ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கவனயீர்ப்பு போராட்டங்கள்
ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிக்கோரி நாட்டின் பல பகுதிகளிலும் இன்றைய தினமும் (24/07/2021) கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஹட்டன், யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இந்த கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி பொது அமைப்புக்கள் மற்றும் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
ஈரோஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் நகரில் காலை 11 மணியளவில் நடை பவனியாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், மணிகூட்டு கோபுரத்துக்கு முன்பாக அணி திரண்டு கோசமிட்டபடி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டமானது பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கிளிநொச்சியில் இன்று காலை 10 மணியளவில் பாரதிபுரம் சூசைபிள்ளை கடை சந்தியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம் ஆகிய கிராம மட்ட பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன.
அதேநேரம், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நீதி கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
திருகோணமலை பெண்கள் எனும் அமைப்பினால் இந்த போராட்டம் இன்று முற்பகல் அனுராதபுர சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.
ஹிஷாலினியை போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்று கொடுக்க அரசாங்கம் பின்வாங்க் கூடாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது :