‘சாகசத்தின் பின்னாலுள்ள உண்மை’ – ஆவணப்படம்
பிப்ரவரி 27, 2021

இது இலங்கை தமிழ் சமூகத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்கள் குறித்த ஓர் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ஆவணப்படம் முதன்முறையாக எப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி விலங்குகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றார்கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றது. இலங்கையில் வாழும் அமைதியை நேசிக்கும் தமிழர்களின் தற்போதைய நிலைமை மற்றும் கள யதார்த்தத்தைக் குழப்பி, இலங்கை தொடர்பாக புனையப்பட்ட கதைகளை பரப்புகின்ற பல்வேறு வகைப்பட்ட சக்திகளின் செல்வாக்குக் குறித்தும் இந்த ஆவணப்படம் ஆராய்கின்றது.
முள்ளிவாய்க்காலில் இறந்த புலிகளுக்கு நினைவுச்சின்னம் நிறுவுவதற்குப் பதிலாக, உண்மையில் புலிகளால் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்ட குழந்தைப் போராளிகளுக்கு நினைவுச்சின்னம் நிறுவ வேண்டும்.