை அறிக்கை கிடைத்ததன் பின்னர், ​அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

அந்த பணியாளர் வழங்கிய சாட்சியங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் அவரின் மனநிலை குறித்து பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் பணித்தமை குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 25ந் திகதி சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பிரதம நீதிவானிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ள குற்ற விசாரணைப் பிரிவினர்,

‘சென்.பிரிஜெட் கொன்வென்ட் அருகிலேயே இந்தக் கடத்தல் இடம்பெற்றதாக சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் கூறியிருந்தாலும், அவர் குற்ற விசாரணைப் பிரிவில் அளித்த வாக்குமூலத்தில் இருந்து, அத்தகைய சம்பவம் எதுவும், அந்த இடத்தில் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது .

கடந்த 8 மற்றும் 9ஆம் நாள்களில் குற்ற விசாரணைத் திணைக்களத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில், கொள்ளுப்பிட்டி பல்மேரா கோர்ட் அடுக்குமாடி அருகிலேயே சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

குற்ற விசாரணைத் திணைக்களம் இதுவரை நடத்திய விசாரணையின் படி, அவர் கூறியபடி இலக்கம் 202 / 2, பல்மேரா கோர்ட், பல்மேரா அவென்யூ, கொழும்பு- 03 இல், எந்தவொரு சம்பவமும் இடம்பெற்றதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

டிசம்பர் 8 ம் நாள் அவரது முழு வாக்குமூலத்தையும் பதிவு செய்ய முடியவில்லை. அவர் தனது வாக்குமூலம் அளிக்கும் போது இரண்டு முறை மயக்கம் அடைந்தார்.

அவர் வாக்குமூலம் அளிக்கும் போது, தூதரக மருத்துவர் மற்றும் தூதரக அதிகாரிகள் அவருக்கு மிக அருகில் இருந்தனர்’

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவமானது நடக்காத ஒன்று என, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Image result for சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர்"

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16.12.2019) இடம்பெற்ற ஊடக மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது, அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ,இவ்வாறான சம்பவமொன்று இடம்பெறவில்லை என்பது, விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் அலைபேசி தரவுகளின் ஊடாகவும் அவ்வாறான சம்பவமொன்று நடைபெற்றிருக்கவில்லையென தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்டவராக நான்தான் மாறினேன். ஏனென்றால் நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன் வெள்ளை வான் பற்றிய குற்றச்சாட்டுகள் வெளிவந்தன.

இந்தச் சம்பவம் சர்வதேச ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டன. அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் சஜித் பிரேமதாசவால் கூட அறிக்கை விடப்பட்டது.

பெண் பணியாளர் குற்றச்சாட்டுவது போன்று கடத்தல் சம்பவம் இடம்பெறவில்லை என்பது தொழில்நுட்ப மற்றும் பிற சான்றுகள் நிரூபித்துள்ளன.

தனது ஊழியர் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணையொன்று கோரிக்கை விடுக்கும் பொறுப்பு குறித்த  தூதரகத்துக்கு இருந்தது. பிரதமர் விசாரணைகளுக்கு உத்தரவிட்டார். தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த ஊழியரின் ஒத்துழைப்பு தேவை” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Tags: