செவ்வாய் கிரகத்தில் முதலாவது நகரம்
–HOLDEN WALTER-WARNER
மனிதர்கள் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் நிலையில், ஏற்கனவே சிவப்புக்கோளில் நீடித்து நிலையாக நிற்கக்கூடிய நகரமொன்றினை உருவாக்குவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த திட்டங்கள் கட்டிடக்கலை ஸ்டுடியோ ABIBOO ஆல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம், அமெரிக்காவில் இரண்டு அலுவலகங்கள் உட்பட, உலகம் முழுவதும் பல அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
நியூவா (Nüwa) என்றழைக்கப்படுகின்ற தலைநகரமானது, செவ்வாய் கிரகத்தில் டெம்ப் மென்சாவில் (Tempe Mensa) திட்டமிடப்பட்டுள்ள ஐந்து இடங்களில் ஒன்றாக, செங்குத்தான குன்றொன்றின் பக்கவாட்டில் கிடைமட்டத்திற்கு பதிலாக செங்குத்தாக அமைக்கப்படவுள்ளது. இவ்வாறான நிர்மாணம் வளிமண்டல அமுக்கம் மற்றும் கதிர்வீச்சின் விளைவுகளைக் குறைக்கும். தங்குமிடம் இல்லாமல் கதிர்வீச்சினைத் தாக்குப்பிடிக்க முடியாது.
அதிர்ஷ்டவசமாக, காபனீரொக்சைட்டும் நீரும் செவ்வாய் கிரக மேற்பரப்பிலிருந்து எடுக்க முடியும். இவை இரும்பை உருவாக்குவதற்கும், கிரகத்தின் மீதுள்ள பொருட்களிலிருந்தே பிரத்தியேகமாக நிர்மாணிப்பதற்கும் உதவுவதற்கு பயன்படுத்த இற்கு தேவையாக உள்ளது. இவையே நீடித்து நிலையாக நிற்கக்கூடியதை உருவாக்குகின்றது.
வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பசுமையான இடங்கள் உட்பட பூமியிலுள்ள நகரமொன்றின் சகல பிரதான அம்சங்களையும் இந்த நகரம் கொண்டிருக்கும். விண்வெளிக்கான வடிவமைப்புகள் செவ்வாய் கிரக சமூகம் மற்றும் ளுழுநேவ நெவறழசம் இல் செய்த விஞ்ஞான ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை.
‘நாங்கள் முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலைகளை புரிந்து கொள்ளவதற்கான முயற்சியில், கணனியை அடிப்படையாகக் கொண்டு நிறைய பகுப்பாய்வுகளை செய்ய வேண்டியிருந்ததுடன், விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றவும் வேண்டியிருந்தது’ என்று ABIBOO இன் நிறுவனர் Alfredo Muñoz, Euronews இடம் தெரிவித்தார்.
கட்டுமான வேலைகள் 2054 ஆம் ஆண்டிற்கு முன்னர் தொடங்குவதற்கு திட்டமிடப்படவில்லை என்பதோடு, குடியேறுவதற்கான சாத்தியம் 2100 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருக்கவும் முடியாது என்ற போதிலும், செவ்வாய் கிரகத்து நகரில் வசிக்கும் கனவு கொண்டவர்கள், அந்தக் கனவுகளை அவர்களது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு நகர்த்த வேண்டும்.
திட்டமிடப்பட்ட நகரத்தின் மக்கள் தொகை 250,000 ஆக இருக்கும். இதன் பெயர் ‘ஐந்து கற்களை உருக்கி வலுவான சமூகத் தூண்களைக் அளித்த, மனிதர்களின் பாதுகாவலரான புராண சீன பெண் தெய்வத்தின் வேர்களைக் கொண்டது’
செங்குத்தான குன்றின் உள்ளே, கட்டுமான நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றைக் காணலாம். செங்குத்தான பாறைக்குள் ‘பெரிய கட்டிடங்கள்’ அகழ்ந்து உருவாக்கப்படுகின்றன.
‘பசுமை-மாடங்கள’ (Green-Domes) கட்டுமானமும் இருக்கும். இது குடியிருப்பாளர்களுக்கான பூங்காக்களாகவோ அல்லது பரீட்சார்த்தமான முறையில் தாவரங்களை வளர்க்க முயற்சிக்கும் இடமாகவோ செயல்படும்.
நகரின் முக்கிய உணவுக்கான ஆதாரம் பயிர்ச்செய்கைகளிலிருந்து வரும். இது மக்களுக்குத் தேவையான அடிப்படை உணவுகளின் பாதியைப் பூர்த்தி செய்யும்.
‘மைக்ரோ அல்கா’ (Microalgae) மக்களின் அடிப்படை உணவுகளுக்கு ஜீவாதாரமானதொரு அங்கமாகவும் இருக்கும்.
பொழுது போக்குக்காக, விளையாட்டு முதல் முகாமிடுதல் மற்றும் கைவினைகள் வரை, மக்கள் பூமியில் செய்யும் அதேமாதிரியான பொழுதுபோக்குகளில் பெரும்பாலானவற்றில் ஈடுபட முடியும்.
சிவப்புக்கோளில் வாழ்வதற்கு விரும்புபவர்களை பூமியில் இருந்து செவ்வாய்க்கு அனுப்புவது என்பது சிக்கலானதொரு பணியாக இருக்கும். ஆனால் இப்பணி சாத்தியமற்றதொன்றல்ல.
ஒவ்வொரு 26 மாதங்களுக்கும் புறப்படும் வகையில், மக்களை எடுத்துச் செல்வதற்கு ஒரு விண்கலம் சேவை நிகழுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு பயணமும் ஒன்று முதல் மூன்று மாதங்கள் எடுக்கும்.
செவ்வாய் கிரகத்திற்கு குடியேறும் மக்களுக்கான ஒரு வழித்தட பிரயாணச்சீட்டின் விலை சுமார் 300,000 டொலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மூலம்: The first city on Mars
தமிழில்: சக்கரம்