தயவு செய்து இங்கு யாரும் நீலி கண்ணீர் வடிக்க வேண்டாம்! முடிந்தால் ‘ஜீவநதி’ சந்தா தாரராக இணையுங்கள்!!
கலாமணி பரணீதரன்
ஜீவநதி பிரதம ஆசிரியர்
தொடர்புக்கு: jeevanathy@yahoo.com
‘ஜீவநதி’ சந்தா தாரர்கள் பொறுமை காக்க. ‘ஜீவநதி’ இதழ் 12 ஆண்டுகளுக்கு மேலாக விற்பனைக்கு அப்பால் எனது தனிப்பட்ட பண வைப்பீட்டில் தான் இதுவரை சுமூகமாக மாத முதல் கிழமைகளில் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது பேப்பர், அச்சு செலவு கூடி உள்ளது. என்னால் தொடர்ந்து இந்த செலவீனத்தை ஈடு செய்ய முடியாதுள்ளதால் இனிவரும் காலங்களில் ஜீவநதி குறித்த திகதியில் வராது.
*ஜீவநதியில்
எழுதும் பலர் இலவச பிரதிகளை எதிர்பார்க்கிறார்கள்.
*தமது ஆக்கம்
வந்தால் மட்டும் வாங்குகிறார்கள்.
*இதுவரை 500 இற்கும் அதிகமான வேறு வேறு படைப்பாளிகள் எழுதியுள்ள போதும் அவர்களில் மிக சிலரே தொடர்ந்து
வாங்கு கிறார்கள்: வாசிக்கிறார்கள்.
*பலர் முகப்புத்தக ‘லைக் கேர்ஸ்’., ‘கமெண்ட்டர்ஸ்’ (வாய் சொல்வீரர்).
*பலர் சந்தாவை புதுப்பிப்பது இல்லை. ஒரு வருடதுக்கு காசு
கட்டினால் ஆயுள் சந்தா கட்டியது போல பந்தா.
*சிலர் சந்தாக்களை கட்டி விட்டு தம்மை விமர்சிக்க கூடாது என்ற
மன நிலையில் இருக்கிறார்கள். விமர்சித்தால் கோபம் போட்டு விடுவார்கள்.
* புத்தகம் விற்கும் கடைகள் காசுகளை குறித்த மாதத்தில்
தரமாட்டார்கள். (சிலர் 16, 17 மாதம் கழித்து தான் தருகிறார்கள். தரும் போது மீள தரும்
புத்தகங்களின் நிலையோ மிக பரிதாபம்)
சிலர் கட்டுரை அனுப்பும்
போது சும்மா ஒரு பேச்சுக்கு சந்தா காட்டுவதாக தாமாக பில்ட் அப் கொடுப்பார்கள்.
எனக்கு அவர்களது மன நிலை புரியாது என நினைக்கிறார்கள் போலும்.
* தாமாக புத்தகம் விற்று தருவதாக வாங்கி சென்ற பலர் பணத்தை
தருவதில்லை.
இப்படி நூறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் 6000- 15000வரை எனது பணத்தை செலவழித்து தான் ‘ஜீவநதி’ குறித்த திகதியில் வந்தது. தொடர்ந்து சாதாரண தொழிலாளியான என்னால் குறித்த திகதியில் ‘ஜீவநதி’ ஐ வெளியிட முடியாது.
தயவு செய்து
இங்கு யாரும் நீலி கண்ணீர் வடிக்க வேண்டாம். முடிந்தால் சந்தா தாரராக இணையுங்கள்.
கடைசி 4 மாத இதழ்களின் பணம் அச்சகத்துக்கு கொடுத்தால் தான் இந்த இதழை அச்சகத்தார் தருவார்கள் என்ற செய்தி அறிந்த உடன் கலாநிதி தே .முகுந்தன் தனது பாடசாலை சென்.பற்றிக்ஸ் இற்கு சந்தா கொடுத்துள்ளார். இவர் ஏற்கனவே 2 சந்தா செலுத்தி வருகிறார். அத்துடன் மூத்த எழுத்தாளர்களான க.சட்டநாதன் சேர் , அ .யேசுராசா சேர் தாம் ஒருதொகை பணத்தை கை மாறாக தரவா என தொலை பேசியில் அன்புடன் கேட்டார்கள். அவர்கள் அன்புக்கு என் நன்றி. (ஆனால் நான் யாரிடமும் கை மாறாக பணம் வாங்காத பழக்கத்தால் அவர்களிடம் அன்புடன் மறுத்து கொண்டேன்). அவர்களுக்கு என் அன்பான நன்றி என்றும்.
இவ்வாறானவர்களின் அன்பிற்காக தான் சோர்ந்தாலும் ‘ஜீவநதி’ வெளிவருகிறது.
*இப்போதைக்கு பிள்ளைகளின் நகை இருக்கிறது கடன் அடைக்க. (இது மிகைப்படுத்த பட்ட கூற்று அல்ல) முன்னரும் கல்முனை பூபால் (நீல பாலன் )
என்ற திருட்டு கவிஞனின் கவிதை நூலை அச்சிட்டு ஏமாந்து எனது திருமண மோதிரம் 6 ஆண்டுகளாக எல்.பி பைனான்சில் அடைவில் இருக்கிறது.
*சில கதைகளை தற்போது வெளிப்படையாக கூற முடியாதுள்ளது. ‘ஜீவநதி’ நின்ற பின்னர் பெயர்களுடன் தருகிறேன்.
உண்மையை சொன்னால் பரணீதரன் என்ற படைப்பாளி தனது சொந்த எழுத்தை தியாகம் செய்து தான் இந்த பத்திரிகையை வெளிக்கொணருக்கிறார். நான் சஞ்சிகையாளனாக இருப்பதால் எனது எழுத்துக்கு நேரம் ஒதுக்க முடியாதுள்ளதை யார் அறிவர்?
* இப்படி ஒரு கஷ்டத்தின் மத்தியில் ஏன் தொடர்ந்து வெளியீடு
செய்ய வேண்டும்?
*தீர்வு உங்கள் கைகளில்.
* இதில் கூற பட்ட அனைத்தும் சத்திய கூற்றுகள்.