தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி குவிக்கும் இந்தியா!
தடைகளை தாண்டி ரஷ்யாவிடம் இருந்து 35 டொலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி குவித்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை சுத்திகரித்து சொந்த தேவைக்கு மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இலாபம் ஈட்டி வருகின்றன. இதனால் ஆத்திரத்தில் அடைந்துள்ள அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த மூன்று மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது .
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.
தள்ளுபடி விலையில் வாங்கி குவிக்கும் இந்தியா
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. அதன்படி போருக்கு முந்தைய விலையில் ஒரு முதன்மையான உரல்ஸ் தரத்திலான கச்சா எண்ணெய் 35 டொலர்கள் தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு ரஷ்யா விற்பனை செய்கிறது.
டொலர் இல்லாமல் ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. அதாவது வர்த்தகத்தில் இந்தியா தரப்பில் ரூபாயிலும், ரஷ்யா தரப்பில் ரூபிளும் செலுத்தப்படுகிறது. இது மலிவான விலையில் இந்தியாவுக் கச்சா எண்ணெய் கிடைக்க வழியை ஏற்படுத்தியது.
மே மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ள கச்சா எண்ணெய் சாதனை அளவை எட்டியது. இந்தியா மே மாதத்தில் ஒரு நாளைக்கு 840,645 பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது.
இது ஏப்ரலில் 388,666 பீப்பாய்களாக இருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 136,774 பீப்பாய்களாக மட்டுமே இருந்தது. ஜூன் மாதத்தில் இது மேலும் உயரக்கூடும். ஜூன் மாத இறக்குமதியானது 1.05 மில்லியன் பீப்பாய் என்ற உச்ச எண்ணிக்கையை தொடும் என நம்பப்படுகிறது.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு ஏறக்குறைய 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது மொத்தத்தில் 2% ஆக மட்டுமே இருந்தது. எனவே இது மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 40 டொலர் விலைக்கும் குறைவாகவே ரஷ்யா வழங்குகிறது. இதனால் இந்தியாவின் அரசு எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் பெரும் இலாபம் ஈட்டி வருகின்றன.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளபோதிலும் இந்தியாவுக்கு தடை விதிக்கவில்லை. ஆனால் இந்தியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா விமர்சித்தது. ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அரசியலாக்கக் கூடாது, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தங்கள் அரசியலாக்கப்படக் கூடாது என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐரோப்பா, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி
இந்தியாவின் தேவைக்காக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது மட்டுமின்றி அதில் ஒரு பகுதியை சுத்திகரித்து பெட்ரோல் மற்றும் டீசலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் இலாபம் சம்பாதித்து வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் இந்த வாரம் ரஷ்யாவில் இருந்து கடல்வழி இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது, ஜெர்மனி மற்றும் போலந்துடன் சேர்ந்து குழாய் இறக்குமதியை முடிவுக்குக் கொண்டுவர உறுதியளித்தது, 27 நாடுகளின் கூட்டமைப்புக்கான ரஷ்யாவின் ஏற்றுமதியில் சுமார் 90% முடிவடையும்.
ரஷ்யாவின் பசிபிக் ஏற்றுமதிகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் முக்கிய வாங்குபவர்கள் உட்பட, ரஷ்ய கச்சா எண்ணெயின் பிற இறக்குமதியாளர்கள் தங்கள் கொள்முதலை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ இலக்கு வைத்துள்ளனர்.
இருப்பினும், உலகின் மிகப்பெரிய கச்சா இறக்குமதியாளரான சீனாவும், மூன்றாவது பெரிய நாடான இந்தியாவும், மற்ற சப்ளையர்களுடன் ஒப்பிடும்போது மலிவான விலையைப் பயன்படுத்திக் கொள்ள அதிக அளவு பொருட்களை வாங்கி, ரஷ்ய ஏற்றுமதியாளர்களுக்கு உயிர்நாடியை வீசியுள்ளன.
இந்தியாவின் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஆபத்து என்னவென்றால், அவர்களின் சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்பு ஏற்றுமதிகளை வாங்குபவர்கள் இந்த சரக்குகளை குறிவைக்கத் தொடங்குகிறார்கள், சில டீசல் அல்லது பெட்ரோல் ரஷ்ய கச்சா எண்ணெயில் இருந்து சுத்திகரிக்கப்படும் சாத்தியம் உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம்
தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் 1.2 மில்லியன் பேரல்கள் திறன் கொண்ட சுத்திகரிப்பு வளாகத்தை இயக்குகிறது. வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி அதனை பிரித்தெடுத்து பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலிய பொருட்களாக பெரும்பகுதியை ஏற்றுமதி செய்கிறது.
சிக்கா துறைமுகம் ரிலையன்ஸின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கையாளுகிறது. மே மாதத்தில் 10.81 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் இந்த நிறுவனத்துக்கு வந்துள்ளது. இதனை ரிலைன்ஸ் நிறுவனம் சுத்திகரித்து இதே துறைமுகத்தில் இருந்து 2.0 மில்லியன் பீப்பாய்கள் டீசலை மே மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
ஆனால் ரஷ்யா கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்கு மார்ச் 11-ம் தேதி அன்றே ஆஸ்திரேலியா தடை விதித்தது. இது ஏப்ரல் 24 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் அதே ரஷ்ய கச்சா எண்ணெய் இந்தியா வந்து இங்கு சுத்திகரிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு பெட்ரோல், டீசலாக செல்கிறது.
ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வாங்கி அதிக விலைக்கு ஆஸ்திரேலியாவுக்கு விற்பனை செய்கிறது. ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக வாங்க தடை விதித்துள்ள ஆஸ்திரேலியா இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளில் இருந்து வரும் ரஷ்ய பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுக் கொண்டுள்ளது.
ரஷ்யாவிடம் வாங்கி விற்பனை
சிக்கா துறைமுகம் மே மாதத்தில் ஐரோப்பாவிற்கு 2.56 மில்லியன் பீப்பாய்கள் டீசலை ஏற்றுமதி செய்தது. ஏப்ரல் மாதம் 890,000 பீப்பாய்கள் பெட்ரோலை அமெரிக்காவிற்கு அனுப்பியது. இவை ரஷ்யாவில் வாங்கப்பட்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதனால் ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு தடை விதித்ததால் இந்திய நிறுவனங்கள் மட்டுமே இலாபம் ஈட்டி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.
இந்தியா போன்ற மூன்றாவது நாட்டில் ரஷ்ய கச்சா எண்ணெயில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கும் தடையை நீட்டிக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் மட்டுமல்லாமல் இந்தியாவின் இரண்டாவது பெரிய சுத்திகரிப்பு ஆலையை இயக்கும் நயாரா எனர்ஜி நிறுவனமாகும். ரஷ்ய கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ஏற்றுமதி செய்வது ரிலையன்ஸ் மட்டுமல்ல நயாராக நிறுவனமும் செய்கிறது.
நயாரா ரஷ்யாவின் ரோஸ் நேபிட்டின் துணை நிறுவனத்திற்கும், சரக்கு வர்த்தகரான ட்ராபிகுராவின் துணை நிறுவனத்திற்கும் சொந்தமானது. இது குஜராத்தின் வாடினாரில் சுத்திகரிப்பு ஆலையை நடத்தி வருகிறது.
தடை விதிக்க முடிவு?
இந்த துறைமுகம் மே மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு 340,000 பீப்பாய்கள் டீசலை ஏற்றுமதி செய்தது, இது நயாராவால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி சீனா போன்ற நாடுகளும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை ஏற்றுமதி செய்கின்றன.
ஐரோப்பிய யூனியனின் எச்சரிக்கையால் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால், ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய கச்சா எண்ணெயில் இருந்த பிரித்தெடுக்கப்பட்ட பெட்ரால், டீசலை வாங்க ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் மறுத்தால் இந்திய நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
–இந்துதமிழ்
2022.06.02