புதிய களனி பாலத்தின் அழகு தோற்றம்

புதிய களனி பால திட்டத்திற்குரிய பாதைகளின் இருபக்கத்திலும் மற்றும் சுற்றுவட்டம் உட்பட நிலத்தை அழகுபடுத்துவதற்கு அடர்த்தியான சூழலுக்கு ஏற்ற தூசி மற்றும் வெப்பத்தைத் தாங்கும் தாவர இனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்- ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
இலங்கையின் முதல் உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மூலம் நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத் திட்டத்தின் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளையும், புதிய களனி பாலத்தின் முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி வரையான வீதியின்
இருபக்கத்தையும் அழகுபடுத்துவதற்காக தேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகளின் பரிந்துரைப்படி உகந்த தாவர இனங்களை நடுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, தேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகள் நீலோற்பலம், வாகை, மே மார, ரொபரோசியா, கஹ மார, செவ்வரத்தை, இலுப்பை மரம், நாகமரம்,அலரி, மகுல் கரட, ஆல மரம் மற்றும் முருத்த ஆகியவற்றை நடுவதற்கு முன்மொழிந்துள்ளனர்.
இவ்வாறு நடும் மரங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக நிலத்தடி தானியங்கி நீர் குழாய் கட்டமைப்பை உருவாக்ககுமாறு திட்டப் பணிப்பாளருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
செப்டம்பர் இறுதிக்குள் பொதுமக்களுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய களனி பாலம் திட்டத்தின் நிலப்பகுதியை அழகுபடுத்துவது தொடர்பில் சூம் (Zoom) தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டு இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
29.08.2021 அ ன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர்.பிரேமசிரி, வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைவர் சமிந்த அதலுவகே,திட்டப் பணிப்பாளர் தர்சிக்கா ஜயசேகர உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மர நடுகையின் பின்னரான தோற்றத்தை காட்டும் புகைப்படங்களை படத்தில் காணலாம்.


