Year: 2021

தாராளமயமாக்கத்தை தமிழ்நாடு எப்படி பயன்படுத்திக் கொண்டது?

புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 1991க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 7 சதவீதம் வளர்ச்சியடைந்தது. இது அகில இந்திய சராசரியைவிட அதிகம். விவசாயத்திலிருந்து வேறு பணிகளைச் சார்ந்திருப்பது...

சிறுமி ஹிஷாலினிக்கு நடந்துள்ள கொடுமைகள் தொடர்பாக வெளிவரும் தகவல்கள்!

வீட்டுப் பணிக்கு அமர்த்தப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு மற்றும் அச்சிறுமிக்கு இழைக்கப்பட்டதாக கூறப்படும் பலவிதமான கொடுமைகள் தொடர்பான தகவல்கள் நாளும் பொழுதும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சிறுமி ஹிஷாலினிக்கு நடந்துள்ள கொடுமைகள் தொடர்பாக பொலிஸ் விசாரணையில் வெளிவருகின்ற தகவல்கள்...

அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்திலுள்ள தமிழ்மொழியுரிமை அலட்சியப்படுத்தப்படுவது ஏன்?

இந்நாட்டில் நிலவிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமுகமாக அண்டை நாடான இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திருத்தம் இலங்கை அரசின் விருப்புடனோ அல்லது...

‘காந்தியைத் துளைத்த குண்டுகளுக்கு மிக அருகிலிருந்த என் அப்பா!’ – கல்யாணத்தின் நினைவுகள் பகிரும் மகள்

23 வயசுதான் அப்போ அப்பாவுக்கு. காந்தி சுடப்பட்டபோது கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தார். உடனே அங்கேயிருந்த ஒருத்தர்கிட்ட சைக்கிளை கேட்டு வாங்கிட்டு சர்தார் வல்லபபாய் பட்டேலுக்கும் நேருவுக்கும் இவர்தான் நேர்ல போய் தகவல் சொன்னார்" என்று...

சீர்திருத்தங்கள் மக்கள் நலனை மையமாகக் கொண்டிருக்கவேண்டும், மாறாக கொள்ளை லாபம் ஈட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கக்கூடாது.

கடந்த முப்பதாண்டுகளாக உலக அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி பின்பற்றப்பட்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்கள் மக்களின் வயிற்றில் அடித்தும், வறுமையை அதிகரித்தும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மிகவும் வேகமான முறையில் விரிவுபடுத்தியும், அனைத்து நாடுகளிலும் உள்நாட்டுத்...

டயகம சிறுமி ஹிஷாலினியின் பெயரை சிங்களத்தில் மாற்றி கொடுத்த மாமா!

சகோதரன் பார்த்தபோது, மண்ணெண்ணெய் போத்தல் கதவுக்கு அருகில் இருந்துள்ளது.  பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போகும் போது, கட்டிலின் மேல் அந்தப் போத்தல் இருந்துள்ளது. “சொக்கோ” அதிகாரிகள் (பொலிஸ் தடயவியல் அதிகாரிகள்) செல்கையில், அதே...

கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக ‘உருவாக்கப்பட்ட’ சர்ச்சை

இந்த உலகம் பரிணாம வளர்ச்சியால் உருவானதா அல்லது படைக்கப்பட்டதா என்ற மிகவும் பிரபலமான கேள்விக்கு நீண்ட காலத்திற்கு முன்பே பரிணாமத்திற்கு ஆதரவாகவும், மதவெறிக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. இருந்த போதிலும் அந்தப் பழைய...

பெகாசஸ்: உளவுப் போரின் ஆயுதம்

இந்தியாவைப் பொறுத்தவரை தேசத்தின் இறையாண்மை, பாதுகாப்பு போன்றவற்றை முன்னிட்டு, உளவு பார்ப்பதை சட்டம் அனுமதித்திருந்தாலும் சாதாரணக் குடிமக்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க் கட்சியினர் போன்றோரை உளவு பார்ப்பதைச் சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனாலும், அரசுகள் சட்டத்தைப் பொருட்படுத்தியதில்லை....

‘தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமலாக்கப் பிரிவின் செயற்பாடுகள் வெட்கத்துக்குரியன’ – ப்ரனிதா வர்ணகுலசூரிய

ரிஷாட் வீட்டில் மண்ணெண்ணை எப்படி வந்தது. தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமியின் முகம் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தலையில் தீக்காயங்கள் இல்லை. தற்கொலை செய்துகொள்பவர்கள், தலையில் மண்ணெண்ணையை ஊற்றாமல் கவனமாக, உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு...

‘சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடுகிறோம்’: தோழர் என்.சங்கரய்யா

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மதுரை நகரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்த அந்த இளைஞன். தனது இளமைக் காலத்தின் கனவுகளை உதறி எறிந்துவிட்டு, பற்றி எரியும் சுதந்திரத் தீயில் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு, மூன்று ஆண்டுகள்...