யாழ்ப்பாண நகரச் சுவர்களை வண்ணமயமாக்கும் பணிகள்

No photo description available.

வியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் (composition) மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, சுவர் போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலை ஆகும்.

ஓவியக்கலை, பல்வேறு ஆக்கத்திறன்களை, உள்வாங்குவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறை ஆகும். ஓவியங்கள், இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் (abstract) தன்மை கொண்டனவாகவோ இருக்கலாம். அத்துடன் இவை ஒரு செய்தியை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக அல்லது அரசியல் சார்ந்தவையாகக்கூட இருக்கக்கூடும். ஓவிய வரலாற்றின் பெரும்பகுதியில் ஆன்மீகம் சார்ந்த எண்ணக்கருக்களும், அழகூட்டல்களும் முதன்மை பெறுகின்றன. இத்தகைய ஓவியங்கள் மட்பாண்டங்களில் வரையப்பட்ட புராணக் கதைக் காட்சிகளிலிருந்து, வழிபாட்டுக்குரிய கட்டிடங்களில், சுவர்களையும், மேல் விதானங்களையும் அழகூட்டும் சமயம் சார்ந்த, பெரிய ஓவியங்கள் வரை வேறுபடுகின்றன.

வெளியில் இருக்கும் ஒவ்வொரு புள்ளியும் வெவ்வேறு ஒளிச் செறிவைக் கொண்டுள்ளது. இந்த ஒளிச் செறிவு வேறுபாடுகளை ஒரு ஊடகத்தில் கொண்டுவருவதன் மூலமே ஓவியம் வரையப்படுகிறது. இந்த ஒளிச்செறிவுகளைக் கறுப்பு, வெள்ளை ஆகிய நிறங்களாலும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட பலவிதமான சாம்பல்நிறச் சாயைகளாலும் காட்டலாம். நடைமுறையில், பல்வேறு ஒளிச் செறிவுகளைக் கொண்ட மேற்பரப்புக்களை உரிய இடங்களில் ஆக்குவதன் மூலம் ஓவியர்களால் வடிவங்களை உருவாக்க முடியும்; ஒரே செறிவுகளைக் கொண்ட நிறங்களை மட்டும் பயன்படுத்துவதன் மூலம் குறியீட்டு வடிவங்களையே காட்ட முடியும். ஆகவே, ஓவியத்தின் அடிப்படை வழிமுறை, வடிவவியல் உருவங்கள், குறியீடுகள் போன்ற கருத்தியல் வழிமுறைகளில் இருந்தும் வேறுபட்டது ஆகும். எடுத்துக்காட்டாக, ஒரு ஓவியர், ஒரு வெண்ணிறச் சுவரை ஒவ்வொரு புள்ளியிலும் வெவ்வேறான ஒளிச் செறிவுகளைக் கொண்ட ஒன்றாகப் பார்க்கிறார். இது அயலிலுள்ள பொருள்களினால் ஏற்படும் நிழல்கள், தெறிப்பு ஒளி என்பனவற்றால் ஏற்படுகிறது. ஆனால் கருத்தியல் அடிப்படையில் இருட்டிலும் கூட வெண்ணிறச் சுவர், வெண்ணிறச் சுவரே. தொழில்நுட்ப வரைதலில் காணும் கோடு ஒன்றின் தடிப்பும் கருத்தியல் அடிப்படையிலானதே. இது ஒரு பொருளின் கருத்தியல் வெளி விளிம்புகளைக் குறிக்கிறது. இது ஓவியர்கள் பயன்படுத்தும் புலன் காட்சிச் சட்டகத்திலும் (perceptual frame) வேறானதொரு சட்டகத்தில் அமைந்தது ஆகும்.

இசைக்குச் சுருதியும் தாளமும் போல, நிறமும், நிறத்தொனியும் ஓவியத்துக்கு அடிப்படை ஆகும். நிறம் மிகுந்த தற்சார்பு (subjective) கொண்டது. பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபட்டாலும் கூட, இவை கவனிக்கத்தக்க உளவியல் தாக்கங்களை ஏற்படுத்த வல்லவை. சில பண்பாடுகளில் கறுப்பு துக்கத்துக்கு உரியது வேறு சில பண்பாடுகளில் வெள்ளை நிறமே துக்கத்தைக் குறிக்கிறது.

Image may contain: outdoor
No photo description available.
Image may contain: one or more people and outdoor
Image may contain: one or more people
Image may contain: one or more people, people standing and people walking
Image may contain: one or more people, people walking and outdoor
Image may contain: one or more people and outdoor
No photo description available.
No photo description available.
No photo description available.
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 1 person, standing, walking and outdoor
Image may contain: one or more people
Image may contain: one or more people and people standing
Image may contain: 1 person
Image may contain: 1 person, outdoor
Image may contain: outdoor
Image may contain: one or more people
Image may contain: one or more people and outdoor
No photo description available.
Image may contain: one or more people and outdoor
Image may contain: 1 person, outdoor

யாழ்ப்பாண சுவர்களை வண்ணமயமாக்கும் பணிகள் 😍👍

#வடக்கின் சுவர்களில் வண்ணமயமான #ஓவியங்கள் வரைந்து அழகாக்கும் தன்னார்வ முயற்சி ஆரம்பமாகிப் போய்க்கொண்டிருக்கிறது.😍 🖊️🖌️

வடமாகாணத்தில் முன்வருவோரும், வரையும் திறமை, ஆர்வம் உள்ளோரும் நல்வரவு. இது ஒரு தனிமுயற்சி அல்ல. ஊர்கூடி சுவரை அழகாக்குவோம்.

யாரேனும் அன்பும் ஆர்வமும் உள்ளோர் உதவ முன்வந்தால் மகிழ்ச்சி. வீதியில் இவ்வோவியங்களைக் கடக்கும்போது, ‘இதில் என் பங்கும் இருக்கிறது’ என்ற நிறைவு, மகிழ்ச்சிதரும்.

தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கம்: – +94 777413397

Viber community – Join Wall Arts Jaffna https://invite.viber.com/… on Viber

மேலதிக விபரங்களுக்கான கருத்துக்கு:
#Nallur #Jaffna #wallarts

முடிந்தால் இந்த பதிவை பகிர்ந்து ஆதரவு தாருங்கள் 👍

Tags: