ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்த டெல்லி விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது – வெற்றிப் பேரணி நடத்த முடிவு!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. வேளாண் விலை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு உறுதி செய்ததை தொடர்ந்து  போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. டெல்லி எல்லைகளில் விவசாயிகளால் போடப்பட்ட கூடாரங்களை அவிழ்த்துக்கொண்டு தங்களின் சொந்த ஊருக்குப் செல்ல விவசாயிகள் ஆயத்தமாகியுள்ளனர்.

வருகிற 11 ஆம் தேதி தங்களின் சொந்த கிராமங்களுக்குச் செல்ல விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். இன்று மாலை 5.30 மணிக்கு டெல்லியின் எல்லையில் உள்ள சிங்கு மற்றும் திக்ரி போராட்டத் தளங்களில் வெற்றி பேரணி செல்ல விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். பஞ்சாப் விவசாயத் தலைவர்கள் டிசம்பர் 13 ஆம் தேதி அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் வழிபாடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.  சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு டெல்லியில் டிசம்பர் 15 ஆம் தேதி வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யவுள்ளது.

சம்யுக்த் கிசான் மோர்ச்சாவில் உள்ள ஐவர் குழுவுக்கு ஒன்றிய அரசு வரைவு திட்டத்தை அனுப்பியுள்ளது. அதில் குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க முடிவு செய்து குழு அமைத்துள்ளது.  இந்தக் குழுவில் அரசு அதிகாரிகள், விவசாய வல்லுநர்கள் மற்றும் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் பிரதிநிதிகள் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் கைவிட ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. போராட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட  அனைத்து வழக்குகளும் உடனடியாக திரும்பப் பெறப்படும் என்று ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளது.

உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்கள் கொள்கை ரீதியில் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், பஞ்சாப் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளைப் பாதிக்கும் பிரிவுகள் குறித்து சம்யுக்த் கிசான் மோர்ச்சா  உள்ளிட்ட அனைத்து விவசாய சங்கங்களை கலந்தாலோசித்த பின்னரே மின்சார மசோதாவும் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது.

Source: NDTV
2021.12.09

பலமுனைகளில் வெற்றி பெற்ற விவசாயிகள் – அனைத்து முனைகளிலும் தோல்வியுற்ற ஊடகங்கள்

பி.சாய்நாத்

Activist Yogendra Yadav and Samyukta Kisan Morcha (SKM) leaders show victory sign after SKM announced to call off the farmers agitation, at Singhu border in New Delhi, Thursday, December 9, 2021.

டகங்களால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியாதது என்னவென்றால், பல ஆண்டுகளில் உலகம் கண்டிராத மிகப் பெரிய, அமைதியான ஜனநாயக எதிர்ப்பு – நிச்சயமாக தொற்றுநோயின் உச்சத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப் பெரிய போராட்டம் – ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்பதைத்தான்.

ஒரு பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்த வெற்றி. அனைத்து வகையான விவசாயிகள்,  ஆண்கள் மற்றும் பெண்கள் – ஆதிவாசி மற்றும் தலித் சமூகங்கள் உட்பட – நாட்டின் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். நமது சுதந்திரத்தின் 75 வது ஆண்டில், டெல்லியின் வாயிலில் விவசாயிகள் அந்த மாபெரும் போராட்டத்தின் உணர்வை மீண்டும் வலியுறுத்தினர்.

நவம்பர் 29-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், விவசாய சட்டங்களிலிருந்து பின்வாங்குவதாகவும்,  ரத்து செய்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ‘எவ்வளவு முயற்சி செய்தாலும் விவசாயிகளின் ஒரு பிரிவை’ இணங்கச் செய்யத் தவறியதால், அவ்வாறு செய்வதாக அவர் கூறுகிறார். மதிப்பிழந்த மூன்று வேளாண் சட்டங்கள் அவர்களுக்கு மிகவும் நல்லது என்பதை வெறும் ஒரு பிரிவினருக்கு,  நினைவில் கொள்க, அவரால் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியவில்லை என்கிறார்.  இந்த வரலாற்றுப் போராட்டத்தின் போது உயிரிழந்த 600 க்கும் மேற்பட்ட விவசாயிகளைப் பற்றியோ அல்லது அவர்களுக்காகவோ ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. அவரது தோல்வி,  அந்த ‘விவசாயிகளின் பிரிவினருக்கு’ வெளிச்சம் போட்டுக் காட்ட முடியாத,  தனது ஏற்றுக் கொள்ளச் செய்யும் திறமையின் தோல்வி மட்டுமே  என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.  இந்த எந்தவொரு தோல்வியும் சட்டங்களுடனோ அல்லது ஒரு தொற்றுநோய்க்கு நடுவிலும் அவரது அரசாங்கம் எவ்வாறு அவர்களைத் தாக்கியது என்பதோ இணைக்கப்படவில்லை.  நல்லது, காலிஸ்தானிகள்,  தேசவிரோதிகள், விவசாயிகள் வேடம் போடும் போலி ஆர்வலர்கள், மோடியின் குளிர்ச்சியான வசீகரத்திற்குத் தங்களை இணங்கச் செய்வதற்கு மறுத்தவர்கள் ‘விவசாயிகளின் ஒரு பகுதியினர்’ என்று பட்டம் பெற்றுள்ளனர்.  இணங்க  மறுத்தார்களா  என்ன? இணங்க வைத்தலின் முறை என்ன? அதனை  அரசு எவ்வாறு  நடைமுறைப் படுத்தியது?

அவர்களைத் தங்கள் குறைகளை விளக்க தலைநகருக்குள் நுழைய மறுத்ததன் மூலமா? அகழிகள் மற்றும் முட்கம்பி மூலம் அவர்களைத்  தடுப்பதன் மூலமா? அவர்களை தண்ணீர் பீரங்கிகளால் தாக்குவதன்  மூலமா? அவர்களின் முகாம்களை சிறிய வதைக் கூடங்களாக  மாற்றுவதன் மூலமா?  தங்கள் ஆதரவு ஊடகங்களைக் கொண்டு  ஒவ்வொரு நாளும் விவசாயிகளை  வில்லன்களாக  கொச்சைப்படுத்துவதன் மூலமா? அவர்கள் மீது – மத்திய அமைச்சருக்கோ அல்லது அவரது மகனுக்கோ சொந்தமான –  வாகனங்களை ஏற்றுவதன் மூலமா?  இதுதான் இந்த அரசாங்கத்தின் இணங்க செய்யும் யோசனையா ?  இவைகள்தான் அதன் ‘சிறந்த முயற்சிகள்’ என்றால்,  அதன் மோசமான முயற்சிகளை நாங்கள் வெறுக்கிறோம்.

பிரதமர் இந்த ஆண்டு மட்டும் குறைந்தது ஏழு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார் (சமீபத்திய  க்ளாஸ்கோ CoP26 போன்றது). ஆனால், டெல்லியின் வாயில்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைப் பார்க்க அவரது இல்லத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் கீழே இறங்கிச் செல்ல ஒருமுறை கூட அவருக்கு நேரம் கிடைத்ததில்லை.அது இணங்கச் செய்வதற்கான உண்மையான முயற்சியாக இருந்திருக்காதா? தற்போதைய போராட்டங்களின் முதல் மாதத்திலிருந்து,  ஊடகங்கள் மற்றும் பிறரிடமிருந்து,  அவர்கள் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்ற கேள்விகளால் நான் சரமாரியாகத் தாக்கப்பட்டேன்? விவசாயிகள்  அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளனர். ஆனால் தங்களின் இந்த அருமையான வெற்றி ஒரு முதல் படி என்பது அவர்களுக்கும் தெரியும். இரத்து செய்வது என்பது தற்போதைக்கு விவசாயிகளின் கழுத்தில் இருந்து கார்ப்பரேட் கால்களை  எடுப்பதைக் குறிக்கிறது – ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை முதல்  கொள்முதல், பொருளாதாரக் கொள்கைகளின் மிகப் பெரிய சிக்கல்கள் வரை,  இன்னும் பல சிக்கல்கள் இன்னும் தீர்வைக் கோருகின்றன.அரசாங்கத்தின் இந்த பின்வாங்கலுக்கும் இது  ஏதோ ஒரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடு போல, அடுத்த பிப்ரவரியில் நடக்கவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்க வேண்டும் என்று தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் சொல்கிறார்கள்.

நவம்பர் 3 அன்று அறிவிக்கப்பட்ட 29 சட்டமன்ற மற்றும் 3 நாடாளுமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி அதே ஊடகம் உங்களுக்கு எதுவும் சொல்லத் தவறிவிட்டது. அந்த நேரத்தில் தலையங்கங்களைப் படியுங்கள் – தொலைக்காட்சியில் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டதைப் பாருங்கள். ஆளும் கட்சிகள் வழக்கமாக இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவதைப் பற்றியும்,  உள்நாட்டில் சில கோபங்களைப் பற்றியும் அவர்கள் பேசினர் – மேலும் பாஜகவுடன் மட்டுமல்ல,  இதுபோன்ற பல அபத்தங்களைப்பற்றியும்  பேசினர்.அந்த தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தியதாக, சில தலையங்கங்கள் விவசாயிகளின் எதிர்ப்புகள் மற்றும் கோவிட்-19 தவறான நிர்வாகம் ஆகிய இரண்டு காரணிகள் பற்றி கூறுகின்றன.     மோடியின் நேற்றைய அறிவிப்பு, அந்த இரண்டு காரணிகளின் முக்கியத்துவத்தையும் அவர் குறைந்த பட்சம், கடைசியாகப் புத்திசாலித்தனமாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. விவசாயிகளின் போராட்டம் தீவிரமான மாநிலங்களில் தங்களுக்கு சில பெரிய தோல்விகள் நடந்துள்ளன என்பது அவருக்குத் தெரியும். ஆனால் ஒரு ஊடகம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில்தான் தோல்வி  என்றும், ராஜஸ்தான், ஹிமாச்சல் போன்ற மாநிலங்கள் தங்கள் பகுப்பாய்வில் காரணியாக இருக்க முடியாது என அதன் பார்வையாளர்களுக்குக் கிளிப்பிள்ளை போல் கூறிவருகிறது.

ராஜஸ்தானில் இரண்டு தொகுதிகளில் பாஜக அல்லது ஏதேனும் சங்பரிவார் அமைப்பு மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்ததை எப்போது நாம் கடைசியாகப் பார்த்தோம்?  அல்லது அதே போல  ஹிமாச்சலில் அவர்கள் மூன்று சட்டமன்றத்தையும் ஒரு நாடாளுமன்ற இடத்தையும் இழந்ததை எடுத்துக் கொள்ளலாமா? ஹரியானாவில், போராட்டக்காரர்கள் கூறியது போல், “சிஎம் முதல் டிஎம்”  வரை (CM TO DM- முதல்வர் முதல் நரேந்திர மோடி வரை) முழு அரசாங்கமும்” பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தது; விவசாயிகள் பிரச்சினைக்காக ராஜினாமா செய்த அபய் சவுதாலாவுக்கு எதிராக காங்கிரஸ் முட்டாள்தனமாக வேட்பாளரை நிறுத்தியது; மத்திய அமைச்சர்கள் பெரும் பலத்துடன் களமிறங்கிய இடத்தில் – பாஜக இன்னும் தோல்வியடைந்தது. காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழந்தார். ஆனால் கடந்த முறை சவுதாலா பெற்ற வாக்குகளில் சிறிது மொட்டையடிக்க முடிந்தது.  எனினும் அவர், 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விவசாயிகளின் போராட்டத்தின் தாக்கத்தை மூன்று மாநிலங்களும் உணர்ந்தன – கார்போ கிராலர்களைப் (Carpet Crawlers பாடலில் வருபவர்களை) போலல்லாமல்,  பிரதமர் அதைப் புரிந்துகொண்டார். மேற்கு உத்தரபிரதேசத்தில் நடந்த அந்த எதிர்ப்புகளின் தாக்கத்துடன், லக்கிம்பூர் கெரியில் நடந்த கொடூரமான கொலைகளின் சுய சேதமும் சேர்க்கப்பட்டது, மேலும் இன்னும் 90 நாட்களில் அந்த மாநிலத்தில் தேர்தல் வர உள்ளது. அவர் ஞான ஒளியைப்  பெற்றார்    2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு – எதிர்க்கட்சிகளுக்கு அதை எழுப்பும் உணர்வு இருந்தால் – மூன்று மாதங்களில் பாஜக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். NSS இன் 77வது சுற்று (தேசிய மாதிரி கணக்கெடுப்பு, 2018-19) விவசாயிகளுக்கு பயிர் சாகுபடியில் இருந்து வரும் வருமானத்தின் பங்கில் வீழ்ச்சியைக் காட்டுகிறது – விவசாயிகளின் ஒட்டுமொத்த வருமானத்தை இரட்டிப்பாக்குவதை  மறந்துவிடுங்கள். பயிர் சாகுபடியில் உண்மையான வருவாயின்  முழுமையான சரிவை இது காட்டுகிறது.

சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான அந்த உறுதியான கோரிக்கையை அடைவதை விட விவசாயிகள் உண்மையில் அதிகம் செய்துள்ளனர். அவர்களின் போராட்டம் 2004 இல் செய்தது போல், இந்நாட்டு அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது விவசாய நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. அந்த நெருக்கடியின் பெரிய பிரச்சினைகளின் மீதான போரின் புதிய கட்டத்தின் ஆரம்பம் இது. விவசாயிகள் போராட்டம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு முதல், மகாராஷ்டிராவின் ஆதிவாசி விவசாயிகள் நாசிக்கிலிருந்து மும்பை வரை 182-கிமீ பாதயாத்திரையாக வியக்க வைக்கும் வகையில் தேசத்தை மின்மயமாக்கியது. அதுவும் கூட, அவர்கள் ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்றும், உண்மையான விவசாயிகள் அல்ல என்றும், மீதமுள்ள அரைகுறை உளறல்களாலும் அவதூறு செய்யப்பட்டது அவர்களது நீண்ட பயணம் அவர்களை இகழ்ந்தவர்களை விரட்டி அடித்துவிட்டது.    இன்று இங்கு பல வெற்றிகள் உள்ளன. கார்ப்பரேட் ஊடங்கங்களை  எதிர்த்து விவசாயிகள் எடுத்த மதிப்பெண் ஒன்றும் குறைந்தது இல்லை. பண்ணை பிரச்சினையில் (மற்ற பலவற்றில்), அந்த ஊடகம் கூடுதல் சக்தி AAA பேட்டரிகளாக (Amplifying Ambani Adani+) செயல்பட்டது. டிசம்பருக்கும் அடுத்த ஏப்ரல் மாதத்திற்கும் இடையில், உண்மையான இந்திய (சொந்தமான மற்றும் உணர்ந்த) பத்திரிகைகளின் தொடக்கம் என்று சொல்லக்கூடிய இரண்டு சிறந்த பத்திரிகைகள் வெளியான (இரண்டும் ராஜா ராம்மோகன் ராயால் தொடங்கப்பட்டது ) 200 ஆண்டுகளைக் கொண்டாடுவோம். அதில் ஒன்றான மிராத்-உல்-அக்பர்,  கொமிலாவில் (தற்போது வங்க தேசத்தில் உள்ள சிட்டகாங்கில் உள்ளது) பிரதாப் நாராயண் தாஸை ஒரு நீதிபதி  சாட்டையடியில் கொல்ல உத்தரவிட்டது குறித்த ஆங்கில நிர்வாகத்தை,  அம்பலப்படுத்தியது. ராயின் சக்திவாய்ந்த தலையங்கம், அந்த  நீதிபதியை அப்போதைய உச்ச நீதிமன்ற விசாரணைக்கு இழுத்துச் சென்றது. இதற்கு பதிலளித்த கவர்னர் ஜெனரல் பத்திரிகையாளர்களை பயமுறுத்தினார். கொடூரமான ஒரு புதிய பத்திரிக்கை ஆணையை அறிவித்து,  பத்திரிகைகளை மண்டியிடச் செய்ய முயன்றார். இதற்கு அடிபணிய மறுத்த ராய்,  இழிவுபடுத்தும், அவமானப்படுத்தும் சட்டங்கள்,  சூழ்நிலைகளுக்கு அடிபணிவதை விட மிராத்-உல்-அக்பரை மூடுவதாக அறிவித்தார். (மற்றும் மற்ற பத்திரிக்கைகளுக்கு அவரது போரை எடுத்துச் சென்றார்!)அதுதான் துணிச்சலான  இதழியல். விவசாயிகள் பிரச்சினையில் நாம் பார்த்த குரோனி தைரியம் மற்றும் சரணாகதி பத்திரிகை அல்ல. கையொப்பமிடாத தலையங்கங்களில் விவசாயிகளைப் பற்றிய ‘கவலை’யுடன் தொடர்ந்து,  அதே சமயம் கருத்துரை பக்கங்களில் பணக்கார விவசாயிகள் ‘பணக்காரர்களுக்காக சோசலிசத்தைத் தேடுகிறார்கள்’ என்று அவர்களைத் திட்டினார்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா உட்பட ஏறக்குறைய அனைத்துத் செய்தித்தாள்களும், முக்கியமாக,  இவர்கள் கிராமப்புறவாசிகள் என்று ஏளனமாகக் கூறி,  அவர்களிடம் இனிமையாக மட்டுமே பேச வேண்டும் என்றன. தலையங்கங்கள்  மேல்முறையீட்டில் முடிவடைந்தன: ஆனால் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டாம்,  அவை மிகவும் நல்லவை என்றன. பெரும்பாலான ஊடகங்களுக்கும் இது பொருந்தும். முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பான  84.5 பில்லியன் டாலர்கள் (ஃபோர்ப்ஸ் 2021) பஞ்சாப் மாநிலத்தின் ஜிஎஸ்டிபிக்கு (சுமார் 85.5 பில்லியன்) மிக வேகமாக நெருங்கி வருகிறது என்பது  பற்றி விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள முட்டுக்கட்டை பற்றி இந்தச் செய்தித்தாள்கள் ஏதேனும் ஒருமுறை தங்கள் வாசகர்களிடம் கூறியதுண்டா? அம்பானி மற்றும் அதானியின் ($50.5 பில்லியன்) சொத்து பஞ்சாப் அல்லது ஹரியானாவின் ஜிஎஸ்டிபி யை விட அதிகமாக இருப்பதாக அவர்கள் ஒருமுறை உங்களிடம் சொன்னார்களா?  நல்லது,  நியாயப்படுத்தும் சூழ்நிலைகள் உள்ளன. அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய ஊடக உரிமையாளர். அவருக்கு சொந்தமில்லாத ஊடகங்களில்,  ஒருவேளை மிகப் பெரிய விளம்பரதாரர். இந்த இரண்டு கார்ப்பரேட் செல்வந்தர்களின் செல்வம் பொதுவாக ஒரு கொண்டாட்ட தொனியில் அடிக்கடி எழுதப்படுகிறது. இதுதான் தவழ்ந்து வந்து காலில் வந்து விழச் செய்யும் இதழியல் கலை.

இந்த பின்வாங்கும் தந்திரமான உத்தி – பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஏற்கனவே கூச்சலாக உள்ளது. தான் காங்கிரஸில் இருந்து விலகி மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் கிடைத்த வெற்றி என்று அமரீந்தர் சிங் கூறியுள்ளார். இது அங்குள்ள கருத்துக்கணிப்பு வரைபடத்தை மாற்றிவிடும். ஆனால், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட, அந்த மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு அது யாருடைய வெற்றி என்பது தெரியும். பஞ்சாப் மக்களின் இதயங்கள், பல பத்தாண்டுகளில் டெல்லியின் மோசமான குளிர்காலம், கொளுத்தும் கோடை, அதன்பிறகு மழை, மற்றும் திரு. மோடி மற்றும் அவரது சிறைபிடிக்கப்பட்ட ஊடகங்களின் பரிதாபகரமான சிகிச்சையை எதிர்கொண்ட போராட்ட முகாம்களில் இருப்பவர்களுடன் உள்ளன. எதிர்ப்பாளர்கள் சாதித்த மிக முக்கியமான விஷயம் இதுதான்:  தன்னை எதிர்ப்பவர்களை வெறுமனே சிறையில் தள்ளும் அல்லது விரட்டி, வேட்டையாடி அவர்களைத் துன்புறுத்தும்,  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்கள் உட்பட குடிமக்களை சுதந்திரமாக கைது செய்யும்,  ‘பொருளாதார குற்றங்களுக்காக’ சுதந்திரமான ஊடகங்களை ஒடுக்கும், ஒரு அரசாங்கத்திற்கு எதிராக மற்ற துறைகளிலும் எதிர்ப்பைத் தூண்டுவதற்கு இது ஊக்குவித்துள்ளது.     இது விவசாயிகளுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. இது சிவில் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான போருக்கு கிடைத்த வெற்றி. இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.

மூலம்: Farmers Win on Many Fronts, Media Fails on All

Tags: