கலாநிதி ராஜனி திராணகம நினைவுப் பேருரை – 2019
21 செப்டெம்பர்1989 மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக உடற்கூற்றியல் துறை தலைவரும், சமூக செயற்பாட்டாளரும், முறிந்த பனை புத்தகத்தின் சக ஆசிரியருமான கலாநிதி ராஜனி திராணகம துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். முப்பது வருடங்களுக்குப் பிறகு அவரின் தூர நோக்கு, பணிகள் ஆகியவற்றை நினைவுகூருகின்றோம்.
கலாநிதி ராஜனி திராணகம நினைவுப் பேருரை
இன்று இலங்கையில் ஒரு முஸ்லிம்:
ஈஸ்டர் ஞாயிறு வெடிப்புகளுக்குப் பின்னர் சிறுபான்மை அடையாளங்களும் ஜனநாயக வெளிகளும்
உரையாளர்:
கலாநிதி பர்சானா ஹனீபா
சிரேஸ்ட விரிவுரையாளர், சமூகவியல் துறை,
கொழும்பு பல்கலைக் கழகம்
21 செப்டெம்பர் 2019 – சனிக்கிழமை
பிற்பகல் 4 மணி
ரிம்மர் மண்டபம், வேம்படி வீதி, யாழ்ப்பாணம் (மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில்)
உரையினை அடுத்து தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
ராஜனி திராணகம ஞாபகார்த்தக் குழு
தொடர்பு இலக்கம்: 0759179499
மின்னஞ்சல்: rajanithiranagamamemorial2019@gmail.com