‘இந்தியாவையும், ரஷ்யாவையும் சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம்’

ந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் இந்தியாவையம் ரஷ்யாவையும் ஆழமான, இருண்ட சீனாவிடம் இழந்ததுபோல் தெரிகிறது. (எனினும்) அவர்கள், ஒன்றாக நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தைப் பெறட்டும்!” என்று தெரிவித்துள்ளார். மேலும், நரேந்திர மோடி, விளாடிமிர் புட்டின், ஜி ஜின்பிங் ஆகியோர் இணைந்து இருக்கும் புகைப்படத்தையும் அதில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, ட்ரம்ப் நேற்று (04.09.2025) வெளியிட்ட ட்ரூத் சமூக ஊடக பதிவில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோருடன் இணைந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்துள்ளார்” என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சீன செய்தித் தொடர்பாளர், “பிற நாடுகளுடனான சீனாவின் ராஜதந்திர உறவு என்பது மூன்றாம் தரப்புக்கு எதிரான நோக்கம் கொண்டதல்ல.” என அமெரிக்காவுக்கு பதிலளித்திருந்தார்.

டொனால்டு ட்ரம்ப்பின் உயர்மட்ட வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, “இந்திய, சீன, ரஷ்ய தலைவர்களுக்கு இடையேயான நட்புறவு ஒரு தொந்தரவு. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, உக்ரைன் ஆகிய நாடுகளுடன் இருக்க வேண்டும், ரஷ்யாவுடன் அல்ல.” என தெரிவித்திருந்தார்.

டொனால்டு ட்ரம்ப்பின் சமூக ஊடக பதிவு குறித்து கருத்து தெரிவிக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது. அதேநேரத்தில், பீட்டர் நவரோவின் தவறான கருத்துகளை அறிந்தோம். அவற்றை வெளிப்படையாக நிராகரிக்கிறோம் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

காருக்குள் ஒரு மணி நேரம் ரகசிய ஆலோசனை: பிரதமர் மோடியுடன் பேசியது பற்றி  ரஷ்ய அதிபர் புட்டின் விளக்கம்

சீனா​வின் தியான்​ஜின் நகரில் அண்​மை​யில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​.சி.ஓ) உச்சி மாநாடு நடை​பெற்​றது.

இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றனர். கடந்த 1-ம் திகதி எஸ்​.சி.ஓ உச்சி மாநாடு நிறைவடைந்த பிறகு அதிபர் புட்டின் தனது சிறப்பு காரில் ஹோட்​டலுக்கு புறப்​பட்​டார். அப்​போது பிரதமர் நரேந்​திர மோடியை​யும் அவர் தனது காரில் அழைத்​துச் சென்​றார். இரு தலை​வர்​களும் ஹோட்​டலுக்கு சென்ற பிறகும் காரில் இருந்து இறங்​க​வில்​லை. சுமார் ஒரு மணி நேரம் அதிபர் புட்டினும் பிரதமர் மோடியும் காரில் இரகசிய ஆலோ​சனை நடத்​தினர். இந்த பேச்​சு​வார்த்தை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து உள்​ளன.

இந்த சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் கடந்த 3 ஆம் திகதி நிருபர்​களுக்கு பேட்டி அளித்​தார். அப்​போது பிரதமர் மோடி​யுடன் காரில் பேசி​யது என்ன என்று நிருபர்​கள் அவரிடம் கேள்வி எழுப்​பினர். இதற்கு புட்டின் பதில் அளித்​த​போது, “உக்​ரைன் போர் தொடர்​பாக கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை அலாஸ்​கா​வின் ஆங்​கரேஜ் நகரில் சந்​தித்​துப் பேசினேன். இது தொடர்​பான விவரங்​களை பிரதமர் மோடி​யுடன் பகிர்ந்து கொண்​டேன்” என்றார்.

அதிபர் புட்டின் மேலும் கூறிய​தாவது: ‘இந்​தி​யா, சீனா, ரஷ்யா ஆகியவை நெருங்​கிய கூட்டாளி​கள். இந்த 3 நாடு​களில் கோடிக்​கணக்​கான மக்​கள் வசிக்​கின்​றனர். எங்​களது பொருளா​தா​ரம் மிக​வும் வலு​வாக இருக்​கிறது. எங்​களை யாராலும் மிரட்ட முடி​யாது, தண்​டிக்​க​வும் முடி​யாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது நட்பு நாடு​களு​டன் மோதல் போக்கை கடைபிடிக்​கக்​கூ​டாது. மிரட்​டும் தொனி​யில் பேசக்​கூ​டாது. வரி​வி​திப்பு மூலம் இந்​தி​யா, சீனாவை யாராலும் மிரட்ட முடி​யாது. அதிபர் ட்ரம்​பின் சொல்​லுக்கு இந்​திய, சீன தலை​வர்​கள் கட்​டுப்பட மாட்​டார்​கள்.

ரஷ்​யா, உக்​ரைன் இடையே 3 ஆண்​டு​களாக போர் நீடித்து வரு​கிறது. நிலங்​களை ஆக்கிரமிக்​கும் நோக்​கில் இந்த போர் நடை​பெற​வில்​லை. கிரிமி​யா, டோன்​ஸ்க், லுகான்ஸ்க், கேர்​சன் உள்​ளிட்ட பகு​தி​களில் ரஷ்ய மொழி பேசும் மக்​கள் பெரும்பான்மை​யாக வசிக்​கின்​றனர். ரஷ்​யா​வுடன் இணைய அவர்​கள் விருப்​பம் தெரிவித்​துள்​ளனர். இதுதொடர்​பாக தீர்​மான​மும் நிறைவேற்றி உள்​ளனர். அந்த பகுதி மக்​களின் விருப்பத்துக்கு மதிப்​பளிக்க வேண்​டும். இது​தான் ஜனநாயகம்.

உக்​ரைன் போர் தொடர்​பாக ட்ரம்​புடன் பேச்​சு​வார்த்தை நடத்​தினேன். இருண்ட குகையில் கடைசி​யில் வெளிச்​சம் தெரிவது போன்று தெரி​கிறது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி மாஸ்​கோவுக்கு வரலாம். அவரை வரவேற்க நாங்​கள் தயா​ராக இருக்​கிறோம்.

ட்ரம்ப் உடனான பேச்​சு​வார்த்​தை​யின்​போது நிலங்​களை பறி​மாற்​றம் செய்​வது தொடர்பாக எது​வும் பேச​வில்​லை. போர் தொடர்​பான முக்​கிய விவ​காரங்​கள் குறித்து மட்​டுமே பேசினோம். உக்​ரைனுடன் சுமுக தீர்வு எட்​டப்​ப​டா​விட்​டால் ரஷ்யா தொடர்ந்து இராணுவ நடவடிக்​கையை மேற்​கொள்​ளும். பின்​வாங்​கும் பேச்​சுக்கே இடமில்​லை.’ இவ்வாறு புட்டின்​ தெரிவித்​​தார்​.

“உலகின் வசமுள்ள தெரிவு… அமைதி அல்லது போர்!” – இராணுவ அணிவகுப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரை

மைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80 ஆம் ஆண்டு வெற்றி விழா இராணுவ அணிவகுப்புப் பேரணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்றதன் 80 ஆம் ஆண்டு வெற்றி விழா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட இந்த வெற்றி விழாவில், அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2015-க்குப் பிறகு இரண்டாவது முறையாக இத்தகைய பிரம்மாண்ட வெற்றி விழா இராணுவ அணிவகுப்புப் பேரணியை சீனா நடத்தி உள்ளது. சுமார் 70 நிமிடங்கள் நடைபெற்ற இன்றைய பேரணியில் 50,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், அணிவகுப்புப் பேரணியில் கலந்து கொண்டனர். மேலும், இதில் 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட அதிநவீன இராணுவ தளவாடங்கள் பங்கேற்றன. 80,000 அமைதிப் புறாக்களும் வண்ணவண்ண பலூன்களும் வானில் பறக்கவிடப்பட்டன.

மறைந்த சீன தலைவர் மா(வோ) சேதுங் அணிந்திருந்த உடையை அணிந்து கொண்டு வெற்றிப் பேரணியில் உரையாற்றிய அதிபர் ஜி ஜின்பிங், “இன்று மனிதகுலம் அமைதி அல்லது போர் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அதேபோல், வெற்றியா முழுமையான இழப்பா என்ற தேர்வையும் எதிர்கொள்கிறது. சீன மக்கள் வரலாற்றின் சரியான பக்கத்தில் உறுதியாக நிற்கிறார்கள்.” என தெரிவித்தார்.

அணிவகுப்பு தொடங்கியவுடன் ட்ரூத் சமூக ஊடகத்தில் தனது கருத்தை பதிவிட்ட டொனால்ட் ட்ரம்ப், “சீனா ஜப்பானிடமிருந்து சுதந்திரத்தைப் பெற அமெரிக்கா உதவியதை சுட்டிக்காட்டினார். அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்யும் விளாடிமிர் புட்டின், கிம் ஜோங் உன்னுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்.” என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சீனாவின் வெற்றிப் பேரணி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், இந்த அணிவகுப்பை அமெரிக்காவுக்கான சவாலாக நான் பார்க்கவில்லை என்றும் ஜி ஜின்பிங்குடன் மிகச் சிறந்த உறவை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்

சீன இராணுவ அணிவகுப்​பில் ரஷ்​யா, வட கொரி​யத் தலை​வர்​கள் பங்​கேற்​றது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்​சனம் செய்​துள்​ளார்.

இரண்​டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்​டு​களைக் குறிக்​கும் வகை​யில், சீனாவில் நேற்று விழா நடத்​தப்​பட்​டது. சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் நடை​பெற்ற இராணுவ அணிவகுப்பு விழா​வில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஈரான் அதிபர் மசூத் பெஜேஷ்கியன் உள்பட சீனா​வின் 26 நட்பு நாடுகளைச் சேர்ந்த தலை​வர்​கள் பங்​கேற்​றனர்.

சீனா​வின் நவீன ஏவு​கணை​களும் இராணுவத் தளவாடங்​களும் போர் விமானங்​களும் இந்த அணிவகுப்பு நிகழ்ச்​சி​யில் காட்​சிப்படுத்​தப்​பட்​டன. இந்த நிகழ்ச்​சி​யின்​போது இராணுவ வீரர்​களின் அணிவகுப்பு மரி​யாதையை திறந்​தவெளி வாக​னத்​தில் சென்று ஏற்​றுக்​கொண்ட ஜி ஜின்​பிங், “எந்​தவொரு அச்​சுறுத்​தலுக்​கும் சீனா அஞ்​சாது, மனிதகுலமானது போர் அல்​லது அமைதி ஆகிய​வற்​றில் ஒன்றை தேர்ந்​தெடுக்​கும் சூழலுக்கு மீண்​டும் தள்​ளப்​பட்​டுள்​ளது” என்று தெரி​வித்​தார்.

இந்த அணிவகுப்பு குறித்து தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யிருப்​ப​தாவது: வெளி​நாட்டு படையெடுப்​பாளர்​களிடம் இருந்து சீனா சுதந்திரம் பெறு​வதற்​காக அமெரிக்கா அளித்த மகத்​தான ஆதர​வை​யும், அமெரிக்கர்கள் சிந்​திய இரத்​தத்​தை​யும் அதிபர் ஜி ஜின்​பிங் குறிப்​பிடு​வாரா என்​பது மிகப்​பெரிய கேள்​வி​யாக உள்​ளது.

சீன வெற்​றிக்​காக உயி​ரிழந்த அமெரிக்​கர்​கள் மதிக்​கப்​படு​வார்​கள், நினை​வு கூரப்படுவார்​கள் என்று நான் நம்​பு​கிறேன். அமெரிக்கா​வுக்கு எதி​ராகச் செய்​யும் சதி​களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்​றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு வாழ்த்து​களை தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்​பிட்​டுள்​ளார்.

இந்​நிலை​யில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் சுமார் இரண்​டரை மணிநேரம் இருதரப்பு பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டனர். இந்த பேச்​சு​வார்த்​தைக்கு பின்​னர் ரஷ்ய நாட்​டுக்கு வரு​மாறு கிம் ஜாங் உன்​னுக்​கு, ரஷ்ய அதிபர் புட்டின் அழைப்பு விடுத்​துள்​ளார். இந்த அணிவகுப்பு நிகழ்ச்​சி​யில், அமெரிக்​கா, இந்​தி​யா, ஜப்​பான் உள்​ளிட்ட நாடு​களின் தலை​வர்​கள் கலந்துகொள்ளவில்லை.

ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டில் (எஸ்​.சி.ஓ) பங்​கேற்​ப​தற்​காக 2 நாள்​கள் சீனப் பயணம் மேற்​கொண்​டிருந்​த பிரதமர்​ மோடி, இந்​த அணிவகுப்​பில்​ கலந்​து​கொள்​ளாமல்​ ​நாடு திரும்​பி​ உள்ளார்.

Tags: