இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது, நவம்பர் 14 பொதுத்தேர்தல்
செப்டம்பர் 24, 2024
இலங்கைப் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்கவின் கையெழுத்துடனான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியானது.
அதற்கமைய இன்று (24.09.2024) நள்ளிரவுடன் 9ஆவது பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்று, புதிய பாராளுமன்ற அமர்வு நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகும்.
ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் வேளையில், தாம் ஜனாதிபதியாக பதவியேற்றதும் உடனடியாக பாராளுமன்றத்தை கலைப்பதாக, அநுர குமார திஸாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.