சோசலிசம் வாழ்க! முதலாளித்துவம் ஒழிக!

சிஐடியு  (Centre of Indian Trade Unions – CITU) மே தின  பிரகடனம்

ர்வதேச உழைக்கும் வர்க்கத்தின் ஒருமைப் பாட்டைத் தெரிவிக்கும் 2020 மே தினத்தில், இந்த நூற்றாண்டில் மனிதகுலத்தைத் தாக்கி யுள்ள மிகவும் மோசமான சோகங்களில் ஒன்றான கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் மோசமாக இருந்திடும் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி முற்றிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் முழுதும் மக்களைக் காப்பாற்றும் பணியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மதிப்பிடற்கரிய சேவைகளில் ஈடுபட்டிருக்கும் சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பிற துறை ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) தன் இதயங்கனிந்த பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது. 

உலகம் முழுவதிலும் பல நாடுகள் சமூக முடக்கத்தை அறிவித்திருக்கிற இந்தத் தருணத்தில், மக்களின் வாழ்க்கை யை நிலைநிறுத்துவதற்காக, பல்வேறு சிரமங்களுக்கு மத்தி யிலும் துணிவுடன்  அந்நாடுகளில் உள்ள தொழிலாளர் வர்க்கம்  தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, தகவல் ஒலிபரப்பு, நிதிச் சேவைகள், பால், மளிகை, காய்கறிகள், மருந்துகள் முதலான அத்தியாவசிய சேவைகளை பல்வேறு சிரமங்களுடன், துணிவுடன் மேற்கொண்டு வருபவர்களுக்கும்; 

மற்றும்

உலகத்திற்குத் தொடர்ந்து உணவளித்து வரும் விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்களுக்கும், அனைத்து தொழி லாளர்களுக்கும் மற்றும் இதர உழைக்கும் மக்களுக்கும்,  உல கத்தின் உந்து சக்தியாக இருந்து வெளியே தெரியாதபடி வல்ல மையுடன் செயல்பட்டு, சமூகத்தின் “வளங்களை உருவாக்கி” வருகின்ற உண்மையான வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும், சிஐடியு தன் ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது.  உலகம் முழுவதும்  கோவிட்-19 தொற்றுக்கு தங்கள் உறவு களை இழந்து துயரத்தில் ஆழ்ந்துள்ள பல லட்சக்கணக்கான குடும்பங்களுக்கும், சிஐடியு,  தன் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தங்களின் எவ்விதமான தவறும் இல்லாத நிலையிலும், சமூகத்தில் சில பிரிவினரால் இழிவுபடுத்தப்படுதலுக்கும், புறக்க ணிக்கப்படுதலுக்கும் ஆளாகியுள்ள, பல லட்சக்கணக்கா னவர்களுக்கும் சிஐடியு,  தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது. வைரஸ் தொற்றால் மட்டுமல்ல, ஏற்கனவே வேலையி ழந்தும், வாழ்வாதாரங்களை இழந்தும் எதிர்காலம் என்ன ஆகு மோ என்ற பதட்டத்துடனும், பயத்துடனும் வாழும் பல லட்சக்க ணக்கானவர்களுக்கும் சிஐடியு தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.

மீள்வதற்கான ஒரே வழி

மே தினமான இன்று, சிஐடியு, இன்றையதனம் கோவிட்-19 என்னும் கொரானா வைரஸ் தொற்று காரணமாக இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியிலிருந்தும், அதே போன்று ஏற்கனவே உலகப் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்தும், மீள்வதற்கான ஒரே வழி, உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுபடுவதன் மூலம் மட்டுமே உழைக்கும் மக்கள் அனைவரும் தங்களுக்கிடையே மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், சாதியின் பெயரால், பிராந்தி யத்தின் பெயரால், மொழியின் பெயரால், பாலினத்தின் பெய ரால் இதுபோன்று எண்ணற்ற பிரிவினைகளால் கட்டப் பட்டுள்ள சுவர்களைத் தகர்த்து ஒன்றுபடுவதன் மூலம் மட்டு மேயாகும். எனவே, நம் வாழ்க்கையைப் பாதுகாத்திட, நம் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திட, நம் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் தாங்கி நிற்கிற நம் பூமியையும், நம் சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட சிஐடியு உறுதியேற்கிறது.

கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று, இன்றைய தினம் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் முதலா ளித்துவ அமைப்பு மற்றும் அதன் நவீன தாராளமய அவதா ரத்தின் மனிதாபிமானமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான குணத்தை, அப்பட்டமாகத் தோலுரித்துக்காட்டியிருக்கிறது.

புதிய கொரோனா வைரஸ் என்னும் கண்ணுக்குப் புலப் படாத நுண்ணிய உயிரினம், மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, உலகின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை, நிதி ஆதாரங்களை, நம் மனிதகுல சக்தியை முழுமையாக அணிதிரட்டி, அதற்கு எதிராகப் போராடுவதற்கும், அதனை முறியடித்திடவும் ஓர் ஒன்றுபட்ட போராட்டம்  தேவை என்கிற  சவாலை நம் முன் வீசியிருக்கிறது.  

முதலாளித்துவத்தின் கோர முகம்

ஆனால், இதற்கு மாறாக நாம் இன்றைய தினம் முதலாளித்துவ அமைப்பின் மிகவும் அருவருப்பான, மிகவும் கோரமான முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

இன்றைய தினம், உலகம் முழுவதும் 30 லட்சம் மக்களை கொரோனா வைரஸ் பாதித்திருக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் இடருக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். பல நாடுகளிலும் சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக,  கோடிக்க ணக்கானவர்கள் தங்கள் வேலைகளையும், வருமானங்களை யும் இழந்துள்ளார்கள் அவர்கள் வீடற்றவர்களாகவும், அவர்க ளும் அவர்களுடைய குடும்பத்தாரும் பசி-பஞ்சம்-பட்டினியா லும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், பெரும் கார்ப்பரேட்டுகளும், வர்த்தகப் பெரும்புள்ளிகளும் தொற்றைப் பயன்படுத்திக்கொண்டு, தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்துகொண்டிருக்கிறார்கள்.  இந்நிறுவனங்கள் அவர்களுடைய ஊதியங்களை வெட்டிக் கொண்டிருக்கிறது, போனசை வெட்டிக்கொண்டிருக்கிறது, வேலை நேரத்தை அதி கப்படுத்திக் கொண்டிருக்கிறது, அவர்களின் உரிமைகளை மறுத்துக் கொண்டிருக்கிறது. பல நாடுகளிலும் கார்ப்ப ரேட்டுகளுடன் நட்புகொண்டுள்ள, இன்னும் சரியாகச் சொல்வ தென்றால் கார்ப்பரேட்டுகளால் தலைமை தாங்கப்படக்கூடிய அரசாங்கங்கள், இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் கார்ப்பரேட் எஜமானர்களுக்கு உதவுவ தற்காக, தொழிலாளர் நலச் சட்டங்களைத் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக, முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களின் உரிமை களை மறுக்கின்றன; வேலையளிப்பவர்கள்  தொழிலாளர் நலச் சட்டங்களை சட்டவிரோதமாக மீறி வந்ததை, இப்போது சட்ட மாக்கிக் கொண்டிருக்கின்றன; தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கிக் கொண்டிருக்கின்றன.

லாபம்தான் அவர்களது கடவுள்

முதலாளிகள் மற்றும் அவர்களின் நலன்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் அரசாங்கங்களின் கவலை எல்லாம், முத லாளித்துவ வர்க்கத்தின் கொள்ளை லாபம் மட்டுமே யாகும். லாபம்தான் அவர்களின் கடவுள், அது ராமனாக இருக்க லாம், அல்லது அல்லாவாக இருக்கலாம் அல்லது இயேசுவாக இருக்கலாம். அவர்கள் மக்களைப் பிளவுபடுத்துவதற்காகவே, ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, மத நம்பிக்கைகளைப் பயன்படுத்துகிறார் கள். மக்களைச் சுரண்டும்போது, அவர்களின் உரிமைகளைப் பறிக்கும்போது, முதலாளிகள் அனைவரும் ஒன்றுபடுகி றார்கள்; அவர்கள் அனைத்துத் தொழிலாளர்களையும் சுரண்டி, தாக்குகிறார்கள். இவர்களின் மத வித்தியாசங்களைப் பார்ப்ப தில்லை அல்லது இவர்களில் எவருக்கும் சலுகைகளைக் காட்டுவதில்லை.

நிர்வாணமாக நிற்கும் அமெரிக்கா

உலகில் மிகவும் வலுவான நாடான அமெரிக்க ஏகாதி பத்தியம், இன்றையதினம் தோலுரிக்கப்பட்டு நிர்வாணமாக உலகின் முன் நின்றுகொண்டிருக்கிறது.   அது, தன்னுடைய மிகவும் கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான மேலாதிக்க ஆக்கிரமிப்புக் கொள்கையை, கியூபா, வெனிசுலா மற்றும் ஈரானுக்கு எதிரான பொருளாதார மற்றும் அரசியல் யுத்தத்தில் தொடர்கிறது. அநேகமாக, உலக நாடுகளிடமிருந்து தனிமைப்பட்டுள்ள நிலையிலும்கூட அது, பாலஸ்தீன மக்களு க்குத் தாய்நாட்டிற்கான உரிமையைத் தர மறுத்திடும் இஸ்ரே லுக்கு ஆதரவாக நிற்கிறது. அது, சர்வதேச அளவில் மருத்துவ ஒருமைப்பாட்டை விரிவாக்குவதில் நிகரற்றமுறையில் விளங்கும் கியூபா, தாமாகவே முன்வந்து மருத்தவ உதவிக ளை, பல நாடுகளுக்க அளித்திட முன்வரும்போது, அந்த நாடு கள் அவற்றை வாங்கக்கூடாது என்று தடுத்துக் கொண்டி ருக்கிறது. அதேபோன்று கியூபாவிற்கு சர்வதேச உதவி எதுவும் போய்ச் சேருவதையும் தடுத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க திணித்துள்ள பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள போதிலும், சோசலிச கியூபா, உலகில் உள்ள நாடுகள் அனைத் தும் பாராட்டும் விதத்தில், பொது சுகாதார சேவையில், உலகின் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் சாதனைகளை யெல்லாம் முந்திக்கொண்டு முன்னேறி இருக்கிறது.

அமெரிக்கா, ஈரானுக்கு எவ்விதமான உதவிகளும் போய்ச்சேரக்கூடாது என்கிற விதத்தில் பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. இதன் விளைவாக, தடுக்கப்பட்டிருக்கக் கூடிய  பல மரணங்கள் அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரிய யுத்த காலத்திய பாதுகாப்பு உற்பத்திச் சட்டம் (Korean War era Defence Production Act) என்ற ஒன்றை உருவாக்கி, ஜனாதிபதிக்கு கூடு தலாக அதிகாரவரம்பெல்லையை ஏற்படுத்தி, அமெரிக்க ஆயுத நிறுவனங்கள் அமெரிக்க சந்தைக்கான ஆயுதங்க ளை அளிக்க வேண்டும் என்று டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

டிரம்ப்பின் அடாவடிகள்

டிரம்பின் அடாவடித்தனத்தில் மிகவும் வெறுக்கத்தக்க நடவடிக்கை என்னவென்றால், பல நாடுகளுக்குச் சென்று கொண்டிருந்த மருந்துகளைத் திருடி தங்கள் நாட்டிற்குத் திருப்பி விட்டிருப்பதாகும். இதில் பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் கூட்டணி நாடுகளாக விளங்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அடங்கும்.  

சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரவேண்டிய துரித சோதனைக் கருவிகள் (rapid test kits) தாமதப்படுத்தப்பட்டன. ஏனெனில், இந்தியாவிற்கு வரவேண்டிய அப்பொருட்கள், அமெரிக்காவிற்குத் திருப்பிவிடப்பட்டன. இந்தியா, தங்கள் நாட்டுக்கு ஹைட்ராக்சிகுளோரிகின் (Hydroxychloroquine) ஏற்றுமதி செய்திடும் தடையை நீக்காவிட்டால், அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று டிரம்ப் மிரட்டினார்.  இந்த மருந்து கொரோனா வைரஸ் தொற்றைச் சரிப்படுத்திடக்கூடும் என்று அவர் நம்புகிறார். தங்கள் நாடுகளுக்கு வந்த முகக் கவசங்கள், தனிநபர் பாது காப்பு உபகரணங்கள், சோதனைக் கருவிகளை, அமெரிக்கா தன்னுடைய நாட்டிற்குத் திருப்பிவிடும் முயற்சிகளில் ஈடுபட்ட தற்காக, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, பிரேசில் முதலான நாடுகள் அதனைக் குற்றம்சாட்டி இருக்கின்றன. இது நவீன கால கடற் கொள்ளையே தவிர வேறல்ல.

சமீபத்தில், அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிற்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்திக்கொண்டிருக்கிறது.   கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கலான சமயத்தில், உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு வக்காலத்து வாங்குவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி இவ்வாறு நட வடிக்கையில் இறங்கி இருக்கிறது.  உலகத் தலைவன் என்று தன்னை பீற்றிக்கொண்டிருந்த அமெரிக்காவின் நிலை இன்றைய தினம் முற்றிலும் மதிப்பிழந்துவிட்டது. அது, அறி வியல் தொழில்நுட்பத்தில் முன்னேறியிருந்த போதிலும்கூட, அதன் மோசமான கொள்கைகளின் விளைவாக, இன்றைய தினம் தன் சொந்த நாட்டு மக்களையே பாதுகாப்பதில் முற்றிலு மாகத் தோல்வி அடைந்திருக்கிறது.

Is May Day still a thing?! - Monica Clare Recruitment

அமெரிக்க ஏழைகளின் துயரம்

அமெரிக்காவில் சுகாதாரப் பாதுகாப்பு என்பது கொள்ளை லாப நோக்கத்துடன் தனியார் கார்ப்பரேட்டுகள் வசம் உள்ளது. இது, கொரோனா வைரஸ் தொற்று போன்று அவசர நிலை யின்போது போதுமான போதாமையுடனும் சக்தியற்றும் இருப்ப தை மெய்ப்பித்திருக்கிறது. தனியார் கார்ப்பரேட் சுகாதார நிறுவனங்கள் இதுபோன்ற நிலைமைகளிலும்கூட தங்கள் லாப நோக்கத்தைக் கைவிடத் தயாரில்லை. இயல்பான காலங்களில்கூட, அமெரிக்காவில் தனியார் சுகாதாரப் பாது காப்பு, சுகாதார இன்சூரன்ஸ் பெறாத பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. பொது மருத்துவமனைகள், தங்களுடைய சுகாதாரப் பாது காப்புப் பணியாளர்களுக்குக் கூட போதுமான அளவிற்கு படுக்கைகள், அவசர சிகிச்சைப் பிரிவுகள், வெண்டி லேட்டர்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை இல்லாமல்தான் இருக்கின்றன. எனவே, பணக்காரர்கள் சிறந்த மருத்துவ வசதிகளைப் பெறும் அதே சமயத்தில், ஏழைகள் ஆயிரக்கணக்கில் இறந்துகொண்டிருக்கிறார்கள். இந்தத் தொற்று பரவாமல் கட்டுப்படுத்தவதற்கு உரிய நடவடிக்கை களை முன்கூட்டியே எடுப்பதிலும் டிரம்ப் தோல்விய டைந்துள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலும், பொருளாதா ரத்தில் ஏற்பட்டிருக்கிற கட்டுப்பாடுகளும்தான் அவரை அதிக மாகப் பாதித்திருக்கிறதேயொழிய, மக்களின் வாழ்க்கையைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இவ்வாறு இன்றையதினம், அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அதிக அளவில் பாதிக்கப்பட்டோர் கொண்ட நாடாக மாறியிருக்கிறது. அங்கே 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

ஏராளமான ஏவுகணைகளையும், போர் விமானங்க ளையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும், உலகம் முழுதும் கூலிப் படையினரையும் வைத்திருக்கிற ஒரு நாடு; எந்த நாடாக இருந்தாலும் அதனைப் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அடிமைப்படுத்தத் தயாராக இருக்கும் ஒரு நாடு தன் சொந்த மக்களைச் சுகாதாரமுறையில் காப்பாற்றுவ தற்குத் தேவையான வள ஆதாரங்களைப் பெற்றிருக்கவில்லை என்பது குறித்தோ, அதைப்பற்றிய சிந்தனையே இன்றி இருந்து வருவது குறித்தோ கவலைப்படவில்லை. அதனால் தன் சொந்த மக்களுக்கு மருத்துவமனை படுக்கைகளை, வெண்டிலேட்டர் களை அளிக்க முடியவில்லை. தன் நாட்டின் சுகாதார ஊழியர்க ளுக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களையும், முகக் கவசங்களையும் அதனால் அளிக்க முடியவில்லை. உலகின் கடல் பிரதேசங்களில் பிற நாடுகளுக்குச்சென்று கொண்டிருக்கும் மருத்துவ உபகரணங்களைக் கொள்ளையடிக்கும் இழி செயலில் இறங்கிக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், டிரம்ப் தன்னுடைய நாட்டின் ஏகபோக முதலாளிகளுக்கு 500 பில்லியன் டாலர் அளவிற்கும், விமான நிறுவனங்களுக்கு 29 பில்லியன் டாலர் அளவிற்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு 17 பில்லியன் டாலர் அளவிற்கும் நிதித் தொகுப்புகளை அறி வித்திருக்கிறார்.

முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்

இதுதான், தோழர் லெனின் வரையறுத்த “ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” (Imperialism, the highest stage of capitalism.) என்பதாகும். நெருக்கடி மேலும் சீர்கேட்டையும்போது, ஏகாதிபத்தியத்தின் குண்டாயிசமும் அதிகரிக்கிறது, அதன் மிகவும் இழிவான ஈனத்தனத்தை வெளிச்சத்தற்குக் கொண்டுவருகிறது.

நவீன தாராளமய முதலாளித்துவத்தின்கீழ் கிரேட்  பிரிட்டன், இத்தாலி போன்று சிறந்த பொது சுகாதார அமைப்பைப் பெற்றிருந்த சில முன்னேறிய முதலாளித்துவ நாடுகள்கூட, பொது சுகாதாரம், கல்வி முதலானவற்றிற்கான சமூக நல செலவினங்களை வெட்டிக் குறைத்து தனி யார்மயத்தை ஊக்குவித்தன. 2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், இவை சிக்கன நடவடிக்கைகளில் ஈடு பட்டதால் அங்கே பொது சுகாதார பாதுகாப்பு நிலைமைகள் மிகவும் மோசமாகின. இதன் விளைவு இன்றையதினம் கண் கூடாகத் தெரிகிறது. இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ்  போன்ற நாடுகள் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள சக்தியற்றவையாக உள்ளன. இப்போது ஏற்பட்டி ருக்கிற நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக ஸ்பெயின், தனியார் மருத்துவமனைகளைத் தேசியமயமாக்க வேண்டி வந்தது.

ஏகாதிபத்திய நாடுகளின் முரண்பாடு

2007-08இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்னமும் உலகம் மீளாத நிலையில், கொரோனா வைரஸ் தொற்று தாக்கி இருக்கிறது. இப்போது, இதன் விளை வாக, உலகப் பொருளாதார நெருக்கடி, இதுவரை உலகம்  சந்தித்திராத அளவிற்கு மேலும் மோசமாகும் என்று விரிவான முறையில் முன்னுணரப்பட்டிருக்கிறது. இது ஏகாதிபத்திய நாடு களுக்கு இடையேயான முரண்பாடுகளையும் முன்னுக்குக் கொண்டுவந்திருக்கிறது. டிரம்ப், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சக்திவாய்ந்த தடுப்பூசியை வளர்த்தெ டுப்பதற்காக, கியூர் வேக் (Cure Vac) என்னும் ஒரு ஜெர்மன் கம்பெனிக்கு டொனால்டு டிரம்ப் நிதி கொடுத்து  தாஜா செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.   அந்த நிறுவனம் அமெரிக்காவிற்கு வந்து, அமெரிக்கா விற்காக மட்டும் வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சமயத்தில் அந்த ஜெர்மன் கம்பெனியை ஜெர்மனியிலேயே தொடர்ந்து இருத்தி வைப்ப தற்காக, ஜெர்மனி அரசாங்கமும் அமெரிக்க அளித்த உதவி களுக்கும் மேலாக, அக் கம்பெனிக்கு உதவிகள் செய்திருப்பதா கவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இத்தாலிக்கு மருத்துவ உபகரணங்களை அளித்திட ஜெர்மனி மறுத்துள்ளது. இத்தாலியும், ஸ்பெயினும் கிரீஸூக்கு ஏற்றுமதிகள் செய்வதைத் தடை செய்திருக்கின்றன. ஜெர்மனியும், நெதர் லாந்தும் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக அளவில் மரணங்கள் சம்பவித்துள்ள ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உதவ மறுத்துள்ளன. 

ஆனால், அதேசமயத்தில், முதலாளிகளின் லாபத்தைப் பாதுகாப்பது என்று வரும்போது, தொழிலாளர்கள் கடுமை யாகப் போராடிப் பெற்ற உரிமைகள், அவர்களுடைய ஊதி யங்கள், நலத்திட்டங்கள் முதலானவற்றின் மீது தாக்குதல்கள் தொடுக்கத் தயங்கவில்லை. இதில் அனைத்து முதலாளித்துவ நாடுகளும் ஒன்றுபட்டிருக்கின்றன.

‘இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்று படுவோம்’ என்கிற முழக்கம், முதலாளிகள் மற்றும் அவர்களின் எடுபிடிகளாகச் செயல்படும் அரசாங்கங்களைப் பொறுத்த வரையிலும் அர்த்தமற்றதாகும். இந்த முழக்கமானது தொழி லாளர்களுக்கும், தொழிலாளர் வர்க்க அரசாங்கங்களுக்கும் மற்றும் உழைக்கும் மக்கள் எங்கே பாதிப்புக்கு உள்ளாளானா லும் ஒருமைப்பாட்டை எப்போதும் உறுதிப்படுத்துகிற சோசலிச நாடுகளுக்கும் மட்டுமே பொருந்தும். 

சோசலிச கியூபா

சின்னஞ்சிறு நாடான சோசலிச கியூபா, அமெரிக்கா விற்கு அடுத்தபடியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளான இத்தாலி நாட்டிற்கு, அங்கே கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவுவதற்காக, தன்னுடைய 60 மருத்து வர்களை வீரஞ்செறிந்தமுறையில் அனுப்பி இருக்கிறது.

அமெரிக்கா உட்பட பல நாடுகள், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளான பயணிகளுடன் வந்த பிரிட்டிஷ் கப்பலைத் தங்கள் நாட்டின் துறைமுகங்களில் நிற்பதற்கு அனுமதி மறுத்தசமயத்தில், கியூபா மட்டுமே அத னைத் தங்கள் நாட்டின் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனு மதித்தது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களைக் கறாராகக் கடைப்பிடித்து, அக்கப்பலில் வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கும், கப்பல் ஊழியர்களுக்கும் உதவி யது. அவர்கள் அனைவரையும் கப்பலிலிருந்து தரை இறக்கி, பேருந்துகளில் உரிய சிறப்புக் காவலர்களின் பாதுகாப்புடன் ஏற்றிக்கொண்டு, விமான நிலையத்திற்குக் கொண்டு சென்று, பிரிட்டனுக்கு தனி விமானங்கள் மூலமாக அனுப்பி வைத்தது.  

இதுதான் சோசலிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையேயான, மனிதாபிமானத்தின் உயர் வடிவத்திற்கும், காட்டுமிராண்டித்தனத்தின் கொள்ளையடிக்கும் குணத்திற்கும் இடையேயான, முற்றிலும் மாறுபட்ட நிலையாகும். 

சோசலிச கியூபா, அமெரிக்காவின் கிரிமினல்தனமான தடைகள் பலவற்றை கடந்த பல ஆண்டுகளாக எதிர்கொண்டு, பல சிரமங்களுக்கு ஆட்பட்டிருந்த போதிலும், நாட்டு மக்கள் அனைவருக்கும் பெயரளவில் ஒரு தொகையைப் பதிவுக் கட்ட ணமாகப் பெற்றுக்கொண்டு, சுகாதாரப் பாதுகாப்பை இல வசமாக செய்யக்கூடிய விதத்தில் ஒரு முன்மாதிரி பொது சுகாதா ரப் பாதுகாப்பு அமைப்பை வளர்த்தெடுத்திருக்கிறது. அது, மிகவும் முன்னேறிய மருந்துத் தொழிற்சாலைகளையும் வளர்த் தெடுத்திருக்கிறது. சிறப்பு மருத்துவர்கள்உட்பட மருத்துவக் குழுக்களை லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடு களால் அழைக்கப்படும்போதெல்லாம் முறையாக அனுப்பி வருகிறது. இத்துடன், இத்தொற்று காலத்தில் இத்தாலிக்கு உதவியதுபோன்றே வெனிசுலா மற்றும் நான்கு கரிபியன் நாடுகளுக்கும் தன்னுடைய மருத்துவக் குழுக்களை அனுப்பி வைத்திருக்கிறது. கியூபாவில் உள்ள சோசலிச அமைப்பு, இலவசப் பொதுக் கல்வி, பொது விநியோக முறையில் உணவுப் பொருள்கள், வீட்டு வசதி முதலானவற்றையும் அளிக்கிறது.  

மக்கள் சீனம்

கொரோனா வைரஸ் தொற்றை முதலில் கண்டறிந்த சீனா, உடனேயே அத்தொற்று பரவாமல் தடுப்பதற்காக தன் அனைத்து வள ஆதாரங்களையும் அணிதிரட்டியது. இந்நோய் “வரலாற்றில் மிகவும் மோசமான, வேகமாகப் பரவக்கூடிய மூர்க்கத்தனமான நோய்,” என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறியது.  இதனை சீனா, மிகவும் வெற்றிகரமாக கட்டுப்படுத்தி யதற்கு முக்கிய காரணம், அங்கே வலுவான பொது சுகாதார அமைப்பு இருப்பதேயாகும். 2020க்குள் அனைத்து மக்களும், ‘எளிதாக அணுகக்கூடிய விதத்தில், சமத்துவமான, மலிவான மற்றும் திறமைவாய்ந்த சுகாதார அமைப்பை’ நிறுவிட, சீனா ஓர் அரசியல் உறுதியைப் பெற்றிருப்பதன் காரணமாக, அங்கே சுகாதார செலவினம் 2009இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக இருந்தது, 2017இல் 6.4 சதவீதமாக அதிகரித்தது. மக்கள் தங்கள் சொந்தப் பாக்கெட்டிலிருந்து செலவு செய்யும் தொகை 29 சதவீதமாக வீழ்ச்சி  அடைந்திருக்கிறது. 2017இல் பொது மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான பாதுகாப்பு 82 சதவீத அளவிற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுக் கெல்லாம், அங்கே லாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல், மக்களின் நலனையே  அடிப்படையாகக் கொண்டுள்ள சோசலிச அமைப்பும் அதன் திட்டமிடலின் விளைவுமே அடிப்படைக் காரணங்களாகும்.

களத்தில் நிற்கும்  பொதுத்துறை நிறுவனங்கள்

ஒவ்வொரு நெருக்கடி மற்றும் அவசரநிலையின்போதும் நாட்டையும், நாட்டுமக்களையும் காப்பாற்ற முன்வருவது எப்போதும் அவதூறுக்கு ஆளாகும் பொதுத்துறை நிறு வனங்கள்தான் என்பதை இங்கே குறிப்பிட வேண்டியது அவசி யமாகும். 2008 உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும் இதனைப் பார்த்தோம். அப்போது பொதுத்துறை வங்கி களும், நிதி நிறுவனங்களும்தான் நாட்டின் பொருளாதாரத்தை தொடர்ந்து மூலதன செலவினங்களைச் செய்ததன் மூலம் காப்பாற்றின. சுதந்திரம் பெற்றபின்னர் அமைக்கப்பட்ட பொதுத் துறை மருந்துக் கம்பெனிகள்தான், பன்னாட்டு நிறுவனங்க ளின் ஆதிக்கத்தைத் தகர்த்து, மக்களுக்கு மிகவும் மலிவு விலை யில் மருந்துகளை அளித்து வந்தன. ஆனால், நவீன தாராள மயக் கொள்கை ஆட்சியில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடுபயக்கும்விதத்தில்,  இத்தகைய சுயசார்புக் கொள்கை மருந்துத் தொழில்களிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஐடிபிஎல் (IDPL), இந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ், பெங்கால் கெமிக்கல் மற்றும் ஃபார்மசூட்டிகல்ஸ் போன்று பொதுத்துறை மருந்துக் கம்பெனிகளை நலிவடையச்செய்தும்,  அழித்தும் ஒழித்தும் விட்டன.

இதன் விளைவுகள் இப்போது நன்கு தெரிகின்றன. கொரோ னா வைரஸ் தொற்றுக்கு எதிராக இப்போது 24 மணி நேரமும் மக்களைக் காப்பாற்றும் பணியில் இயங்கிக் கொண்டிருப்ப வர்கள் பொது மருத்தவமனைகளில் உள்ள மருத்துவர்கள், செவி லியர்கள், இதர மருத்துவம் சார்ந்த ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமேயாவர். இந்தியா உட்பட அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் இவர்கள் ஒரு யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்துவருகிறார்கள். இவர்கள் போர்முனையில் துப்பாக்கிகள் இல்லாது போராடும் போர்வீரர்களைப் போல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோ னா வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வ தற்குத தேவையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், முகக் கவசங்கள், கையுறைகள் முதலானவை போதுமான அளவிற்கு இவர்களுக்கு வழங்கப்படவில்லை.  இவற்றின் காரணமாக இவர்களும், இவர்களின் குடும்பத்தாரும் கடும் இடருக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதன் விளைவாக எண்ணற்ற மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். பல இடங்களில் மருத்து வர்களும், செவிலியர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருப்பதால்  பெரிய மருத்துவமனைகள் மூடப்பட்டுவிட்டன.  இவற்றால் பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்கள் மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

ஆனால் மறுபக்கத்தில், இந்த நிலைமையைத் தங்க ளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஆய்வுகள், சிகிச்சைகள், படுக்கைகள் மற்றும் அனைத்திற்கும் மக்களிடமிருந்து அநியா யமான முறையில் கட்டணங்களை வசூலித்துக் கொண்டி ருக்கின்றன. அதே சமயத்தில் தங்கள் ஊழியர்களுக்கு அற்ப ஊதியமே அளித்து வருகின்றன, அவர்கள் அமைப்புரீதி யாகத் திரள்வதற்கான உரிமையையும் மறுத்து வருகின்றன.

முதலாளித்துவ அமைப்பு முறை என்பது இதுதான். சுகாதாரத் துறையில் மட்டுமல்ல, கல்வி, வீட்டுவசதி, சமூகப் பாதுகாப்பு, வேலையிடங்கள், தொழிலாளர் உரிமைகள்… என்று எல்லா இடங்களிலுமே முதலாளிகளுக்கு லாபம், தொழிலா ளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் துன்ப துயரங்கள் என்ற நிலையை எல்லா இடங்களிலும் இதனைப் பார்க்க முடியும். அரசாங்கங்கள் கார்ப்பரேட்டுகளுக்கும், பெரும் வர்த்தக  நிறுவனங்களுக்கும் சேவகம் செய்யும் விதத்திலேயே அநேக மாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவிலும் இதுதான் நிலை 

இந்தியாவில் பொது பாதுகாப்பு செலவினம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1 சதவீதம் மட்டுமேயாகும். அதிக அளவில் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்ட துறை களில் சுகாதார அமைப்பு முறையும் ஒன்று. நவீன தாராள மயக்கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக இது நடந்திருக்கிறது. சுகாதாரத்திற்கான மொத்த செல வினத்தில் சுமார் 70 சதவீதம் நோயாளிகள் தங்கள் பாக்கெட்டு களிலிருந்து செலவிட வேண்டும். 44 சதவீத உள்நோயாளி கள் மட்டுமே அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியா, சுகாதார சுற்றுலாவை ஊக்குவிக்கிறது. தங்கள் நோய்க்கு மருத்துவ சிகிச்சைக் காக இந்தியாவிற்கு வரக்கூடிய அளவிற்கு வசதிபடைத்த வர்கள், இந்தியாவிற்கு வந்து, பெரும் கார்ப்பரேட் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அதே சமயத்தில், நாட்டில் உள்ள ஏழைகள் வயிற்றுப்போக்கு, காச நோய் போன்ற சாதாரணமான நோய்களுக்குக்கூட மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் ஆயிரக்கணக்கில் மடிந்து கொண்டிருக்கும் அவலநிலையும் நீடிக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு முறை யான சுகாதாரப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. நவீன தாராள மயக் கொள்கைகளின் கீழ், பொது மருத்துவமனைகள் புறக்க ணிக்கப்படுகின்றன. சில மாநிலங்களில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கூட தனியாரிடம் தாரை தாரைவார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் இவற்றால் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இவை திண்டாடுகின்றன.  இங்கே பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவம் சார்ந்த ஊழி யர்கள், ‘ஆஷா’(‘ASHA’)ஊழியர்கள், துப்புரவுப் பணியா ளர்கள் மற்றும் பலர் தங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச பாதுகாப்பு உபகரணங்கள்கூட இல்லாமல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, வேலை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இவற்றின் விளைவாக, பல மருத்து வர்களும், செவிலியர்களும் கொரானா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இறந்திருக்கிறார்கள்.  

விதிவிலக்கான கேரளம்

இதில் கேரளா மட்டும் விதிவிலக்காகும். அங்கேயுள்ள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், சீனாவில் கொரானா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட சமயத்தி லேயே, கேரள மாணவர்கள் பலர் அங்கே படித்துக்கொண்டி ருப்பதன் காரணமாக, உடனடியாக தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளைத் திட்டமிட்டிருக்கிறது. சோதனை செய்து  பார்த்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள்,  தனிமைப்படுத்தல் முதலான அத்தியாவசிய முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்திருக்கிறது. மாநி லத்தில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், சோச லிச லட்சியத்தால் உத்வேகம் கொண்டு, எப்போதெல்லாம் ஆட்சிக்கட்டிலில் அமர்கிறதோ அப்போதெல்லாம், மாநி லத்தில் பொது சுகாதார பாதுகாப்பு  அமைப்பை வலுப்படுத்தி வளர்த்தெடுத்து வந்திருக்கிறது.  

இத்தகைய சூழ்நிலையில், தொழிலாளர் வர்க்கம், அதிலும் குறிப்பாக முறைசாராத் தொழிலாளர்கள், வேலை இழப்புகளுக்கும், ஊதிய இழப்புக்கும், வருமான இழப்புக்கும் ஆளாகியுள்ள நிலையில் மத்திய பாஜக அரசாங்கம் தொழி லாளர்நலச் சட்டங்களை, தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றி அவர்களை அடிமைகள்போல் மாற்றக்கூடிய நிலை மைகளைக் கொண்டுவர நடவடிக்கைகளை எடுக்க விரும்பு வது வெட்கக்கேடாகும். இன்றைய தினம் தொழிலாளர்கள் ஏற்கனவே இருந்துவந்த உலகப் பொருளாதார நெருக்கடி, கொரானா வைரஸ் தொற்று மற்றும் ஆட்சியாளர்களின் முற்றி லும் திட்டமிடாத, தயாரிப்புகள் எதுவுமின்றி அறிவிக்கப்பட்ட சமூக முடக்கத்தால் விளைந்துள்ள பாதிப்புகள் என்று மூன்று விதமான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

தொழிலாளர்களை  குறி வைக்கும் முதலாளிகள் 

குஜராத் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு (The Gujarat Chamber of Commerce and Industry), குறைந்தபட்சம் ஓராண்டுக்கு தொழிற்சங்கங்கள் அமைக்கும் ஷரத்தை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும், தொழிலாளர்க ளுக்கு சேமநல நிதி (PF) மற்றும் இ.எஸ்.ஐ.(ESI) நிதியத்திலி ருந்து நிதித்தொகைகளைக் கொடுப்பதற்கு 90 நாட்களுக்கு மேல் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும், ஒப்பந்தத் தொழிலா ளர்களின் ஊதியங்களை, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் வேலை செய்யும் விவசாயத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுபோல் 202 ரூபாயாகக் குறைத்திட வேண்டும் என்றும் கோரி இருக்கிறது.

தென்னிந்திய வேலையளிப்போர் சம்மேளனம் (Employers Federation of Southern India), தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என்றும், அகவிலைப்படி திருத்தத்தை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும், தொழிலாளர்நலச் சட்ட விதி மீறல்களுக்கான குறைந்தபட்ச தண்டனைகளிலிருந்தும் விதிவிலக்கு அளித்திட வேண்டும் என்றும் கோரி இருக்கிறது. மத்திய அரசு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தவும், வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை என்று மாற்றவும் தொழிற்சாலை சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச பாஜக அரசாங்கங்கள், இது தொடர்பாக அறிவிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், தற்போது தொழிலாளர்துறைக்கான நாடாளு மன்ற நிலைக்குழுவில் நிலுவையில் உள்ள தொழிலாளர் நலச் சட்டமுன்வடிவுகளை (labour code bills), அவசரச் சட்டம் மூல மாகவோ அல்லது நிர்வாக ஆணை (executive order) மூலமாகவோ கொண்டுவரத் துடித்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும், பாஜக அரசாங்கத்தால் தங்களுக்கு நன்கொடைகள் அளித்த கார்ப்பரேட் சீமான்களைத் திருப்திப்ப டுத்துவதற்காக, தொழிலாளர்களை அவர்களின் அமைப்புக் கான உரிமைகளையும் மற்றும் கூட்டுபேர நடவடிக்கைகளை யும் பறித்து அவர்களை அடிமைகள்போன்று மாற்ற வேண்டும் என்று மிகவும் கேடுகெட்ட முறையிலும் வெட்கங்கெட்ட முறை யிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளே தவிர வேறல்ல. கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை பயன்படுத்திக் கொண்டும்,  பாஜக அரசாங்கம் தங்கள் கார்ப்பரேட் எஜமானர்க ளின் நலன்களுக்கு சேவகம் செய்திடுவதற்காக இவ்வாறு நடவடிக்கைகளை எடுத்திடத் துடிக்கிறது.  

துயரத்திலும்  மதவெறிக் கோர முகம்

கொரோனா வைரஸ் தொற்று, மதங்களுக்கு இடையோ அல்லது சாதிகளுக்கு இடையோ எவ்விதப் பாகுபாட்டையும் பார்க்காமல் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் உலகம்  முழுவதும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும்  மோசமான நிலையி லும்கூட, ஆர்எஸ்எஸ்சும் அதன் கொடுக்குகளும் தங்கள் மதவெறிக் கோர முகத்தைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறி நஞ்சை உமிழ்ந்து கொண்டும், அவர்களைத் தாக்கிக் கொண்டும் இருக்கின் றன. இதற்கு ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவுடன் சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களில் மூர்க்கத்தனமான முறையில் துர்ப்பிரச்சாரம் மேற்கொண்டு, சமூகத்தில் மதவெறி நஞ்சை தொடர்ந்து விதைத்துக் கொண்டிருக்கின்றன. இதே போன்று மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் லண்டனில் இஸ்க்கான் (ISKON) போன்று பல நடந்துள்ளன. பாஜக தலைவர்களே பலரு டைய பிறந்த நாள் விழாக்கள், திருமணங்கள் மற்றும் மூதா தையர்களுக்கான திதிகள் பலவற்றில் பங்கெடுத்திருப்பதும், இவற்றில் நூற்றுக்கணக்கானவர்கள் சமூக முடக்கத்தின் கட்டுப்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு திரண்டு வந்திருப்பதும் நடந்திருக்கின்றன. ஆனாலும் முஸ்லிம்களுக்கு எதிரான விஷப் பிரச்சாரத்தை மட்டும் இவர்கள் கைவிடவில்லை.

காட்டுமிராண்டிக் குணம்

கொரோனா வைரஸ், முதலாளித்துவ அமைப்பின் காட்டு மிராண்டித்தனமான குணத்தைத் தோலுரித்துக் காட்டியி ருக்கிறது. இதற்கு முன்னிருந்துவந்த பொருளாதார நெருக்கடி, சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்று வதற்கோ, வேலைவாய்ப்பை அளிப்பதற்கோ, கண்ணியமான மற்றும் நாகரிகமான வாழ்க்கை நிலைமையை அளிப்ப தற்கோ, அனைத்துப் பகுதியினருக்கும் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை அளிப்பதற்கோ தனக்கு தகுதி இல்லை என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. பொருளாதாரத்தை உறுதி யுடன் நிலைநிறுத்தி வளர்ப்பதற்கும் தனக்கு வல்லமை இல்லை  என்பதையும் அது காட்டி இருக்கிறது. இந்த அமைப்பின் உள்ளார்ந்த சுரண்டப்படும், பிளவுபடுத்தும், சீர்குலைக்கும், விஷத்தனமான குணங்கள் அனைத்தும் இப்போது ஒவ்வொ ருவரும் பார்க்கும் விதத்தில் வெட்டவெளிச்சமாகி இருக்கின்றன.    

தொழிலாளர் வர்க்க ஒருமைப்பாடு

அதே சமயத்தில், தொழிலாளர் வர்க்க ஒருமைப்பாடும் சிறந்த முறையில் இன்றைய இக்கட்டான நிலையில் வெளிப் படுத்தப்பட்டிருக்கிறது. சமூக முடக்கத்தின் காரணமாக,  தங்கள் வீடுகளிலிருந்து தொலைதூரங்களில் நடுத்தெருவில் நிர்க்கதியாய் விடப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், வேலையிழந்து, ஊதியங்களை இழந்து கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்ற தொழிலாளர்களுக்கும் தொழிலா ளர்களும், உழைக்கும் மக்களும், ஏழை விவசாயிகளும், விவசா யத் தொழிலாளர்களும், இதர முற்போக்குப் பிரிவினரும் இரவு பகல் பாராது தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நாடு முழுதும் பல மாநிலங்களிலும் பல லட்சக்கணக்கான மக்க ளுக்கு, உணவு, நிவாரணம், மற்றும் அனைத்துவிதமான உதவிக ளையும் செய்து அவர்களுக்குத் தார்மீக ரீதியான ஆதரவை அளித்து வருகின்றனர்.

சிஐடியு, தான் அமைப்புரீதியாகப் பலவீனமாக உள்ள பகுதிக ளில்கூட, அதன் குழுக்கள், முன்னணி ஊழியர்கள் தங்கள் சக்தியையும் மீறி அபரிமிதமாக வேலை செய்து, தங்கள் வர்க்க ஒருமைப்பாட்டைக் காட்டியிருப்பதைப் பார்த்து பெருமிதம் கொள்கிறது.

முதலாளித்துவப் பேராசை மற்றும் சுரண்டலுக்கும், தொழி லாளர் வர்க்கத்தின் ஒருமைப்பாடு மற்றும் தியாகத்திற்கும் இடை யேயான வேற்றுமையை இன்றையதினம் ஒவ்வொருவரும் நன்கு தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடியும். தொழிலாளர் வர்க்கம் சொல்லையும் செயலையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நேரம் இதுவாகும். உழைக்கும் மக்களும் தங்களின் தலைவர்க ளின் பேச்சுக்களையும், தங்கள் சொந்த அனுபவங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் நேரம் இதுவாகும். தங்களுடைய பிரச்ச னைகளை, ஆட்சியாளர்களின் கொள்கைகளுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். இவர்களின் கொள்கைகள் சுரண்டும் வர்க்கத்தின் அரசியலால் விளைந்த கொள்கைகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  முதலாளித்துவ ஆட்சி யாளர்களுக்கு, இலாபத்திற்கான இச்சைக்கு முன்னால், மனித உயிர்கள் குறித்துக் கவலை கிஞ்சிற்றும் கிடையாது.

ரத்தம் உறிஞ்சும்  முதலாளி வர்க்கம்

தொடர்ந்துகொண்டிருக்கும் நெருக்கடி, சுரண்டும் வர்க்கத்தையும் ஆட்சியில் உள்ள அதன் அரசியல் ஏஜெண்டு களையும் மக்களின் அனைத்து உரிமைகளையும் பறிப்பதற்கும், பாசிச  நோக்கத்துடன் மேலும் மூர்க்கத்தனமான முறையில் எதேச்சதிகார அடக்குமுறையை ஏவுவதற்கும், மேலும் மூர்க்கத்தனமான முறையில் தங்களுடைய பிளவுவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இட்டுச் செல்லும்.  நெருக்கடியை மேலாண்மை செய்கி றோம் என்ற பெயரில், பொருளாதாரத்தை, மந்த நிலையிலி ருந்தும் நெருக்கடியிலிருந்தும் கட்டுக்குள் கொண்டுவருகி றோம் என்ற பெயரில், முதலாளித்துவ வர்க்கம் தங்களின் அரசு எந்திரத்தின் மூலமாக, பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கை களை மேற்கொண்டு,  மக்களின் ரத்தத்தை மேலும் ஒட்ட உறிஞ்சு வதற்கு முயலும்.

கார்ப்பரேட் ஊடகங்கள், மக்களை முட்டா ளாக்குவதற்காக இவற்றை நியாயப்படுத்துவதற்கான நடவ டிக்கைகளில் இறங்கும். வேலைவாய்ப்பும், வேலைவாய்ப்பு தொடர்பான உறவுகளும் மேலும் சுரண்டலைத் தீவிரமாக்கும் விதத்தில் மறுசீரமைக்கப்படும். இவற்றை தொழிலாளர் வர்க்கம் கண்ணை மூடிக்கொண்டு ஏற்க முடியாது. இப்போது ஏற் பட்டுள்ள நிலைமையானது, சிஐடியு தன்னுடைய 16ஆவது மாநாட்டில் அறிவித்த “தொழிலாளர் வர்க்கம் ஒரு புதிய கட்டத்திற்குள் மீறுதல் மற்றும் எதிர்த்தல் – என்னும் கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது” என்பதனைச் சரி என நிரூபிக்கிறது. 2020 மே தினத்தன்று நம்மை நாம் ஸ்தாபன ரீதியாகவும், தத்துவார்த்தரீதியாகவும் மேற்கண்ட போராட்டத் திற்காக, ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தையும் ஒற்று மைப்படுத்திட உறுதி எடுத்துக் கொள்வோம்.   

உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ் கூறியதுபோன்று, “நாள்தோ றும் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு எதிரான நம் போராட்டம் நியாயமானது. தொழிலாளர் வர்க்கத்தின் சமூக  விடுதலைக்கான நம் போராட்டம் அவசியமானது. உலகத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபடுவதன் மூலம் இதனை நாம் செய்திட முடியும்.”

லெனின் நினைவுகளை ஏந்தி…

தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகவும், வர்க்க ரீதியாக அமைந்துள்ள தொழிலாளர் வர்க்கத்தின் இயக்க மாகவும் விளங்கும் நாம் இக்கொடூர முதலாளித்துவ அமைப்பின் அசிங்கமான தோற்றத்தை, அதன் மனிதாபி மானமற்ற நடவடிக்கைகளை, உழைக்கும் மக்களின் உணர்வு களை மழுங்கடிக்கும் விதத்தில் அது மேற்கொள்ளும் நாசகர அரசியலை வெளிக்கொணர்வதற்கு உறுதியாகவும், தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தோழர் லெனின்  அவர்களது 150ஆவது பிறந்த தினத்துடன் இணைந்து வருகிற இந்த ஆண்டின் மே தினத்தில், வர்க்க உணர்வுடன் செயல்படும் தொழிலாளர் இயக்கமாகிய நாம் இந்தப் பணியை இன்றும் துடிப்புடன் மேற்கொள்வோம்.

தோழர் லெனின் அவர்களது 150வது பிறந்த தினத்துடன் இணைந்து வருகிறது இந்தாண்டின் மேதினம். உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளி வர்க்கத்துடன் இந்திய தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைந்து, தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகவும், இதைப் பயன்படுத்தி தொழிலாளர் வர்க்கத்தின் மீது அனைத்து சுமைகளையும் மடைமாற்றும் முதலாளி வர்க்கத்திற்கெதிராகவும், வலுவான போராட்டங்களை கூர்மைப்படுத்துவோம்.

மே தினம் வாழ்க!
தொழிலாளர் வர்க்க ஒற்றுமை ஓங்குக!
தொழிலாளி – விவசாயி ஒற்றுமை ஓங்குக!
சோசலிசம் வாழ்க!
முதலாளித்துவம் ஒழிக!  

தமிழில் : ச.வீரமணி

தீக்கதிர்

Tags: