ஆறாவது ஆண்டில் தடம் பதிக்கும் எமது இணையத்தளம்

ன்றுடன் ‘சக்கரம்’ இணையத்தளம் ஆறு ஆண்டுகளை பூர்த்தி செய்கின்றது. கடந்த ஆறு ஆண்டுகளாக வாசகர்கள் மற்றும் நண்பர்களாகிய உங்கள் ஆதரவின்றி இந்த இணையத்தளத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியாது. எனவே வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் எங்கள் நன்றிகள். அதேபோன்று இத்தளத்தில் வெளியாகும் கட்டுரைகளினது ஆசிரியர்களுக்கும், மறுபிரசுரங்களின் மூல ஊடகங்களுக்கும் நாங்கள் நன்றிகளைச் செலுத்துகின்றோம்.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி பெற்ற தினமே மே தினம் ஆகும். இந்த நாளை உலகெங்கிலும் தொழிலாளர்கள் பலரும் வெற்றி நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். அதேபோலவே நாங்களும் ஆறு ஆண்டு காலத்திற்கு முன்னர் ‘சக்கரம்’ இணையத்தை ஆரம்பித்து, இந்த நாளில் மேதினத்தையும் எமது இணையம் ஒவ்வொரு ஆண்டாகக் கால்பதிப்பதையும் இணைத்துக் கொண்டாடி வருகின்றோம்.

உழைப்போம், உயர்வோம். மனிதராய்ப் பிறந்த அனைவரும் கடுமையான உழைப்பின் மூலமே அன்றாட வாழ்வினை நகர்த்திச் செல்கின்றனர். ஆதலால் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இனிய மேதின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது இணையத்தளத்திற்கு தினமும் வாருங்கள், வாசியுங்கள், அத்தோடு எமது இணையத்தை ஏனையவர்களோடு பகிர்ந்தும் கொள்ளுங்களென நாங்கள் அன்போடு வாசகர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

–ஆசிரியர் குழு

Tags: