இலங்கை கல்வி அமைச்சு ஐ.தே.கவின் தொழில் வங்கியாக மாறியுள்ளது!

இலங்கை ஆசிரிய சங்கம் குற்றச்சாட்டு!!

Afbeeldingsresultaat voor ceylon teachers union general secretary
ஜோசப் ஸ்டாலின்

லங்கை கல்வி அமைச்சு 1000 மாணவர்களுக்கு மேல் கல்வி பயிலும் 984 பாடசாலைகளில் புதிதாக பதிவாளர் என்ற பதவியை உருவாக்கி அவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை ஆசிரிய சங்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

“நாட்டில் உள்ள 353 தேசியப் பாடசாலைகளில் 302 பாடசாலைகள் நிரந்தர அதிபர் இன்றி இயங்குகின்றன. இவற்றுக்கு அதிபர்களை நியமிப்பது குறித்து அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கல்வி அமைச்சில் நிலவும் ஊழல் காரணமாக இந்நியமனங்கள் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன. இந்நிலையில் புதிதாக பதிவாளர் பதவியை உருவாக்கி அதில் தமது ஆட்களை நியமிக்க ஐ.தே.க. நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கடந்த மே மாத நடுப்பகுதியில்தான் கல்வி அமைச்சு 3,850 ஐ.தே.க. ஆதரவாளர்களை விளையாட்டு பயிற்சியாளர்களாக நியமித்தது.

இதுதவிர, ஏராளமான காவலாளிகளையும் பாடசாலைகளில் தனது கட்சி ஆதரவாளர்களைக் கொண்டு நிரப்புவதற்கு ஐ.தே.க. நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் கல்வி அமைச்சு ஐ.தே.கவின் தொழில் வங்கியா என்ற கேள்வியை எழுப்புகின்றன” எனத் தெரிவித்தார்.

Tags: