இலங்கையின் குண்டுத் தாக்குதல்களுடன் சவூதி அரேபியாவுக்கு தொடர்பா?

ண்மையில் கசிந்துள்ள ஒரு இரகசிய ஆவணத்தின்படி இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று (ஏப்ரல் 21) நடத்தப்பட்ட பயங்கரவாத வெடிகுண்டுத் தாக்குதல்களுடன் சவூதி அரேபியாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில், சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இப்ராகிம் பின் அப்துல் அஸீஸ் அல் – அசஃப் ( Ibrahim bin Abdul Aziz al – Assaj’s ) அவர்களினால் இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நசீர் அல் – ஹெரேதீக்கு (யுடினரட யேளளநச யட – ர்யசநவாi) அனுப்பப்பட்ட ‘அவசரம், அந்தரங்கமானது, உயரிய இரகசியம்’ எனத் தலைப்பிடப்பட்ட ஒரு ஆவணத்தில் சில முக்கியமான தகவல்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த ஆவணத்தில் உள்ளடங்கியுள்ள தகவல்களை லெபனானிய அல் – அஹெட் செய்தி இணையத்தளம் ( Al – Ahed news Website ) வெளியிட்டுள்ளது.

“சவூதியின் கைகளில் இலங்கையர்களின் இரத்தம் – ஆவணம்” என்ற தலைப்பில் இந்த விடயம் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆவணத்தில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பிலுள்ள சவூதி தூதுவருக்கு சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். அவையாவன:

“முதலாவது: நீங்கள் எல்லா ஆவணங்களையும், கணினி தரவுகளையும், உள்ளுர் மற்றும் வெளிநாட்டு குழுக்களுடனான ஆகப்பிந்திய தொடர்புகளையும் அழித்துவிடுவதுடன், தூதரகத்திலுள்ள ஆட்களுக்கு இதன் அவசியம் பற்றிய உத்தரவையும் பிறப்பிக்கவும்”.

“நீங்கள் சவூதி அரேபியாவுடன் தொடர்புடைய கவுன்சிலர்கள், பாதுகாப்புப் படையினர், புலனாய்வுப் பிரிவினர் ஆகியோருக்கு அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, குறிப்பாக ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் போன்ற அதிக மக்கள் கூட்டமுள்ள இடங்கள், மற்றும் பொது இடங்களில் பிரசன்னமாவதைத் தவிர்க்கும்படி அறிவிக்க வேண்டும்”.

“மூன்றாவது: நீங்கள் இலங்கை அதிகாரிகள் பற்றியும், அவர்களது கண்ணோட்டங்கள் குறித்தும், இந்த அமைச்சுக்கு ஒழுங்குமுறையாக எழுத்துமூலமான செய்திகளை அனுப்ப வேண்டும்”.

இவ்வாறு சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் கொழும்பிலுள்ள தனது நாட்டுத் தூதுவருக்கு அறிவித்துள்ளதாக லெபனானிய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

Tags: