கொரோனா தடுப்பூசியும், கொள்ளை மரணங்களும்!
– சீலன்
கோவிஷீல்ட்டு (Covishield) உற்பத்தியை நிறுத்தி விடுவதாக ‘ஆஸ்டராஜென்கா’ நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.கொரோனாவிற்கு பிறகு இளவயது மரணங்கள் உலகெங்கும் அதிகரித்து, இங்கிலாந்து, இந்திய நீதிமன்றங்களில் தடுப்பூசியின் பாதிப்பு வழக்குகள் குவிந்ததன் பின்னணியில் இந்த விவகாரத்தை அலச வேண்டும்;
சமீப காலமாக – கொரோனா தடுப்பூசிக்கு பிறகு – இளம் வயது மரணங்களை அதிகம் பார்க்கிறோம். நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்கும் இளையோர் மாரடைப்பிலும், சுவாசம் திணறியும் இறக்கும் போது இதயம் ரணமாகிறது. கொரோனா மற்றும் தடுப்பூசியால் உயிரிழந்தோர் குறித்த தரவுகளை ஆரம்பத்தில் இருந்தே தவிர்த்துவிட்டது அரசாங்கம். ஆகவே, எவ்வளவு மரணங்கள் தடுப்பூசியின் பக்க விளைவுகளால் நிகழ்ந்துள்ளது என்பதற்கான சரியான தரவுகள் இல்லை. கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் தரும் அச்சம் சொல்லில் அடங்காது.
எதிர்படுகின்ற பலரும் ஆஞ்சியோ (Angio) செய்து மூன்று ஸ்டென்ட் (Stent) வைத்துள்ளதாக சொல்வதைக் கேட்டுக்,கேட்டு மனசே மறத்து போயிற்று! மருத்துவமும், தொழில்நுட்பமும் முன்னேறியது என்று கிளிப் பிள்ளை போல் பேசும் மருத்துவர்களைப் பார்க்கும் போது, ‘முதல் மதிப்பெண் பெற்று, முட்டாளாகிவிட்டார்களே.. நமது மருத்துவர்கள்’ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.
ஆங்கில மருத்துவம் என்பது அடிமை மனோபாவத்தை மற்றவர்களுக்கு மட்டும் திணிக்கவில்லை. தனக்குத் தானே திணித்துக் கொண்டது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை அதிகம் வலியுறுத்தி மக்களை போட வைத்த அலோபதி மருத்துவர்களில் 800 பேர் இறந்துள்ளனர்! இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள். எனில், அது வேலைக்கு ஆகவில்லையா? அல்லது வேலையைக் காட்டிவிட்டதா?
இதோ, இன்றைய பத்திரிக்கை செய்தி. இளம் வயதில் இருதய சிகிச்சை மருத்துவருக்கே மாரடைப்பு! சேலம் அரசு மருத்துவமனை கழிவறையில் இருதய சிகிச்சை மருத்துவர் உயிரிழந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தையே அதிர வைத்துள்ளது.
அருணகிரி (33) இருதய சிகிச்சை பிரிவில் பட்டம் பெற்று மருத்துவராக உள்ள மருத்துவர். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் இருதயப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். வழக்கம் போல இன்றும் பணிக்கு வந்துள்ளார். காலை சுமார் 10 மணியில் இருந்து மருத்துவர் அருணகிரி பணி இடத்தில் இல்லாத நிலையில், பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். மருத்துவமனை ஊழியர்களில் ஒருவர் மாலை 4 மணியளவில் கழிவறைக்கு சென்ற போது, அங்கு மயங்கிய நிலையில் மருத்துவர் அருணகிரி கிடந்ததைப் பார்த்து, அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றதில், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தனர்.
இன்றைக்கு நகரங்கள் தொடங்கி கிராமம் வரைக்கும் ஒரு சர்வே எடுத்து மக்களிடம் கேட்டால், தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருவிலும் ஓரிருவர் கொரோனா தடுப்பூசிக்கு உயிர்பலியாகி உள்ளதையும், ஏகப்பட்டோர் பற்பல தடுப்பூசிக்கு பிறகு பற்பல உடல் உபாதைகளில் உழல்வதையும் இயல்பாக அறிய முடியும். இந்தக் கண்கூடான எளிய உண்மையை புறந்தள்ளி, இன்னும் சில மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசியால் பத்து லட்சத்திற்கு ஓரிருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என கதை அளந்து விடுகின்றனர். எத்தனை உண்மைகள் வெளி வந்தாலும், எதையும் காண மறுத்து, பரிசீலிக்க மறுத்து பேசுபவர்களிடம் என்ன பேசுவது..?
கொரோனாவின் வரலாறு 2013 இல் துவங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த குறிப்பிட்ட பரிசோதனைக் கூடம் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அடுக்கடுக்காக பல தரவுகள் உள்ளது. பயோ வார் எனப்படும் கிருமிகள் மூலம் தாக்குதல் வெகுநாட்களாக பேசப்படும் ஒரு விசயம் தான். 2015 இல் இருந்து கொரோனா வர இருப்பதை பில்கேட்ஸ் பேசி வந்ததை நாம் அறிவோம். நல்ல தயாரிப்பு இல்லாமல் செய்ய முடியாது.
இந்த புரத ஈட்டியின் வெவ்வேறு மாதிரிகளை படம் போட்டு காட்டுகின்றன!
சர்வதேச மருத்துவ இதழ்கள். ஊடகங்களின் வழியாக நேரேட்டிவ் எனப்படும் கதையாடல் உருவாகியுள்ளது. சீனாவின் சர்வாதிகார வெறி என்பதாகத் துவங்கியது. ஒரு கதை வௌவால் மூலமாக பரவியது என்று வந்தது. இன்னும் என்னனென்னவோ காட்சிப் பதிவுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு, மனித குலத்தை மிரட்டியது. ஆனால், பொருளாதார முடக்கு தற்காலிகமாக பல நாடுகளுக்கும் பலனளித்தது.
நிறைய உதிரி செய்திகளை அகழ்வாராய்ச்சி செய்து பார்த்தால் மட்டுமே கொரோனா மற்றும் தடுப்பூசி, மக்கள் தொகை தடுப்பு மருந்து நிறுவனங்களின் ஊழல் என்று பல தகவல்கள் வெளிவரும். இதில் ‘உலகளாவிய மருத்துவ மாபியா’ இருப்பது தற்போது பல்வேறு செய்திகள் மூலம் அம்பலமாகி வருகின்றன!
இந்தியாவில் பணக்காரன் வந்தால், ஓடிஓடி உபசரிப்பது, காலில் விழுவது, ராசியான ஆள் என்பதாக புகழ்வது.. என்று மூட நம்பிக்கைகள் நிறையை உள்ளன. அது போல, ‘மருத்துவர்களின் தலையில் ஒளிவட்டம் தெரிகிறது, அவர்கள் ஞானிகள்’ என்று நம்புவது.
கொரோனா தடுப்பூசி தயாரித்த ஆஸ்டராஜென்கா நிறுவனம் அளித்து வரும் ஊடக செய்திகள் பித்தலாட்டத்தின் உச்சம். ஊடகங்களில் வரும் ஒவ்வொரு செய்தியும் திரித்து அனுப்பி வைக்கிறார்கள். தடுப்பூசி வந்த போதே பக்கவிளைவுகளுக்கு இந்த நிறுவனமோ, இந்திய அரசோ பொறுப்பேற்க முடியாது என்று கூறிவிட்டார்கள். இது குறித்து கேள்வி எழுப்பும் ஆட்களை வதந்தி பரப்பியதாக நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது.
இப்போது பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஒப்புக் கொண்டு, ”நான்கு நாட்களில் இனி விற்பனையோ தயாரிப்போ செய்வதில்லை” என்று அறிவித்தது. அப்படியானால், இத் தடுப்பூசி ஏற்படுத்திய கடுமையான விளைவுகள், பாதிப்புகள் இன்னும் உள்ளது, அது வெடித்து கிளம்பலாம் என்று தான் பொருள்.
இங்கு நம்மூர் மருத்துவ சிகாமணிகள், தடுப்பூசியின் பாதிப்பு 48 நாட்களுக்கு பிறகு ஏற்படவே வாய்ப்பில்லை என்று கூறி வருகிறார்கள். ஆனால், அந் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி மருந்து ஆறு மாதங்களைக் கடந்தும் மரணங்களை ஏற்படுத்தியதாக வாதாடினார்கள், பாதிக்கப்பட்டவர்கள்! ஆக, அதற்கான தரவு உள்ளது.
இரண்டாவதாக மக்கள் பாதிப்பின் அளவை மிகைப்படுத்திப் பேசுகிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம், ”இதற்கான தரவுகள் இல்லையே..” என்கிறார்கள். இங்கு, தரவுகளை சேகரிக்க வேண்டியது சுகாதாரத் துறை, அதை மறுதலித்து அது மவுனிப்பதை யார் கேட்பது..?
தடுப்பூசி பாதிப்பு இளம் வயதினரை குறிப்பாக உடற் பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபாடுள்ள இளையோரின் இள வயது மரணங்களை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டியது யார்? சுகாதாரத் துறை. அவர்கள் மருத்துவ மாபியா கொள்ளைக் கூட்டத்தின் ஓர் அங்கமாக உள்ளனர்.
ஆஸ்ட்ராஜெனேகா, தேவை குறைந்தது காரணமாக, உற்பத்தி செய்யவில்லை. போட்டி நிறுவனங்களும் பல வந்துவிட்டன. எனவே, கொரோனா தடுப்பூசித் தயாரிப்பில் இருந்து விலகுவதாக அண்டப் புளுகு ஆகாசப் புளுகை வெளியிடுகிறது. இன்னும் தொடர்ந்தால் மானம் போய்விடும் என்பது மட்டுமல்ல, நிறுத்தச் சொல்லி நீதிமன்றமே நிர்பந்திக்க நேரிடும். ஆகவே, அவமானப்படுவதற்கு முன்பு, ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனமே சுதாரித்துக் கொண்டு, தன் தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக சொல்லி, ஜகா வாங்கியுள்ளது என்பதே உண்மை!