யூலியன் அசாஞ்சேயை விடுவிக்கக் கோரி ஆயிரக்கணக்கானோர் மகஜர்!

விக்கி லீக்ஸ்’ நிறுவனர் யூலியன் அசாஞ்சேயை (Julian Assange) விடுவிகக் கோரி அமெரிக்காவிலுள்ள ஐக்கிய தேசிய யுத்த எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமையில் 26 இற்கும் மேற்பட்ட யுத்த எதிர்ப்பு குழுக்களும், 2,500 தனி நபர்களும் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

யூலியன் அசாஞ்சே ‘விக்கி லீக்ஸ்’ (WikiLeaks) என்ற தகவல் அமைப்பை நிறுவி அமெரிக்காவும் அதன் மேற்குலகக் கூட்டாளிகளும் மற்றைய நாடுகளுக்கு எதிராகவும், தமது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகவும் செய்து வந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை உலகிற்கு அம்பலப்படுத்தி வந்தார். குறிப்பாக, அமெரிக்கா, ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான், குவண்டநாமோ சிறைச்சாலை போன்ற இடங்களில் மேற்கொண்ட கொடூரமான மனித உரிமை மீறல்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருந்தார். இதைப் பொறுக்காத ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், அசாஞ்சே அமெரிக்காவில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டைச் சுமத்தி அவர் மீது தண்டனை வழங்குவதற்கு முயற்சித்தது. ஒரு ஊடகவியலாளர் உண்மைத் தகவல்களை வெளியிட்டதற்காக அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை எனக் கூறப்படுகிறது.

அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவரைக் கைது செய்யும் முயற்சிகள் ஆரம்பமான போது, அவர் பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள தென்னமரிக்க நாடான ஈகுவடோரின் (நுஉரயனழச) தூதராலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்தார். பல மாதங்கள் அங்கு தங்கியிருந்த அவரைக் கைது செய்ய பிரித்தானியப் பொலிசார் தூதரகத்துக்கு வெளியே கூடாரமடித்து பல மாதங்கள் இரவு பகலாகக் காவல் இருந்தனர். அமெரிக்கா ஈகுவடோர் நாட்டுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த வந்ததால், அந்த நாடு அசாங்கேக்கு வழங்கி வந்த அடைக்கலத்தை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அசாஞ்சே பிரித்தானியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரித்தானியாவின் அதியுச்ச பாதுகாப்பு நிறைந்த பெல்மார்ஸ் (Belmarsh) சிறையில் அடைக்கப்பட்ட அசாஞ்சே, அங்கு 1,000 நாட்களுக்கு மேல் கழித்துவிட்டார். அவர் மீது பிரித்தானியாவில் வழக்கு நடந்து, அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து அசாஞ்சே மறு விசாரணைக்கு விண்ணப்பம் செய்திருப்பினும், மறு விசாரணையில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்பதில் நிச்சயமில்லை. ஏனெனில், நாடு கடத்தல் தீர்ப்பை வழங்கியவர் பிரித்தானியாவின் மிகவும் அதி சிரேஸ்ட நீதிபதி.

இந்த நிலைமையில், அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவர் மீது பல நூறு ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலேயே எஞ்சிய வாழ்நாட்களைக் கழித்து இறந்து விடுவார் என அஞ்சப்படுகிறது. இந்த நிலைமையில்தான், அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் அவரை விடுதலை செய்யக் கோரி நீதித்துறை நடவடிக்கைகளுக்குப் புறம்பாக மக்கள் இயக்கங்கள் நடைபெறுகின்றன.

இந்த இயக்கங்களின் ஒரு பகுதியாகத்தான், அமெரிக்காவிலுள்ள பல வெகுஜன அமைப்புகளும், சுமார் 2,500 தனி நபர்களும் இணைந்து கையெழுத்திட்டு அசாஞ்சேயை விடுதலை செய்யக் கோரி மனு அளித்துள்ளனர். இந்த மகஜரில் கையெழுத்திட்டவர்களில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான அலிஸ் வோல்கர் (Alice Walker) உட்பட அமெரிக்க சமூகத்தின் செல்வாக்கு மிக்க பல பிரமுகர்களும் அடங்குவர். (அலிஸ் வோல்கர் ‘அசாஞ்சே பாதுகாப்பு குழு’வின் இணைத் தலைவராகவும் இருக்கின்றார்)

அமெரிக்காவிலுள்ள பின்வரும் அமைப்புகளும்; தனி நபர்களும் அசாங்கேயை விடுவிக்கக் கோரும் மனுவில் கைச்சாத்திட்டுள்ளன(ர்).

United National Antiwar Coalition (UNAC), United for Peace and Justice (UFPJ), ANSWER coalition, Code Pink, Black Alliance for Peace, International Action Center, U.S. Peace Council, Veterans For Peace, Women’s International League for Peace and Freedom U.S. (WILPF US), World Beyond War, Global Network Against Weapons and Nuclear Power in Space, Popular Resistance, Alliance for Democracy, Ban Killer Drones, People’s Opposition to War, Imperialism and Racism, Free Palestine Movement, International Solidarity Movement (Northern Calif.), Palestine Children’s Welfare Fund, Syria Solidarity Movement, NakbaTour, Resumen Latinoamericano, One State Assembly, Association for Investment in Popular Action, Upstate NY Coalition to Ground the Drones and End the Wars, Hamilton Coalition to Stop the War, Sanctions Kill Coalition.

Individuals: Margaret Kimberley, Ann Wright, Ajamu Baraka, Medea Benjamin, Gerry Condon, Joe Lombardo, Kathy Kelly, Cindy Sheehan, Margaret Flowers, Bahman Azad, Sara Flounders, David Swanson, Brian Becker, Jeff Mackler, Jodie Evans, Bruce Gagnon, Nancy Price, Darien De Lu, Cassia Laham, Judy Bello, Rhonda Ramiro.

ஆனால், அசாஞ்சேயை விடுவிக்கக் கோரி எவ்வளவு பெரிய மக்கள் இயக்கங்கள் நடந்தாலும், ‘மனித உரிமைகளுக்கு’ பேர்போன அமெரிக்காவும் அதன் நெருங்கிய கூட்டாளி நாடான இங்கிலாந்தும் அதற்குச் செவிசாய்ப்பார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

Tags: