மு.கார்த்திகேசன் நூற்றாண்டு பிறந்ததின நிகழ்வு யாழ் நகரில் சிறப்புற நடைபெற்றது

லங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த கல்விச் சிந்தனையாளருமான தோழர் மு.கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு பிறந்ததின (1919 – 2019) நிகழ்வு அவர் நீண்ட காலம் வாழ்ந்த யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப் பகுதியிலுள்ள சரஸ்வதி மண்டபம் (ராஜா கிறீம் கவுஸ்) மண்டபத்தில் யூலை 16ஆம் திகதி மிகவும் சிறப்புற நடைபெற்றது.

சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கார்த்திகேசன் அவர்களிடம் கல்வி கற்றவர்கள், உடன் பணிபுரிந்தவர்கள், அவருடன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் செயற்பட்டவர்கள், பொதுமக்கள் என சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் 250 பேர் வரையில் கலந்து கொண்டனர். பலர் அவருடனான தமது உறவுகளை நினைவுகூர்ந்து உரையும் ஆற்றினர்.

யாழ்ப்பாணத்தின் அண்மைக்கால வரலாற்றில் முற்போக்காளர்களின் இவ்வாறானதொரு நிகழ்வு நடைபெறவில்லை எனச் சொல்லுமளவுக்கு கூட்டம் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிகழ்வுக்கான ஒழுங்குகளை கனடாவில் வதியும் கார்த்திகேசன் அவர்களின் புதல்வியர்களுள் ஒருவரான ஜானகி கார்த்திகேசன் பாலகிருஸ்ணன் மேற்கொண்டிருந்தார்.

Tags: