பெண்ணியமும் வர்க்க உணர்வும்

அர்ச்சனா பிரசாத் (Archana Prasad)

ர்க்க ஒடுக்குமுறையிலிருந்தும், ஆணாதிக்க ஒருக்குமுறையிலிருந்தும் விடுதலைக்கான  போராட்டங்களில் பங்கேற்றபடியே, சொந்த விடுதலைக்காகவும் போராடிய பெண்களுடன், கம்யூனிச இயக்கம் அடைந்த வளர்ச்சிக்கு இருந்த இணைப்பினைக் குறித்து இக்கட்டுரை விவாதிக்கிறது.

வர்க்கப் போராட்டத்தின் ஆணாதிக்க எதிர்ப்பு குணம் என்பது தானாகவே உருவாகிடும் ஒன்றல்ல. வர்க்க உருவாக்க நிகழ்வின் மீது ஒருங்கிணைந்த முன்னெடுப்புகளின் மூலம் செய்கிற தலையீட்டின் வழியாகத்தான் அந்த குணம் வளர்த்தெடுக்கப்படுகிறது. இதனை பெரும்பாலான ஆய்வாளர்களும் முன்னணி களப்பணியாளர்களும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இந்த விதத்திலேயே, பெண் உரிமைக்கான அனைத்து இயக்கங்களும் முதலாளித்துவ எதிர்ப்புத் தன்மையோடு இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை என்பதைப் பார்க்கலாம். அவைகளுக்கு முதலாளித்துவ அமைப்பிற்குள்ளாகவே பெண்களின் சமூக மற்றும் அரசியல் உரிமைகளை அடைவதற்கான குறுகலான லட்சியங்கள் மட்டுமே இருக்கலாம். அவ்வகையில் பார்க்கும்போது, வர்க்கப் போராட்டங்களும், பெண் விடுதலை இயக்கங்களும் தங்களிடையே  தத்துவ அடிப்படையில் கொண்டுள்ள பிணைப்பையும்,  அவை  முதலாளித்துவத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் உள்ள உறவை எவ்வாறு புரிந்துகொண்டுள்ளன  என்பதையும்  பொருத்துத்தான் இந்த இயக்கங்களால் மாற்றங்களை வென்றெடுக்கும் தன்மை அமைகிறது.

இந்தக் கட்டுரையில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உருவாக்கமானது, பெண்கள் விடுதலைக்கான போராட்ட வளர்ச்சியில் எவ்வளவு முக்கியமான தருணமாக அமைந்தது என்பதை விவரித்துள்ளேன்.  கம்யூனிஸ்டுகள் தலைமையிலான இயக்கங்களில் பங்கேற்ற பெண்கள், பாலின அடிப்படையிலான பாரம்பறிய உழைப்புப் பிரிவினை ஏற்பாட்டிலிருந்து வெளியேற ஊக்கம் பெற்றார்கள். இயக்கத்தின் செயல்பாட்டு முறையில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கமானது, முதலாளித்துவ எதிர்ப்பிற்கும் ஆணாதிக்க எதிர்ப்பிற்கும் இடையிலான நுணுக்கமான தொடர்புகளைப் புரிந்துகொள்ள வழி ஏற்படுத்தியது.

இந்தியாவின் பெண்ணுரிமைப் போராட்டங்களுக்கு, கம்யூனிச இயக்கத்தின் நீண்ட நெடும் வரலாறு ஆற்றியுள்ள பங்களிப்பு என்ன? ஆணாதிக்க எதிர்ப்பு முன்னெடுப்பானது, முதலாளித்துவ எதிர்ப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமா? ஆம் என்றால் இந்திய கம்யூனிசத்தின் விடுதலைக் கண்ணோட்டத்தில் பெண்களுடைய பங்கு என்ன? என்ற கேள்விகள் நடப்புச் சூழலில் முக்கியமாகின்றன. இந்த கேள்விகளுக்கு விடைகளைக் கண்டறிவது, மார்க்சிய பெண்ணியவாதிகளுக்கும், ‘தனித்து இயங்கும்’ பெண்கள் இயக்கங்களுக்கும் இடையிலான கோட்பாடு சார்ந்த மற்றும் தத்துவ நோக்கு அடிப்படையிலான குழப்பங்களைத் தீர்க்கவும் அவசியமாகும். இக்கட்டுரையின் முதல் பகுதி இந்த விவாதங்கள் சிலவற்றை விவரிப்பதுடன், முதலாளித்துவக் குவிப்பின் போக்கில் உற்பத்திக்கும், சமூக மறு உற்பத்திக்கும் இடையிலான உறவின் அடிப்படையில் இவற்றை மதிப்பீடு செய்கிறது. இரண்டாம் பகுதி, கம்யூனிச இயக்கத்தின் தொடக்க காலங்களில் பெண்கள் வகித்த பங்கினை சுருக்கமாக விளக்குகின்றது. மூன்றாம் பகுதி, வர்க்க அடிப்படையிலான இயக்கங்களுக்கும், ஆணாதிக்க எதிர்ப்புணர்வை வளர்ப்பதற்கும் இடையிலான உறவு குறித்த கண்ணோட்டங்களை ஆய்வு செய்கின்றது.

பெண் விடுதலையும் கம்யூனிஸ்ட் இயக்கமும்

முதலாளித்துவ அமைப்பில், அதன் (மூலதன) குவிப்பு வீதத்தை தக்க வைத்திடவும், அதிகரிக்கவும் ஆணாதிக்க நிறுவனங்களும் அதிகாரமும் அவசியம் என்பது நாம் அறிந்ததுதான். ஆணாதிக்கம் என்பது பாரம்பரியமான பாலின உழைப்புப் பிரிவினை அடிப்படையில் சமூக உறவுகளை வடிவமைக்கிறது. அந்த உழைப்புப் பிரிவினையானது உற்பத்திச் சுழற்சியில், பெண்களுடைய கணக்கில் வராத, கணக்கில் கொள்ளப்படாத உழைப்பைச் செலுத்துவதன் மூலம் உபரி மதிப்பினை உறிஞ்சும் நடவடிக்கையின் பகுதியாக ஆகிறது.  இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, உபரிமதிப்பை உருவாக்கும் கட்டமைப்பிற்குள் உழைப்பாளர்களின் மீதான ஒடுக்குமுறைக்கும், ஆணாதிக்கத்திற்குமான தொடர்பு தெளிவாகிறது. மூலதனத்திற்கும் உழைப்பிற்குமான உறவில், பெண்களின் கணக்கில் காட்டப்படாத ஊதியமற்ற உழைப்பு முக்கிய பங்காற்றுகிறது. இதற்கு அடித்தளமாக அமைந்தது சமூக மறு உற்பத்தியாகும். எனவே வர்க்கங்கள் உருவாகும் விதமே பாலின பாகுபாடு நிரம்பியதுதான் என்று கூற முடியும்.

முதலாளித்துவம் ஊடுருவி வளரும் ஒரு சமூகத்தில், ஊதியம் கிடைக்கக் கூடிய உழைப்பில் பெண்களின் பங்கேற்பும் அதிகம் இல்லாத  நிலைமை, குடும்ப அமைப்பின் தாக்கம் காரணமாகத்தான் ஏற்படுகிறது என்பதையும் பார்க்கலாம்.  வீட்டுவேலைகளுக்குத்தான் மனைவி என்ற நிலை உருவானது பற்றிய விவாதம்,  தனிச் சொத்துடைமை எவ்வாறு பெண்களை வீட்டுக்குள்ளேயே வாழும் வகையில் கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது  என்பதை தெளிவாக்கியது (மியஸ் 1986, ஃப்ரெட்ரிகி 2004). இவ்வாறு, சமூக மறு உற்பத்திக்கு அவசியமான ஊதியமற்ற உழைப்பின் மூலமும், பாரபட்சமான வகையில் கூலி குறைக்கப்பட்ட உழைப்பின் மூலமும் பெண்கள் மீதான பளு அதிகரிக்கப்படுவது, உபரி மதிப்பை உருவாக்கும் இந்தச் சுரண்டல் அமைப்பின் ஒரு பாகமேயாகும். ஆக, சமூக மறு உற்பத்தி முறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஆணாதிக்க முறையை தவிர்த்து விட்டு, இந்த பொருளாதார சுரண்டல் முறையை தக்கவைத்துக்கொள்ளவோ, தீவிரப்படுத்தவோ இயலாது. எனவே, அடிப்படியில் மூலதனத்திற்கும் கூலியுழைப்பிற்கும் உள்ள முரண்பாடுகளும், சமூக அமைப்புகளில் அந்த முரண்பாடுகளின் வெளிப்பாடுமே பெண்களின் ஊதியமற்ற மற்றும் ஊதியமுள்ள உழைப்பிற்கு இடையேயான பாகுபாடுகளுக்கு காரணம். இந்த கண்ணோட்டத்தின் வழியாக, பெண்கள் உழைக்கும் வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலைமையிலேயே  குவிந்துள்ளது எதனால் என்பதை விளக்குவதோடு, மூலதனக் குவியலின் பாதையில் அவர்கள் சந்திக்கும் அமைப்புசார் ஒடுக்குதலே இதற்கு காரணம் என்றும் விளக்குவது சாத்தியம்.

Monthly Review | Women, Class, and Identity Politics

பரவலாக அறியப்பட்ட பெண்ணிய ஆய்வாளர்கள் முன்வைக்கும் வாதங்களிடமிருந்து இந்த புரிதல் பெரிதும் வேறுபட்டதாகும். இவ்விசயத்தில் பரவலான அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “உலகத்தை, பாலினத்தை சுற்றி அமைந்த படிநிலையாக பார்ப்பது, சமூக ஒழுங்கை பராமறிப்பதற்கு தேவை என்று பெண்ணிய பார்வை ஏற்கிறது; ‘ஆண்’ மற்றும் ‘பெண்’ என வெவ்வேறு குறியீடுகள் கொண்ட இனங்களாக வாழ்வது முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை யதார்த்தங்கள் ஆகும். அதே நேரத்தில், பெண்ணியவாதியாக இருப்பதென்பது, மையத்தை ஆக்கிரமித்துள்ள ஒவ்வொரு ஆதிக்கக் கட்டமைப்பையும் விட அதிகாரம் குறைவான நிலைகளையும், ஒதுக்கப்பட்ட இடங்களையும் கைப்பற்றிட கனவுகாண்பதுவே ஆகும் (மேனன் 2012, பக்.viii). இவ்வாறான ஆய்வுகளில், பாலினம் என்பது (ஆண்பால் என்பதை ஆண் என்றும், பெண்பால் என்பதை பெண் என்றும் சமூக மறு உற்பத்திக் கண்ணோட்டத்தில் காண்பது) ஏற்றத்தாழ்வான கட்டமைப்பில் பெண்களை ஒடுக்கப்பட்ட உறவு நிலையில் நிறுத்துவதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் பாலினங்களுக்கிடையிலான உறவுகள் முதலாளித்துவ ஒடுக்குமுறை மற்றும் சமூக உற்பத்தி உறவுகள் என்ற வரம்புகளுக்கு வெளியே பார்க்கப்படுகிறது. அனைத்து வித ஒடுக்குமுறைகளுக்கும் காரணம் பரந்துபட்ட அரசியல் பொருளாதார முறையில் “பெண்களின்” இடம் சார்ந்தது என்று கருதாமல், பாலின நிலைகளோடு மட்டுமே அவற்றை அடையாளப்படுத்தப் படுகின்றது. பாலின நிலை என்பதில் ‘வர்க்கமும் முதலாளித்துவமும்’ இரண்டாம் நிலையிலேயே  வைக்கப்படுகின்றது: ‘அதிகாரப் படுத்துதல்’ முழக்கங்களைக் கொண்டு ஏற்கனவே ஒருங்கிணைய தயாராக உள்ள ஒரு ‘இனம்’ போல பெண்கள் அனுமானிக்கப்படுகின்றனர் (தேவிகா 2016). அதே சமயம் அதிகாரத்திற்கான இயக்கங்கள் மீதான அவ்வகைப் பெண்ணியத்தின் விமர்சனம், அந்த இயக்கங்களை ‘ஆண்பால்  பெண்ணியம்’ மற்றும் ‘பெண்பால் பெண்ணியம்’ என இரண்டாக எதிர் எதிரே நிறுத்தி, ஆணாதிக்கத்திற்கு எதிரான இயக்கங்களில் ஆண்களின் தலைமை பெண்களின் குரலெழுப்பும் “முகைமைகளை” ஒடுக்குவதாக கருத்தை முன்வைக்கிறது. இப்படிப்பட்ட கண்ணோட்டம், பரந்துபட்ட ஜனநாயக இயக்கங்கள் ஆணாதிக்கத்தை எதிர்ப்பதற்கான பெண்களின் திறனை வளர்ப்பதில் ஆற்றும் பங்குகளை கருத்தில் கொள்ள மறுக்கின்றன.

உழைப்பின் மதிப்பு குறித்த கோட்பாட்டிற்கு எதிராக ‘சிறுமைக்’ கோட்பாட்டினை முன்வைக்கும் பார்வை, பெண்ணிய நிலையிலிருந்து எழும் மற்றொரு கோட்பாட்டு விமர்சனமாகும். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், பாலின அடிப்படையிலான உழைப்புப் பிரிவினைக்குக் காரணம் பெண்கள் மேற்கொள்ளும் பணிகளைக் குறித்த ‘சிறுமைப்படுத்தும்’ பார்வைதான். ஆக, இதற்கான மூலம் எது என்று தேடி உபரி மதிப்பை சுரண்டும் முறையில் கண்டறியாமல், சமூக ஒடுக்குமுறை அமைப்பிலேயே கண்டறிய வேண்டும் என்கிறது. குடும்ப சூழலைக் கணக்கில் கொள்ளும்போது இத்தகைய பெண்ணிய பார்வையை பயன்படுத்த வேண்டும், மேலும் சாதியின் பன்முகங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு தீண்டாமை மற்றும் தீண்டப்படா உழைப்பு ஆகியவைகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற வாதங்களும் எழுகின்றன. சாதிக் கட்டமைப்பு கொண்ட சமூகத்திற்கு உழைப்பின் மதிப்புக் கோட்பாடு முரண்பட்டது என்ற வாதமும் கூட வைக்கப்படுகிறது (ஜான் 2017). சிறுமைப்படுத்தப்பட்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு ‘மதிப்பு’ உள்ளதாக பெருமை கற்பிக்கக் கூடாது என்பது ஆய்வாளர் ஜான் வைக்கும் வாதம். இதனை பின்மார்க்சிய கோட்பாடான ‘குறுக்குவெட்டுத்தன்மை’ (‘intersectionality’) கொண்டுதான் புரிந்துகொள்ள முடியும் என்று வாதிடுகிறார். அந்தப் பார்வையின்படி, அடிபணிதல் முறைமை பல மட்டங்களில் பின்னிப் பிணைந்தபடியே பெண்களை குறிப்பிட்ட உழைப்புகளுக்குள் அடக்குவதாக வாதம் வைக்கிறார் (ஜான் 2013; 2017). ஆய்வாளர் ஜான் மற்றும் இதர பெண்ணிய ஆய்வாளர்களால் பயன்படுத்தும் “மதிப்பு” என்பது  போதாமையால் தவிக்கின்றது. ஏனென்றால் அவர்களின் கோட்பாடுகளில் சமூக உற்பத்தி/மறு உற்பத்தியும், உபரி மதிப்பை சுரண்டும் முறையும் தொடர்பற்ற தனித்தனி கூறுகளாக கருதப்படுகின்ற. அது பெண்களின் உழைப்பு சிறுமைப் படுத்தப்படுவதை முதலாளித்துவ (மூலதனக்) குவிப்பு நடைமுறையின் ஒரு பகுதியாகக்  கருதுவதில்லை. ஊதியமற்ற உழைப்பிற்கு கற்பிக்கப்படும் “சிறுமை”யை முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த போக்கினால் வீட்டு மற்றும் சமூக வாழ்வில் விளையும் அமைப்புசார் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகக் கருதுவதில்லை. இந்த உண்மையை மறுத்து, வீடு மற்றும் வீடு சாராத உழைப்புகளுக்கு இடையே தவறான பாகுபாட்டை உருவாக்குவதனால், இந்த பெண்ணிய ஆய்வாளர்களின் வாதம், வழக்கமாக தாராளவாதம் சிக்கிக்கொள்ளும் “பொது/தனி” என்ற குழப்ப வலைக்குள் சிக்கிக் கொள்கிறது. இதனால், சமூக-அமைப்புசார் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துவதில் ஆணாதிக்கத்தை பயன்படுத்தும் முதலாளித்துவத்திற்கே உரித்தான பங்கை அவர்கள் கவனிக்க மறுக்கின்றனர்.

இத்தகைய பற்றாக்குறையான தத்துவப் பார்வையை பார்க்கும்போது, வர்க்க உருவாக்கத்திற்கும், சமூக ஒடுக்குமுறைகளுக்கும் இடையிலான சிக்கலான உறவுகளைக் குறித்தான சமகால மார்க்சிய பெண்ணிய விவரிப்புகளை நாடுவது தேவைப்படுகிறது. சமூக மறு உற்பத்தி நடவடிக்கையை அதன் பரந்த சாத்தியமான வழிகளில் ஆய்வு செய்வதுதான், மேற்சொன்ன சிக்கலான உறவுகளை அறிந்துகொள்வதற்கு உள்ள பொதுவான வழிமுறையாகும் (வோகல் 2013, பட்டாச்சார்யா 2017). இவ்வகையில், சமூக மறு உற்பத்தி என்பது ஊதியமற்ற குடும்ப உழைப்பை மட்டும் சார்ந்து இல்லை. (சாதியம் உள்ளிட்ட) அதிகாரப் படிநிலையான சமூக கட்டமைப்பையும் சார்ந்துள்ளது. இதர சமூக அமைப்புகளான பண்பாடு, தர்மங்கள் ஆகியவற்றையும் சார்ந்து உள்ளது. இவைகளை சமூக வர்க்கங்கள் என்பதற்கு சமப்படுத்துவதோ, பதிலீடாக பார்ப்பதோ சாத்தியமானதல்ல. சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் ஆதிக்கத்தை மறு உறுதி செய்யும் விதத்தில் வர்க்கங்களை உருவாக்குவதை, சிறப்பாக உறுதிப்படுத்துவதாக ஆணாதிக்க, சாதி மற்றும் சமூக அதிகாரப் படிநிலைகள் அமைகின்றன. வேறு சொற்களில் குறிப்பிட்டால், முதலாளித்துவ அமைப்பினை தக்க வைப்பதற்கு சமூக அதிகாரப் படிநிலைகள் அவசியத்தேவையாகும்; முதலாளித்துவ அமைப்பில் (மூலதனக்) குவிப்பின் பல்வேறு நிலைகளில் அதற்கேற்ற வகையில் இந்த அதிகாரப் படிநிலைகள் மறுவடிவமைக்கப்படுகின்றன. வேறுபட்ட சமூக அமைப்புகளில்  ஆணாதிக்கம் பலதரமாக நிலவுவதை இதற்கு உதாரணமாக பார்க்கலாம் (பிரசாத் 2016). குடும்ப அமைப்பில் நிலவி வந்த சமூக கலாச்சார வழக்கங்களே பெண்களுக்கு ஊதியமுள்ள பணி கிடைப்பதை நிர்ணயிப்பதாக சில பெண்ணியக் குழுக்கள் வைக்கும் வாதத்தை எடுத்துக்காட்டாக பார்ப்போம். வரலாற்றுத் தரவுகளைக் கொண்டு பார்த்தால் தலித் மற்றும் பழங்குடியின பெண்கள் அதுபோன்று வெளியே சென்று பணி புரிய எந்த தடைகளையும் சந்திக்கவில்லை; அவர்களின் பணியில் பங்கெடுக்கும் வீதம் அதிகமாகவே இருந்துவருகிறது என்று தெரிகிறது. ஆனால் இந்த நிலைமை  ஆணாதிக்கத்தின் முதுகெலும்பினை முறிக்கவில்லை. மாறாக ஊதியமில்லாத உழைப்பினாலும், பாலியல் சுரண்டல் வழியாகவும் ஆண் ஆதிக்கத்தின் அதிகாரம் வெளிப்பட்டது. உற்பத்தி சக்திகளை கைவசம் வைத்துள்ள வர்க்க, சமூக குழுக்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார்கள். இதற்காக சமூக அதிகாரப் படிநிலைகளில் தனிமனித ஒழுக்க விதிகள் மீறப்பட்டன. இந்த சூழலை மனதில் கொண்டு ஆராய்ந்தோமென்றால், சில சாதிய, சமூக குழுக்கள் முதலாளித்துவ குவியலின் உச்சாணியில் இருப்பதற்கு காரணம் பொருளியல், சித்தாந்த மற்றும் சமூக ஆதிக்கமே ஆகும். இது இனவரைவியலை (ethenological) பற்றிய  மார்க்சின் எழுத்துக்களில் விவரிக்கப்பட்டுள்ளது (க்ரேடர் 1974, பக்.54), அந்த விவரிப்பில் அவர் ‘பண்டைய நிறுவனங்களின் கூறுகள் பொருளியல் தன்மையில் மின்னுகின்றன, மேலும் அவை தற்காலத்தில் மறுவடிவம் பெற்று, கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளன’ என்கிறார்.  மார்கன் மீதான விமர்சனத்தில் அவர் பின்வருமாறு வாதிடுகிறார்: ‘பண்டைய குடும்ப அமைப்பானது, அன்றைய சமுதாயத்தின் சுறுக்க வடிவமாகும் (miniature), அது ஒருவனுக்கு ஒருத்தி என்ற வடிவத்தில் நிலைகொண்டாலும், இந்த உறவுக்குழுக்களுக்கு புறத்தே அமைந்த சமூக நிறுவனங்களின் மேல் நிற்கிறது …. எனவே ‘குடும்பத்திற்குள்ளேயே எழும் முரண்பாடுகள்’ குடும்பத்திற்கு வெளியே உள்ள அமைப்புகள் மூலமாக உருவாக்கப்படுகின்றன, அல்லது சமூகத்திற்குள் இருக்கும் சக்திகளால் விளைவிக்கப்படுகின்றன (க்ரேடர் 1974, பக்.18).

How #MeToo revealed the central rift within feminism today | #MeToo  movement | The Guardian

வரலாற்றில் வர்க்க முரண்பாட்டின் வளர்ச்சியோடு இணைத்து எழுந்து வளரும் ஒரு முரண்பாடாகத்தான் ஆணாதிக்கத்தையும் அடையாளப்படுத்தப்பட வேண்டும் (ஃப்ரெட்ரிகி 2004). இந்த கருத்தினை மார்க்ஸ் தானே விவரிக்கிறார். தனிச்சொத்து குடும்பத்தில் “மறைமுக அடிமைத்தனம்” வளர வழிவகை செய்வதை அவர் கண்டறிந்து சொல்கிறார் (மார்க்ஸ் 1845). இவ்விதத்தில் சோசலிஸ்டுகளுக்கும் மார்க்சிய பெண்ணியவாதிகளுக்கும் (சொத்துடைமையோடு பிணைக்கப்பட்ட) வர்க்கம் குறித்தான கேள்வி, ஆணாதிக்கத்தை வரலாற்று ரீதியாக புரிந்து கொண்டு விளக்குவதில் முக்கியமான பங்காற்றுகிறது.  இதுதான் பெண் விடுதலைக்கான கம்யூனிச சித்தாந்தவாதிகளுக்கும் இதர ‘பெண்ணிய’வாதிகளுக்கும் உள்ள வேறுபாடாகும்.

கம்யூனிசஇயக்கத்தில் பெண்கள்வகித்தபங்கு

(இந்தியாவில்) கம்யூனிச இயக்கத்தின் துவக்க கால வரலாற்றை பார்த்தோமென்றால், ஆணாதிக்க எதிர்ப்பு போராட்டங்களுக்கும் அடித்தளம் ஏற்படுத்துவதில் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்சி பெரும் பங்காற்றியிருப்பது தெரிகிறது.சர்வதேச சோசலிச மகளிர் மாநாடு ஒரு புறமும் , சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் முக்கிய பெண் தலைவர்களின் குரல்கள் இன்னொரு புறமும் ஏற்படுத்திய தாக்கம் ஒருங்கிணைந்து இவ்வாறான பணிகளை மேற்கொள்ள உந்துதலாக அமைந்தன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே கம்யூனிச இயக்கத்தின் பெண் தோழர்களும் தலைவர்களும், பெண் ஊழியர்கள் மீதான முதலாளித்துவத்தின் தாக்கத்தை ஆய்வு செய்கையில் வர்க்க உணர்வின் வளர்ச்சியை கணக்கில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தனர். முதலாம் சர்வதேச சோசலிச மகளிர் மாநாட்டில் அலெக்ஸாந்த்ரா கொலந்தாய் (1907) கூறியது:

“மொத்த முதலாளித்துவ உலகமும் கேட்டுக் கொண்டிருந்தது …  அதன் பெரும்பகுதி  பெண் தொழிலாளர்களின் துணிவான குரல்களைக் கேட்டு ஆத்திரமடைந்தது. ஆண்களின் பேச்சுக்கள் எத்தனை புரட்சிகரமாக இருந்தாலும், எத்தனை ‘முட்டாள்தனமான’  தீர்மானங்களை அவர்கள் நிறைவேற்றினாலும், முதலாளித்துவ உலகம் தங்கள் கையிலிருக்கும் நிரூபிக்கப்பட்ட ஒரு வழிமுறையை எண்ணி அமைதிகாத்தார்கள்; கீழ்ப்படிந்த பெண் உழைப்பாளர்களை மாற்றீடு செய்து உழைக்க வைப்பதன் மூலம் ‘ஆத்திரக்காரர்களின்’ எதிர்ப்புணர்வை உடைத்து நொறுக்குவது தான் அந்த வழிமுறை. ஆனால் இப்போது அவர்கள் புதிய அதிர்ச்சிகொண்டுள்ளனர்: உலகெங்கிலும் இருந்து உழைக்கும் வர்க்கத்தின் பெண் பிரதிநிதிகள் திரண்டுள்ளார்கள், தம்முடைய கூட்டு முயற்சியால்உழைக்கும் வர்க்கத்திற்கு விரோதமான உலகத்திற்கு எதிராக போராட ஒரு புதியதோர் ஆயுதத்தை உருவாக்க துணிந்துவிட்டனர்பெண்களின் துணிவு அனைத்து கற்பனைகளையும் விஞ்சிவிட்டதுநேற்று வாழாவிருந்த அடிமைகள் இன்று உழைக்கும் வர்க்க விடுதலைக்கான போர்க்குணமிக்க போராளிகளாகியுள்ளனர். (கொலந்தாய் 1907)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மேற்கோள், உழைக்கும் வர்க்கத்தின் ஆண்களுக்கும்,  பெண்களுக்கும் இடையேயான ஒற்றுமை உழைக்கும் வர்க்க இயக்கங்களை வளர்த்தெடுக்க அவசியமென்று கருதப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது. மேலும், குடும்பத்தில் பெண்களுக்கு நிலவும் அடிமைநிலைக்கு எதிரான தத்துவ நிலைப்பாட்டை  கம்யூனிஸ்ட் கட்சியே கடைபிடித்தால் மட்டுமே இந்த ஒற்றுமை சாத்தியமாகும் என்றும் உணரப்பட்டது. பெண்களின் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளுக்காக மட்டும்  போராடும் பெண்ணியக் குழுக்களிடமிருந்து “கம்யூனிச பெண்கள்” தங்களை தனித்து நிறுத்திக்கொண்டனர். 1922ல் கிளாரா ஜெட்கின் எழுதினார், “கம்யூனிஸ்ட்கள் பெண்கள் மத்தியில் இரட்டை இலக்கிற்காக பணியாற்ற வேண்டும்: முதலில் ‘சித்தாந்த மற்றும் அமைப்பு ரீதியாக’ கம்யூனிச சர்வதேசத்தில் பெண்களை இணைக்க வேண்டும், இரண்டாவது, உழைக்கும் வர்க்கத்திற்கான அனைத்து போராட்டங்களிலும் சாமானிய பெண்களை ஈர்க்க வேண்டும்.” 

அவர் மேலும் எழுதினார்,

பெண்கள் மத்தியிலான கம்யூனிஸ்டுகளின் பணி, கட்சியின் தத்துவ மற்றும் உயிரோட்டமான பணிகளோடு எத்தனை இணைக்கப்பட்டிருந்தாலும், இந்தப் பணிகளை மேற்கொள்ள சிறப்பான அமைப்புகளும் தேவை என்பதும் தெளிவாக நிறுவப்பட்டுள்ளது. பெண்கள் மத்தியிலான கம்யூனிஸ்டுகளின் பணிகள் பெண்களுடைய பொறுப்பாக மட்டும் இல்லாமல்ஒவ்வொரு நாட்டின் ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாகவும்கம்யூனிச சர்வதேசத்தின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்பது சரிதான்ஆனாலும்  நாம் அந்த இலக்கை அடைய வேண்டுமானால், இந்த இலக்கை நோக்கி திட்டமிட்ட வகையில் செயல்பட்டு கம்யூனிச பணிகளை பெண்கள் மத்தியில் முன்னெடுக்கும் கட்சியின் குழுக்கள் அனைத்த்து இடங்களிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் (ஜெட்கின் 1922).

ஆக, இதர பெண்ணியவாதிகளுக்கு மாறாக, முதலாளித்துவத்தை அகற்றிய சமத்துவ சமூகத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவர்களாகவும், போராளிகளாகவும் கம்யூனிச பெண்கள் தங்களை பாவித்துக்கொள்ள வேண்டும் என்கிறார் கிளாரா ஜெட்கின். அதே சமயம் அனைத்து மட்டங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட் தோழர்களும் தலைவர்களும் ஆணாதிக்கத்திற்கு எதிரான சித்தாந்தத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, இதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தின் மத்தியிலான பரந்துபட்ட ஒற்றுமையை பிணைக்க முயற்சிக்க வேண்டும். எனவே, அனைத்து பிரிவு பெண்களிடமும் சென்றடைந்து, அனைத்து தடைகளையும் உடைத்தெறிய வேண்டும்.

மேற்கூறிய கண்ணோட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதால், இந்த கோட்பாடுகள் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் எழுதப்படாதபோதும், இவையே ஆரம்ப கால கம்யூனிஸ்டுகளின் அரசியல் பணிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதில் ஆச்சரியம் இல்லை. தேசிய விடுதலை என்கிற பரந்துபட்ட போராட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் பணி புரிகையில், உழைக்கும் வர்க்கத்தின் தேவைகளை முன்வைத்து, அவர்களை ஒன்றிணைக்க பாடுபட்டனர். ஊரக மற்றும் நகர்ப்புற இந்தியாவின் துவக்க கால வேலைநிறுத்தப் போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பு பெருமளவு இருந்தன. பெரும்பாலான வர்க்க-வெகுஜன அமைப்புகளில் தனியே மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டதனால், 1940களின் துவக்கத்திற்குள் அதிக அளவிலான சாமானிய உழைக்கும் வர்க்க குடும்பங்களிடம் கம்யூனிஸ்டுகளால் சென்றடைய முடிந்தது. மஹிலா ஆதம்ரக்ஷ சமிதி (வங்கம்), தற்காப்பு கூட்டமைப்பு (பஞ்சாப்), மஹிலா சங்கம் (ஆந்திரா & மகாராஷ்ட்ரா), அகில கேரள மகளிர் சங்கம், மேலும் பெண் குழந்தைகள் மத்தியில் மணியாற்றிய அநேக சிறு அமைப்புகள் அவைகளில் சிலவாகும். பழமை தேசியவாதத்தின் தாக்கம் பெண்கள் மத்தியில் தீவிரமாக உள்ள பகுதிகள் உட்பட, இந்தியாவின் தொலைதூர ஊரக பகுதிகளில் அமைந்த வீடுகளிலும் கூட கம்யூனிஸ்ட்களின் தாக்கம் விரிவடைவதற்கான அடித்தளத்தையும் ஆதரவினையும் இந்த அமைப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தன. கம்யூனிச பெண்கள் தங்களின் சகோதரிகளிடையே பணி புரிவது போல் உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் பணி புரிந்தனர். வங்கத்தின் மஹிலா ஆதம்ரக்ஷ சமிதியைச் சேர்ந்த பாணி தாஸ்குப்தா ஒரு நேர்காணலில் இவ்வாறு கூறினார்:

அந்த நாட்களில் எங்களை வீட்டிலிருந்து வெளியே அழைக்கும் தைரியம் கொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சி இருந்ததுவீட்டிலிருந்து பணி புரிய இயலாத, வீட்டில் வாழ இயலாத பெண்களை வெளியே வருமாறு அழைத்துவெளியே வந்த பெண்களுக்கு நம்பிக்கையான இடம் கிடைக்க கமிட்டிக்களின் உறுப்பினர் எண்ணிக்கை ஏழு மடங்கு விரிவாக்கப்பட்டது [மஹிலா ஆதம்ரக்ஷ சமிதியைப் பற்றி கூறுகிறார்]. ஆனால் கூட்டு வாழ்விடங்களான கம்யூன்கள் எங்களை காப்பாற்றியதுநான் நிமிர்ந்து நிற்க கம்யூனிஸ்ட் கட்சியே காரணமாக இருந்தது என்பதை நான் எந்நாளும் மறக்க மாட்டேன் (மரிக், 2013, பக்.111).

In Defence of Marxism

கட்சியில் தொடங்கப்பட்ட இந்த கம்யூன்கள் பெண் போராளிகளுக்கு கண்ணியமான வாழ்வையும் அவர்கள் விடுதலையை பயன்படுத்துவதற்கான சுதந்திர சூழலையும் அளிக்கும் ஒரு புதியதோர் குடும்பத்தை அமைத்துத் தர முனைந்தது. பொதுவான அரசியல் பார்வையைக்  கற்பிப்பதன் மூலம் போராளிகளுக்கு இடையேயான நல்லுறவு பேணப்பட்டது. கம்யூன்களுக்கு உள்ளேயே சில சமயங்களில் கம்யூனிச பெண் போராளிகள் பாலினம் சார்ந்த உழைப்புப் பிரிவினைக்கு எதிராகப் பாடுபட வேண்டியிருந்தது என்றாலும், அவர்களை சுற்றியுள்ள பரந்துபட்ட இயக்கமும் அதன் சித்தாந்தமும் அவர்களின் சுய ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது (லூம்பா 2009). இதனுடன் சேர்ந்து முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிராக ஒரு ‘புதிய ஒழுங்கை’ முன்நிறுத்தும் அதன் அடிப்படை கோட்பாடும் அவர்களுக்கு துணையாக நின்றது. தோழர் சுந்தரய்யா விவரிப்பது போல், ‘கட்சி குழுக்கள் ஆண்-பெண் இடையேயான சமத்துவம், அவர்கள் துணையைத்  தேர்ந்தெடுக்கும் உரிமை, விவகரத்துக்கான உரிமை, மருமணத்திற்கான உரிமை ஆகியவைகளைக் கொண்டு வழிநடத்தப்பட்டன.. இது மக்கள் இயக்கத்தையும், சமூக உறவுகளையும் சிறந்த முறையில் வளர்க்க உதவியது’ (சுந்தரைய்யா 1972, பக். 263). இந்த புதிய ஒழுங்கு பற்றிய தத்துவத்தின்படி கம்யூன்களில் தனிச்சொத்து என்ற கருத்தே கிடையாது; பெற்றோர் பொறுப்பு என்பது கம்யூன் முழுமையிலும் பகிர்ந்திருக்க வேண்டும். ஆக, குழந்தைகள் மீதான கூட்டு பொறுப்புணர்வின் காரணமாக “தாய்மை” என்கிற எண்ணமே முக்கிய மாற்றங்களை கண்டது. ரஷ்ய சூழலை விவரிக்கையில் இந்த கருத்தைப் பற்றி அலெக்ஸாந்த்ரா கொலந்தாய் விவரிக்கிறார்:

உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டத்தை கையிலெடுக்கும் பெண்கள் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியதுபண்டைய கண்ணோட்டமான இவர்கள் என் பிள்ளைகள்இவர்களுக்கே என் அனைத்து பொருளியல் அக்கறையும் பாசமும் உரிமைஅவர்கள் உன் பிள்ளைகள்எனது அல்லஅவர்கள் குளிரில் நடுங்கி பசியால் வாடினாலும் எனக்கு கவலை இல்ல– மற்றவர் பிள்ளைகளுக்கு எனக்கு நேரம் இல்லை” என்கிற தனிச்சொத்து சார்ந்த பார்வைக்கு எந்த இடமும் கிடையாதுஉனதுஎனது என்கிற பிரிவினையை தவிர்க்க உழைப்பாளர்கள் பழக வேண்டும். “நம் பிள்ளைகள்ரஷ்ய கம்யூனிச உழைப்பாளர்களின் பிள்ளைகள்” மட்டுமே உள்ளனர் என்பதை அவள் நினைவில் கொள்ள வேண்டும் (கொலோன்டாய் 1977).

இந்த புரிதல் கம்யூன்களில் வெளிப்பட்டன என்றும், அது கம்யூனிஸ்ட் பெண்களை வர்க்கப் போராட்டங்களில் ஈடுபட தூண்டியது என்றும் பல ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தோழர் உஷாதாய் டாங்கே (ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல தொழிற்சங்கவாதி). அவர் மே மாதம் 1929ல் தன்னுடைய மகள் ரோசா-வை பெற்றெடுத்த பின்னர், பம்பாய் ஆலை வேலைநிறுத்தத்தினால் (1929) தனது மகப்பேறு கால விடுப்பை துறந்து உடனடியாக வர வேண்டி இருந்ததை நினைவு கூர்ந்தார். அவரின் மகளை மற்ற அனைத்து வேலை நிறுத்தம் செய்யும் தாய்களும் பார்த்துக்கொண்டனர் என்றும், அதனால் அந்த மகள்   பல தாய்களும் பெரும் குடும்பமும் பெற்றார் என்றும் நினைவு கூர்ந்தார் (லூம்பா 2019, பக்.166). மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் பாரம்பரிய குடும்ப விலங்குகளை உடைத்தெறிவது கம்யூனிச வழக்கத்தின் விரும்பத்தக்க விளைவாக இருந்தது என்பதையும், இதை அடையாமல் கம்யூனிச இயக்கத்தின் அடித்தளத்தை கட்டியிருக்க முடியாது என்பதையும் காட்டுகின்றன. இந்த உத்தியின் பகுதியளவு வெற்றிக்கு ஆதாரம் பாரம்பரிய குடும்ப அமைப்புகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதே பெரும்பாலான கம்யூனிச பெண்களுக்கு போர்க்குணத்தின் அடிப்படையாக மாறியிருப்பது தான்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகளில், வர்க்கப் போராட்ட இயக்கங்களுக்குள்  பெண்களின் தலைமை வளர்ந்துவந்ததைக் கண்ணுற்றோம். அவ்வாறே, அந்தப் பெண்கள் தம் சொந்த வாழ்வில் சந்தித்த இன்னல்களால் எழுந்த தடைகளை எதிர்த்த போராட்டங்கள் வர்க்க அமைப்புகளுக்கு ஏற்றம் கொடுத்தன. உதாரணமாக, பம்பாய் ஆலை வேலை நிறுத்தத்தையும் (1929), சி.ஒ.பொன்னம்மா தலைமையிலான திருவாங்கூர் உழைப்பாளர் சங்க பொது வேலை நிறுத்தத்தையும் வழிநடத்திய உஷாதாய் டாங்கே, அப்போராட்டத்தில் ஈர்க்கப்பட்ட பெண்களின் பெரும் பங்கெடுப்பின் காரணமாக, மகப்பேறு கால உதவிகளை போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக முன் வைத்தார். மும்பையின் மஹிலா ஷர்மிக் சங்கம் என்ற அமைப்பின் பிரதான ஒருங்கிணைப்பாளராக இருந்த தலைசிறந்த தலைவர் அகில்யா ரங்நேக்கர் போல, பெண்களின் தலைமைத் திறனுக்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. 1940களில் வார்லி பழங்குடியினரின் எழுச்சிமிகு போராட்டத்தை வழிநடத்தி, பின்னாளில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவராகிய கோதாவரி பாருலேகர், சிட்டகாங்கில்  ஆயுதக் கிடங்கு தாக்குதலை நிகழ்த்திய போர்க்குணமிக்க பெண்களை வழிநடத்திய கல்பனா மற்றும் ப்ரிதிலதா, தெபாகா போராட்டத்தின் பொழுது நாச்சோலேவில் (கிழக்கு வங்கம்) சந்தால் எழுச்சியை வழிநடத்திய இலா மித்ரா (பஞ்சாபி 2017) போன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. மேலும், விவசாயி-தொழிலாளி வர்க்கங்களில் இருந்து வந்த பெண்கள் உழைக்கும் வர்க்க இயக்கத்தின் திசைவழியில் தாக்கத்தை ஏற்படுத்திய பலநூறு உதாரணங்களும் உள்ளன. 

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஆணாதிக்கத்திற்கு எதிரான சமூக சீர்திருத்தம் கைவிடப்படவில்லை என்பதைத்தான். உதாரணமாக, ஆந்திர மகாசபையின் (தெலுங்கானா எழுச்சிக்கு வித்திட்ட அமைப்பு) இளம் பெண்கள், பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும் குழந்தைத் திருமணங்களை தடை செய்யவும் பெரும் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர் (சுந்தரைய்யா 1972). இதே போன்ற பண்பு ஆலப்புழாவில் இளம் ஆண்களும் பெண்களும் சாதிய ஒடுக்குமுறைகளை ஒழித்து ஆணாதிக்கத்திற்கு எதிரான மாண்புகளை வளர்ப்பதில் எடுத்த முயற்சிகளிலும் வெளிப்படுகின்றன (வேலாயுதன் 1983). ஆணாதிக்கத்துக்கு எதிரான சமூக சீர்திருத்தத்திற்கும் மேலாக, பண்ணையார்களின் ‘வைப்பாட்டிகளை’ விடுதலை செய்து வன்புணர்வு, கடத்தல் போன்ற பாலியல் கொடுமைகளுக்கு எதிராக போராடவும் பெண்கள் ஒருங்கிணைந்தனர். தோழர்களையும் மகளிரையும் பாதுகாக்க பெண்கள் ஒருங்கிணைந்த இது போன்ற தருணங்கள் ஒவ்வொரு போர்குணமிக்க போராட்டங்களிலும் காணப்பட்டன. சில நேரங்களில், வார்லி எழுச்சியைப் போல், பண்ணையார்களின் நிலங்களையும் காட்டு மனைகளையும் ஆக்கிரமிக்கும் போராட்டங்களை பெண்கள் முன் நின்று வழிநடத்தினார்கள். இதுபோன்ற பல முக்கிய பணிகளை சாதித்த பெண் தோழர்கள், கம்யூனிச இயக்கத்தின் ஆணாதிக்க எதிர்ப்பு மாண்புகளை மேம்படுத்துவதில் தங்களின் தாக்கத்தை அதிகரித்தனர்.

Feminism now 'personal branding rather than revolutionary rhetoric' | RNZ  News

வர்க்க கண்ணோட்டம்

மேற்கூறிய விவாதங்களிலிருந்து முக்கிய கேள்வி எழுகிறது: சமூக மாற்றத்தையும், வளங்கள் மறுவிநியோகிப்படுவதையும் இலக்காக கொண்ட கம்யூனிச இயக்கங்கள் இயற்கையாகவே ஆணாதிக்க எதிர்ப்பு பண்புகள் கொண்டவையா? இதற்கு விடையளிக்க முயற்சித்தவர்களின்  ஒருவர் மரியா மியஸ்:

பாலின அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையை நாம் குடும்ப அமைப்பின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல்மொத்த சமூக அமைப்பின் பிரச்சனையாக அணுக வேண்டும்ஒவ்வொரு காலத்திலும்சமூகத்திலும் நிலவும் வர்க்க உறவுகளை உள்ளடக்கிய ஆதிக்க உற்பத்தி உறவுகளிலும்பரந்துபட்ட தேசியசர்வதேச உழைப்புப் பிரிவினையிலும்ஆண்பெண் இடையேயான படிநிலையான உழைப்புப் பிரிவினை ஒரு பிரிக்கமுடியாத முடியாத அங்கமாக உள்ளது (மியஸ் 1986, பக். 49) என்கிறார்.

இந்த ஆய்வின் அடிப்படையில், ஆணாதிக்கம் என்பது வர்க்க ஒடுக்குமுறை அடிப்படையிலான உறவுகளில் இயற்கையாகவே பதிந்திருக்கும் சமூக வடிவம் ஆகும். இதை மார்க்சும் ஏங்கல்சும் கூட அவர்களின் எழுத்துக்களில் விளக்கியுள்ளார்கள். எங்கெல்ஸ் விளக்கியது போல, முதலாளித்துவத்திற்கு முன்பே தோன்றியது தனிச்சொத்து; தனிச்சொத்து மீதான ஆதிக்கத்தின் வடிவங்கள் ஆணாதிக்கத்தின் பண்புகளை வடிவமைப்பதில் பங்காற்றின.

இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் தொடக்க  கால போராட்டங்களின் மூலம் ஆணாதிக்கத்தின் கோர முகம் அம்பலமாக்கப்பட்டது. தானே மாவட்டத்தின் ‘லங்கா காடி’ இயக்கம் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். பல மூத்த தலைவர்கள் கூறுவது போல், ‘லங்கா காடி’ பண்பாடு என்பது மேட்டுக்குடி பண்ணையார்களின் மிக்க கொடுமையான வர்க்க ஒடுக்குமுறை; திருமண சமயத்தில் கடனாளியாக ஆன சிறு விவசாயிகளுடைய மனைவியர்கள் அடிமைகளாக வைத்துக்கொள்ளப்பட்டனர். இந்த இயக்கத்தின் முக்கிய இலக்கே பண்ணையார்களின் வீட்டிற்குள்ளேயே சென்று பெண்களை விடுதலை செய்வது தான். இது கடந்த நூற்றாண்டின் மாபெரும் போராட்டம். ஆணாதிக்க எதிர்ப்பே இந்த வர்க்க போராட்டத்தின் அடிப்படையாக இருந்தது. கொடூரமான சமூக பண்பாட்டை ஒழித்துக்கட்டிய முக்கியப் போராட்டம் இது (பிரசாத் 2017, பக். 27). வர்க்க உறவுகளில் ஆணாதிக்கம் உள்ளடங்கி இருப்பதை கோதாவரி பாருலேகர் விரிவாக எழுதுகிறார்:

குத்தகை விவசாயிகள் மற்றும் கடனாளி அடிமைகளின் மனைவிகளை பண்ணையார்கள் தங்களின் தனிச்சொத்தாக கருதினர்அவர்கள் விரும்பும்போதெல்லாம் இந்த பெண்களை அனுபவிக்க அவர்களுக்கு பிறப்புரிமை இருப்பதாக உறுதியாக நம்பினர்அவர்களிடம் பணிபுரியும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதுஅவர்களை தொடுவதுகிள்ளுவதுதள்ளுவதுதனியே இழுத்துச் சென்று களங்கப்படுத்துவதுஅனைத்தும் அவர்களுக்கு சாதாரண வழக்கமாக இருந்தன… பண்ணையார்களும்வன ஒப்பந்ததார்களும் அவர்களின் இச்சைக்காக பெண்களை துன்புறுத்தினார்கள்பண்ணையார்கள் பழங்குடிப்  பெண்களை தகாத உறவினுள் தள்ளுவது எவ்வளவு சாதாரணமாக இருந்ததென்றால்இந்த தகாத உறவினால் பிறந்த குழந்தைகளுக்கு சிறப்பு சொல்லாடலே உருவாக்கப்பட்டது. “வட்லா” என்ற தனி சாதிப்பெயருடன் அவர்கள் அழைக்கப்பட்டனர்இந்துஇந்துஅல்லாத அனைத்து பண்ணையார்களுக்கும் இவ்வாறு பிறந்த வாரிசுகளுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

வர்க்க ஒடுக்குமுறையின் விளைவாக ஒரு புதிய சாதி உருவாக்கப்பட்டது, இங்கே அதிக கவனத்தை ஈர்க்கக் கூடியதாகும். வர்க்க ஒடுக்குமுறையின் பல வடிவங்களின் வெளிப்பாடே சாதிய ஆணாதிக்க முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பதை இது உணர்த்துகிறது. இது போல வர்க்க ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆணாதிக்கம் பயன்படுத்தப்பட்டதற்கான பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. பெண்கள் உழைக்கும் வர்க்கமாக்கப்படும்போது, அவர்கள் வீட்டிலும், பொது வெளியிலும் ஒடுக்கப்பட்ட வர்க்க நிலையில் இருந்தார்கள் என்பதையும் உள்ளடக்கிப் பார்க்க வேண்டும். எனவேதான் ‘மார்க்சிய எழுத்துக்களில்’ பெண் விடுதலை குறித்த பிரச்சனைகள், உழைக்கும் வர்க்க விடுதலையோடு நெருங்கிய தொடர்புடையவையாக அமைகின்றன. (கொலந்தாய் [1946] 2017; ஃப்ரெட்ரிக்கி 2004).

எதிர்ப்புப் போராட்டங்கள் மீதான முதலாளித்துவத்தின் கொடூரமான அடக்குமுறைகளில் ஆணாதிக்கத்திற்கும் வர்க்கத்திற்குமான நெருங்கிய தொடர்புகள் வெளிப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், வல்லுறவுகளும் எழுச்சிகளை முறியடிப்பதற்கான கருவிகளாக பயன்படுத்தப்பட்டன. வர்க்க அரசின் ஒடுக்குமுறையை பெண் போராளிகள் துணிவுடன் எதிர்கொண்டார்கள். ஒரு முக்கிய உதாரணத்தை சுத்தரைய்யா அளிக்கிறார்:

கார்லாவில்ஒரு 15 வயதுஇளம்பெண்பிடித்துவிசாரிக்கப்படுகிறார்: “வீட்டிலிருந்துஓடுவதுயார்” (அவர்அந்தவீட்டில்தஞ்சம்அடைந்தமுக்கியதோழர்). அப்பெண்உடனடியாகஅவர்தம்கணவரென்றும்போலீசால்அச்சமுற்றுஓடுவதாகவும்கூறினாள்போலீஸ்அவளைநம்பாமல்அவரைஅடித்துவன்புணர்வுக்குஆளாக்கினார்கள்அனால்அவள்எந்தஇரகசியத்தையும்சொல்லவில்லை (சுந்தரைய்யா 1972, பக். 255).

இலா மித்ரா சிறையிலடைக்கப்பட்டபோது, அவர் ஒரு பெண் என்பதையும், சந்தால் இனத்தைச் சேர்ந்தவர் என்பதையும் தொடர்ந்து போலீசார் நினைவுபடுத்திக் கொண்டே இருந்ததை பதிவு செய்துள்ளார்  (பஞ்சாபி 2017, பக். 200-01). 1940களின் மத்தியில், வார்லி போராட்டத்தின் பொழுது, பெண்கள் தற்காப்புப் படைகளை அமைத்து ஆண் தோழர்களை போலீசாரிடம் இருந்து காப்பாற்றிய பல தருணங்கள் உள்ளன. உதாரணமாக, கைது செய்யப்படுவதைத்  தவிர்க்க பகல் நேரங்களில் ஆண்கள் மலைகளிலும் காடுகளிலும் ஒளிந்து கொண்டபோது, பெண்கள் போலீஸ் அராஜகங்களை எதிர்கொண்டனர். அவர்கள் போலீசின் இருப்பிடத்தை பற்றி ஆண்களுக்கு இரகசியமாக தகவல் அனுப்பியதோடு, போலீசாரையும் குழப்பி விட்டனர். முக்கியமாக, அவர்கள் போலீசாரின் அராஜகத்தையும், பண்ணையார்களின் அராஜகத்தையும் எதிர்த்தனர் (பிரசாத் 2017, பக். 37). ஆணாதிக்க அதிகாரம், வர்க்க ஒடுக்குமுறையோடு பிணைந்த ஒன்றே என்பதை ஆரம்ப கால வர்க்கப் போராட்ட தன்மைகள் நமக்கு காட்டுகின்றன.

Pin von Ella Propella auf Kunst in 2020 | Feministische kunst, Feminismus,  Poster sprüche

கம்யூனிசத்தின் விடுதலைச் சிந்தனையே ஆணாதிக்கத் தன்மை கொண்டது என்று பெண்ணிய விமர்சகர்கள் வகைப்படுத்துகின்றனர் (பஞ்சாபி [2017] எ.கா. பார்க்க). அனால் அவர்கள் இந்த வரலாற்று உண்மைகளை கணக்கிலெடுக்க மறுக்கின்றனர். பெண்களின் ‘தனிப்பிரச்சனை’ அரசியலாக்கப்பட்டதாலும், ‘தனிப்பிரச்னை’ மற்றும் ‘பொதுப்பிரச்சனை’ இடையேயான எல்லைகளை கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான போராட்டங்கள் மங்கச் செய்தன. இவை பெண்களின் வாய்ப்புகளை அதிகரித்து, தடைகள் தாண்ட வழிவகுத்தது, கூடுதல் உரிமைகளுக்காக போராடவும் முடிந்தது. கம்யூனிச பெண்களின் சுயசரிதைகளும் அவர்கள்  கம்யூனிஸ்டுகளாக ஆன பொழுது எழுந்த தடைகளைப் பற்றியும், அவற்றை உடைக்க அவர்கள் பாரம்பரிய குடும்பங்களிலிருந்து வெளியேறி வந்ததைப் பற்றியும் கூறுகின்றன. இந்நேரங்களில் இயக்கமே அவர்களின் குடும்பமாக மாறியது, சுதந்திர அடையாளமும், இடமும் பெற வழிவகுத்தது (மரிக் 2013). 1940களில் துவங்கி அகில இந்திய மகளிர் மாநாட்டில் கம்யூனிச பெண்களின் உயிரோட்டமான பங்கேற்பும், பின் 1953ல் தேசிய இந்திய மகளிர் சம்மேளனம் உருவானதும் பெண்கள் இயக்கத்தில் வளர்ந்து வந்த கம்யூனிஸ்டுகளின் தாக்கத்தை உணர்த்துகின்றது. இவை அனைத்தும் பெண்களின் கோரிக்கைகளை, குறிப்பாக சம ஊதியம், குழந்தை மற்றும் மகப்பேறு கால நலன் போன்றவற்றை வர்க்க போராட்டத்தின் பரந்துபட்ட கட்டமைப்பினுள் கொண்டு வர கட்சியின் தலைமைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது  (ஆர்ம்ஸ்ட்ரோங் 2013, பக்.30-34). பெண்களுக்கான தனி அமைப்புகள் இந்த பணியை தொடர்ந்து செய்து வருகின்றன.

இவை அனைத்தையும் சொல்வது கம்யூனிஸ்ட் அமைப்புகளுக்குள் சவால்களே இல்லை என்ற புரிதலில் அல்ல. கம்யூனிச கோட்பாட்டாளர்கள் சமகால மார்க்சிய தத்துவக் கருவிகளை பயன்படுத்த வேண்டும். முதலாளித்துவ அமைப்பினில், (வர்க்கம் போன்ற) மேலிருந்து கீழான அதிகாரப் படிநிலைகளுக்கும், (ஆணாதிக்கம், சாதி போன்று) கிடை இருத்தப்பட்டுள்ள காரணிகளுக்கும் இடையிலான இயக்கவியல் அடிப்படையிலான கொடுக்க வாங்கலை ஆய்வு செய்திட வேண்டும். வர்க்கங்களின் உருவாக்கத்தின்போது, திட்டமிட்ட ஒடுக்குமுறைகள் இணைந்து முன்னெடுக்கப்பட்டதை விளக்கும் வகையில் சமூக மறு உற்பத்தி பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ‘குறுக்குவெட்டுத்தன்மை’ (‘intersectionality’) என்ற ஜனரஞ்சக கோட்பாட்டினால் இந்தப் பிரச்சனை விளக்கும்போது போதாமையே மிஞ்சுகிறது. ஏனென்றால் அது சமூக உற்பத்திக்கு வெளியே ஆணாதிக்கத்தை நிறுத்துகிறது. ( பார்க்க ஜான் [2014]). இதற்கு நேர்மாறாக, மார்க்சிய கோட்பாட்டின் சமகால வளர்ச்சிகளைக் கொண்டு இந்த உறவினைப் புரிந்துகொள்வதற்கான வழிமுறைகளை பெற முடியும். பொருளியல் வாழ்விற்கும், மேல் கட்டுமானத்திற்கும் இடைமுகத்தில் ஆணாதிக்கத்தை அது காண்கிறது. எனவே பல சிக்கலான உறவு நிலைகளையும் நாம் விளக்கிட முடியும். (உதாரணங்களுக்கு பார்க்க வோகெல் 2013, பட்டாச்சார்யா 2017)

மேற்சொன்ன நிலையில் தத்துவ ஆய்வினை வளர்த்தெடுக்க வேண்டும். அப்போது வர்க்கங்களின் உருவாக்கமும், மறு உற்பத்தி நடவடிக்கையும் ஆணாதிக்கம் மற்றும் இதர சமூக நிறுவனங்களால் தாக்கம் பெற்றிருப்பது பற்றி நமக்கு கூடுதல் தெளிவு கிடைக்கும். அவ்வாறான பயிற்சி ‘தீவிர’ பெண்ணியவாதிகளுக்கும், ‘சோசலிச/மார்க்சிய’ பெண்ணியவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் களைந்து முதலாளித்துவத்திற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டங்களை தீவிரப்படுத்த உதவிடும்.

மூலக்கட்டுரை: Feminism and Class Consciousness

தமிழில்: அபிநவ் சூர்யா

Tags: